அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில், ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களைப்பற்றிய நினைவுரை இடம்பெறும். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தும் அனைத்துலகப் பெண்கள் தினவிழா இம்முறை மெல்பனில் – பிரஸ்டன் நகர மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி ( 11-03-2017) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையில் நடைபெறும்.
இவ்விழாவை மெல்பனில் வதியும் கலை, இலக்கியம், கல்வி சார்ந்த சமூகப்பணியாளர்கள் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள். திருமதி ஞானசக்தி நவரட்ணம் அவர்களின் தையல் நுண்கலை கைவினைக் கண்காட்சியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். இவ்விழாவில் இடம்பெறும் கருத்தரங்கில் மெல்பனில் வதியும் மூத்த இளம் தலைமுறையினர் பங்குபற்றும். திருமதி மங்களம் வாசன் அவர்களின் தலைமையில் இடம்பெறும் கருத்தரங்கில், செல்வி மதுபாஷினி பாலசண்முகன் ” பாரதியும் பெண்விடுதலையும் ” என்ற தலைப்பிலும் செல்வி மோஷிகா பிரேமதாச ” மறைந்த எழுத்தாளர் அருண். விஜயராணியின் சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்” என்னும் தலைப்பிலும் உரையாற்றுவர்.
அண்மையில் மெல்பனில் மறைந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச்சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றிய நினைவுரையை வானொலி ஊடகவியலாளர் திரு. பொன். குமாரலிங்கம் நிகழ்த்துவார்.
Continue Reading →