குறுநாவல்: சலோ,சலோ! 3

குறுநாவல்:  சலோ,சலோ! (1)“சும்மா,நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதியது.நீளத் தொடர்”.    – கடல்புத்திரன்)

அத்தியாயம் 3

வடக்கராலியில், இதைப் போல நாலு ஐந்து குறிச்சிகள் இருக்கின்றன. செட்டியார்மடம், மையிலியப்புலம், பள்ளிக்கூடத்தடி, சந்தையடி. இங்கே மட்டும்  தான் ‘பைப்புகள் இருக்கின்றன‌.மற்றையவற்றில் இல்லை. சிலவேளை, சந்திரா இருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற‌…வயல்ப் பக்கமிருந்த குடவைக் கிணற்றுக்கு நகுலன் சைக்கிளிலே போய் குடத்திலே நீர் பிடித்து வாரவன்.அது தூரம்.இரண்டொரு வீட்டிலே இடைப்பட்ட தர நிலையில் கிணற்று நீர் பரவாய்யில்லையாகவும் இருந்தன.அங்கே இருந்தும் எடுத்துக் கொண்டார்கள்.நகுலன் வீட்டிற்குப் பின் வீட்டிலும் பரவாய்யில்லையான நீர்.அங்கே இருந்தும் சிலவேளை எடுத்தார்கள்.

நகுலன் வீட்டு கிணற்று நீரை பாத்திரங்கள்,கழுவ..மற்றைய தேவைகளிற்கு.. மாத்திரமே .பாவித்தார்கள்.சமைக்க குடிக்கவெல்லாம் மற்றைய நீர் தான்.

“எங்க வீட்டுத்  தண்ணீர் பாசி மணம்..!”என்றான்.

“பரவாய்யில்லை”என அவன் வீட்டிலேயே தண்ணீர் எடுக்க வந்தார்கள். ஆபத்திற்கு தோசமில்லை என்றாலும் பாசி மணம் போய் விடாது. ‘சரி அப்ப வாருங்கள்”என கூட்டிச் சென்று துலாகிணறி லிருந்து  நீர் அள்ளி விட்டான்.இரண்டு குடத்தில் பிடித்துச் சென்றார்கள்.

விடியிறப் பொழுதிலே, பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் வந்து விட்டார்கள் யாழ்ப்பாணத்தில் எல்லாப் பகுதிகளிலும் இத்தகையக் குழுக்கள் கட்டப்பட்டி ருக்கின்ற‌ன.”என்ன வேண்டும்”என கேட்டவர்கள், சமைக்கிறதுக்கு  விறகு, தேயிலை, சீனி, அரிசி, மற்றும்  காய்கறிகள்…   சரக்குச் சாமான்கள் எல்லாவற்றையும் கொஞ்ச நேரத்திலேயே சூழவுள்ள வீடுகளிலிருந்து சேகரித்து வந்து “சமைத்துச் சாப்பிடுங்கள் “என கொடுத்தும் விட்டார்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 226 : கலாப்ரியாவின் ‘உருள் பெருந்தேர்’ ஓடிய என் மனப்பாதையில் அது பதித்த தடங்கள்….

எழுத்தாளர் கலாப்ரியாஎழுத்தாளர்களின் பால்ய காலத்து அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களை, மொத்தத்தில் அவர்கள்தம் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வமுண்டு. முக்கிய காரணம் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வெறும் அபுனவுகளாக  மட்டும் இருந்து விடாமல் இலக்கியச்சிறப்பு மிக்கதாக, கலைத்துவம் மிக்கதாகவும் இருக்கும். ஒளிவு, மறைவு இல்லாமல் அவர்கள் எழுத்தில் வெளிப்படும் நேர்மை நெஞ்சினைத்தொடும்.

எழுத்தாளர்களின் அபுனைவுகளில் மட்டுமல்ல அவர்கள்தம் புனைவுகள் கூட சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக அப்புனைவுகள் இருந்து விடுவதுதான். புகழ் பெற்ற உலகப்பெரும் எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகள் அவர்கள் சிந்தனைகளின், வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்திருப்பதை அவர்களது படைப்புகளை வாசிக்கும்போது அறிய முடிகின்றது.

மேலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் தெரிவிக்கும் புதுத்தகவல்கள் ஒரு காலகட்ட வரலாற்றுச்சின்னங்களாக விளங்கும். காலமாற்றத்தில் காணாமல் போனவற்றையெல்லாம் அவர்கள்தம் எழுத்துகளில் வாசிக்கும்போது வாசிப்பின்பத்துடன் எம்மையும் எம் கடந்த காலத்துக்கே அழைத்துச்சென்று விடுகின்றன.

அண்மையில் என் நெஞ்சினைத்தொட்டதொரு எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவங்களினை வெளிப்படுத்தும் புத்தகமொன்றாக எழுத்தாளர் கலாப்ரியாவின் வாழ்வு அனுபவங்களின் தொகுப்பான ‘  ‘ என்னும் நூலினைக் குறிப்பிடலாம். இன்றுதான் டொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் அதனை இரவல் பெற்றேன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இதுவரை வாசித்த நூலில் வரும் அவர் வாழ்வில் வந்து போன மனிதர்கள் பற்றிய அனுபவங்கள் நெஞ்சினைத்தொட்டன என்று மட்டும் கூறிவிடமுடியாது. வாசித்த பின்னரும் நெஞ்சினை வாட்டும் வகையில் கலாப்ரியாவின் அனுபவங்கள் நெஞ்சினை உலுக்கு விட்டன என்றே கூற வேண்டும்.

Continue Reading →