‘சலங்கை நர்த்தனாலயா நுண்கலை அமைப்புத் தொடர்ந்து வருடந்தோறும் ‘சலங்கைகளின் சங்கமம்’ நிகழ்ச்சியை முன்னெடுத்து 25 வருடங்களை பூர்த்திசெய்திருப்பது பாராட்டுக்குரிய விடயம். கணபதி வந்தனம், கவித்துவம், கீர்த்தனம், நவீன வடிவில் அமைந்த வித்தியாசமான பூ நடனம், கிருஷ்ண பஜனை, செம்பு நடனம், குறத்தி நடனம், சிவஸ்துதி நடனம், தில்லானா என நாட்டியத்தின் பல்வேறு வடிவங்களை இந்த மேடையில் நடன ஆசிரியர்கள், அவர்களின்; மாணவர்களென தொடர்ச்சியாக முன்னெடுப்பதை சிறந்த ஒரு நாட்டியக் கலையின் வளர்ச்சியாக என்னால் அவதானிக்க முடிகின்றது’ என கீழைத்தேச நுண்கலை அமைப்பின் தலைவியும் ( ழுநுடீடு), நாட்டியக் கோகிலவாணியுமான ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் லண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் இடம்பெற்ற வெள்ளிவிழா நாட்டிய நிகழ்வின்போது தனது பிரதமவிருந்தினர் உரையில் தெரிவித்தார்.
அவர் மேலும் தனது பேசுகையில்; ‘நாட்டிய ராஜேஸ்வரி நர்த்தனம் பட்டம் பெற்ற ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா நாட்டியத்தில் புதிய புதிய வடிவங்களைக் கையாண்டு மாணவர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தி, நாட்டிய நாடங்களையும் இணைத்து புதியரசனையில் உட்படுத்திவிடுவது மகிழ்ச்சிக்;குரிய விடயம். அந்த வகையில் இன்றைய ‘பார்வதி பரியம்’ என்ற நாட்டிய நாடகத்தின் மூலம் புராணக்கதையுருவத்தை கண்முன் நிறுத்திய கலைஞர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். ‘மாயா’ நடனக்குழுவை பாங்களுரில் நடாத்தி வரும் பாங்களுர் நாட்டியக் கலைஞரான கே.சி. ருபேஷ் சிவனாகவும், ஜெயந்தி யோகராவின் அன்பு மகளான நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜா பார்வதியாகவும் இணைந்து வழங்கிய காட்சிகள் மிகவும் பாராட்டுக்குரிய காட்சிகளாக அமைந்திருந்தன. அவர்களுடன் இணைந்து பல்வேறு பாத்திர வடிவங்களை சலங்கைகளின் சங்கமம் நுண்கலை அமைப்பின் தலைவி நாட்டிய விசாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவும், அந்த அமைப்பின் ஆரியர்கள் மாணவர்கள் என 30 இற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இணைந்து சிறப்பித்தமை புத்துணர்வு தரும் புதிய முயற்சி’ என மேலும் அவர் தெரிவித்தார்.