முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6 நூற்றாண்டு வரை இருந்து பதினெட்டு நூல்களைத் தோற்றுவித்தது.கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர். இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் காணப்படும் கல்விப் பற்றிய சிந்தனைகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்விக்கு அகராதி தரும் விளக்கங்கள்
கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான என்பதற்குத் EDUCATION தேர்ச்சி,படிப்பு,கல்விப்பயிற்சி, வித்தை,சிட்சை,பழக்கம் என வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி’ விளக்கமளிக்கிறது.(ப.420)
தமிழ் – தமிழ் அகரமுதலி கல்வி என்பதற்கு அறிவு,வித்தை,கற்கை, கற்கும் நூல்,பயிற்சி என்று பொருள் உரைக்கிறது.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கல்வி என்பதற்கு படித்துப் பெறும் அறிவு,முறைப்படுத்தப்பட்ட அறிவு, நுனரஉயவழைn என்று பொருள் கூறுகிறது.(ப.266) கௌராத மிழ்அகராதி அறிவு, கற்றல், நூல், வித்தை, கல்வியறிவு, கற்கை, பயிற்சி, உறுதி, ஊதியம். ஓதி,கரணம்,கலை,கேள்வி,சால்பு,தேர்ச்சி,விஞ்சை என்று கல்விக்கு பொருள் கூறுகிறது.(ப.233)