பெண்ணியல் இலக்கியம்: பெண்ணுரிமைகளும் வெல்வழி வரலாறும்

▬மறைந்த வைத்தியை திருமதி சீதாதேவி மகாதேவா▬மார்ச் மாதம்; 8-ம் திகதி.   சர்வதேச மகளிர் தினம் எங்கும்  சம்பிரதாயமாகக் கொண்டாடப் படுகின்றது.  ஆனால் இன்றுகூட உலக நாடுகள் எவற்றிலும் பெண்களையும் ஆண்களையும் எம் சமுதாயங்களும் அரசாங்கங்களும் வேலை செய்யும் இடங்களிலோ இல்லங்களிலோ பொதுஇடங்களிலும் நிகழ்ச்சிகளிலுமோ சரிசமமாகக் கருதுவதும் இல்லை> நடத்துவதும் இல்லை.  இதற்கு அடிப்படைக் காரணம் என்னவெனில் இன்றும் எஞ்சியுள்ள ஆணாதிக்கமே.  பெண்களின் உதாசீனப் பிரயாசைக் குறைவும் இன்னொரு காரணமாக இருக்கலாம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

கீழைத் தேசங்களாகிய ஆசிய நாடுகளில் ஆண் பெண் வேற்றுமை மிகக் கூடுதலாக இன்னும் நிலைக்கிறது.  ஒரு கொடூரமான உதாரணம்:  இந்திய இந்துப் பெண்கள் கணவன்மார் இறந்து அவர்களுடைய சடலம் எரியும் பொழுது மனைவிமாரையும் நெருப்பில் வீழ்ந்து மாளச் செய்கிற வழக்கம் இன்னமும் உண்டு.  இதைச் சில காலமாக அரசாங்கம் சட்ட முறையாக நிறுத்தி வந்தாலும் ஒருசில கிராமங்களில் இப்பொழுதும் இந்த அநியாயம் குறைந்த அளவில் எனினும் நடக்கவே செய்கிறது.  மேலும் அங்கு பலர் தம் மனைவிமாரை அடிமைகளாகக் கருதி மனிதப் பிறவிகளைப் போல் நடத்துவதே இல்லை.  எனினும் மேல் நாட்டாரின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் பெண்களை நடத்தும் வகையையும் அறிந்து மேலும் கல்வி மேம்பாட்டாலும் அரசாங்கக் கட்டுப் பாட்டினாலும் இவ்விதமான அநீதிகள் குறைந்து கொண்டு வருவது ஒரு நற்செய்தியே.

2008இல் ஒக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 1.3 பில்லியன் தொகை வறுமையில் வாழும் உலகமக்களில் நூற்றுக்கு 70-வீதம் பெண்களே எனக் குறிப்பிட்டுள்ளது.  இதற்குக் காரணம் பெண்களுக்கு இன்றும் மனிதஉரிமைகள் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்பதே. அத்துடன் ஆண்கள் பெண்களைக் கீழ்த் தரமாகக் கருதி வேலை வீடு பணம் முதலியவற்றில் பூரண சமத்துவம் மறுக்கப்படுகிறது.  மேலும் உலகில் தொழில் செய்பவர்களில் பெண்ணினம் மூன்றில் இரு பங்காக இருந்தாலும் உலகின் வருமானத் தொகையில் நூற்றுக்கு 10-வீதமான வருமானத்தையே பெறுகிறார்கள்.  அரை மில்லியனுக்குக் கூடிய பெண்கள் கர்ப்பத்திலும் பிள்ளைப் பேற்றிலும் மரணம் அடைகிறார்கள்.  உலகின் அரசாங்க சபைகளில் பெண்கள் நூற்றுக்கு சராசரி 14-வீதம் இடத்தைத் தான் கைப்பற்றி இருக்கிறார்கள்.

உலகில் குடும்பங்களில் மிகக்கூடியதாக முக்கியமாக ஆண்களின் தாக்குதலால் காயப்படுவதும் மரணமடைவதும் பெண்களே.  இவை ஆராய்ச்சிப் புள்ளிவிவரங்கள்.

Continue Reading →

நவஜோதி ஜோகரட்னத்தின் மகரந்தச் சிதறல்கள்

- கலாநிதி பார்வதி கந்தாமி., கனடா. -அழகான தலைப்புக்கொண்ட நூல். மகரந்தம் பறந்து சிதறிப் பூக்களிலிருந்து பூக்களுக்குத் தாவிச் சூல் கொள்ள வைக்கின்றது. நவஜோதி ஜோகரட்னம் ஈழத்தில் தோன்றிய மகரந்தம். இன்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இலண்டனில் தன் மகரந்தத்தைப் பலவாயிரம் புலம்பெயர் பெண்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தவும் தமிழ் பணியை உறுதியுடன் செய்யவும் பயன்படுத்துவது யாவரும் அறிந்ததே. பிரித்தானியாவில் பெண்கள் உயர்வுக்காகக் குரல் கொடுக்கும் நவஜோதி ‘மகரந்தச் சிதறல்’ ஊடாக வானொலியால் பெண்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்திப் பின்னர் நூல்வடிவில் நூல்வடிவில் பதிவுகளாக  வெளிக்கொணர்ந்து பேசாப் பொருளைப் பேசத் துணிந்து தூண்டியுள்ளார்.

பௌவியமாகத் தெரிவு செய்து எழுதப்பட்ட இந்நூலில் உள்ளடக்கப்பட்டவர்கள் பற்றிய விமர்சனங்கள் மூன்று விடயங்களை விவாதத்திற்கு உள்ளாக்கலாம். முதலாவதாக இலைமறைகாய்களாக இருந்த சில பெருமாட்டிகள் பற்றி எழுதப்படவில்லை எனவும், வாழ்ந்துகொண்டிருப்போரில் முக்கியமான சிலர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனவும் அடுத்ததாக, அடுத்தவர் அறியாது பிரித்தியானியாவில் வந்து அவலப்பட்ட அகதிகளுக்கான உதவிகளைச் செய்தவர்களையும், பெண்கள் மீதான வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருந்தும், தாய் மண்ணின் அநாதைகளின் வாழ்வு உயரவும், கல்வி பெறவும் பணி செய்து வாழ்ந்த, வாழும் உத்தமிகளது பதிவுகள் இடம்பெறவில்லை என்ற ஆதங்கங்களும் எழலாம். ஒரே நூலில் எல்லாமுமே இடம்பெறமுடியாது. அவை இடம்பெறவேண்டும் என்ற தேவையை இந்நூல் வற்புறுத்துகிறது எனலாம்.

Continue Reading →

சிறுகதை: மறு அவ‘தாரம்’

 நவஜோதி ஜோகரட்னம்., லண்டன். ‘நாங்கள் லண்டனுக்கு கப்பலால்தான் பயணம் செய்து வந்தோம். கறிக்குப் போடுகிற மிளகாய்த்தூள், சமைக்கிறதுக்கு கருவாடு, கோப்பி போன்ற  சாமான்களை யாழ்ப்பாணத்திலிருந்துதான் கொண்டு வருவோம். அப்படிக் கொண்டு வந்தால்தான் எங்கட சாப்பாட்டை கொஞ்சம் சுவைபடச் சாப்பிடலாம். இலங்கையிலிருந்து மேற்படிப்புக்கென்று வருகிறவர்கள் எல்லோரும்; கட்டிக் காவிக் கொண்டுதான் வருவோம். யாழ்ப்பாணத்தை இறக்குமதி செய்தது போலல்லவோ இப்போது லண்டனில் எல்லாப் பொருட்களும் இருக்குது.  

என்னுடைய பிள்ளைகள் லண்டனில் படித்துப் பட்டம் பெற்றார்கள். ஆனால் திருமணம் என்பதில் நாட்டம் கொள்ளாது இருந்துவிட்டார்கள். இப்ப துயர உணர்வில் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். திருமணத்தை விரும்பாது சுதந்திரமாக வாழவேண்டும்  என்று தனிமையில் வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்களில் மோகங்கொண்டு கல்யாணம் செய்தவர்களும் உண்டு. சிலர் சிறப்பாக இருக்கிறார்கள். சிலரின் வாழ்க்கை இடையில் முறிந்தும், சீர்கெட்டுப்போயும்; இருக்குது. நவீன உலகில் திருமண வாழ்வும் புதுப்புது உருவம் பெற்றுக்கொண்டுதான் வருகின்றது. என்ன இருந்தாலும் என்ர பிள்ளைகள் தனித்து வாழ்வது என் சிந்தனையை எந்த நேரமும் அரித்துக்கொண்டுதான்; இருக்குது’ என்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்ரி எப்போதும் தான் படிக்க வந்த பெருமையையும்;, தனது பிள்ளைகளின் கவலையையும் கூறிக்;கொண்டே இருப்பார்.

ஷாலினியுடன் அன்ரியின்; ஆதங்கத்தைக் கதைத்துக் கொண்டிருந்தேன். திருமணங்கள் பற்றித் திரும்பியது பேச்சு.

இலங்கையில் பெற்றோர் விருப்பத்தின்படி திருமணம் முடித்து வந்தவள் ஷாலினி. லண்டனில் பிறந்து வளர்ந்தவர்தான் மாப்பிள்ளை. தற்போது ஷாலினி லண்டனில் தனியார் வைத்தியசாலையில் தாதியாக வேலை பார்க்கிறாள். பட்டப்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டும் இருக்கின்றாள் ஷாலினி.

Continue Reading →