‘மல்லிகை’ சஞ்சிகையின் பொன்விழா தொடர்பாக….

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ‘மல்லிகை’ இதழுக்கு 2016ஆம் ஆண்டு ஐம்பதாவதாண்டு பூர்த்தியாகிவிட்டது. அது தொடர்பாக .மல்லிகை’ சஞ்சிகையில் பங்களித்த எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பட்டியலொன்றினை தயாரிக்கும்பொருட்டு அப்படைப்பு பற்றிய விபரங்களை (படைப்பின் தலைப்பு, ஆசிரியர் பெயர், வெளியாகிய இதழ் போன்ற) ‘மல்லிகை’ சஞ்சிகை நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இது பற்றிய அறிவித்தலொன்றினையும் ‘மல்லிகை’ சஞ்சிகையினர் வெளியிட்டுள்ளார்கள். அவ்வறிவித்தலை நண்பர் எழுத்தாளர் மேமன்கவி அனுப்பி வைத்திருந்தார். அதனை இங்கு ‘பதிவுகள்’வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.

நண்பர்களே! உங்களது படைப்புகள் ‘மல்லிகை’ சஞ்சிகையில் வெளியாகியிருந்தா;ல் அது பற்றிய விபரங்களை அனுப்பி வையுங்கள்.

Continue Reading →

ஆய்வு: சித்தர் பாடல்களில் பழமொழிகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்!அனுபவம் வாய்ந்தவர்களின் அனுபவ மொழிகளாக வெளிவருபவை பழமொழிகள் ஆகும். முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையின்வழி கிடைத்த அனுபவத்தின் வெளிப்பாடே பழமொழிகள் என்னும் அறிவுச்சுரங்கம் ஆகும். பழமொழிக்கு சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் உண்டு. இவை மக்கள் மனதிலே ஆழமாகப் பதிந்து நற்செயலைத் தூண்டச் செய்கின்றன. பழமொழிகள் அனைத்தும் பழமையான நம்பிக்கைகளையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் மனித உணர்வுகளையும் வெளிக்காட்டும் கருவியாகும். இத்தகு பழமொழிகள் சித்தர்களின் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. சித்தர்கள் தமிழ்சமூகத்தின் அறிவாளிகளாகக் கருதப்பட்டனர். இத்தகு அறிவாளிகளின் பாடல்களில் வெளிப்பட்டுள்ள பழமொழிகளை எடுத்துரைப்பதாகவே இக்கட்டுரை அமைகிறது.

பழமொழி
தினந்தோறும் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களின் திரட்டே பழமொழியாகும். இவை அனுபவத்தின் அடிப்படையில் வெளிவருவனவாகும். தமிழ்மொழியில் பழமொழியை முதுசொல், முதுமொழி, பழஞ்சொல், சொலவடை, சொலவாந்திரம், ஒவகதை போன்ற பல சொற்களில் குறிக்கப்படுகின்றன. பழமொழிகுறித்து,

“ நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றும்
குறித்த பொருளை முடித்தற்கு வருஉம்
ஏது நுதலிய முதுமொழி   ”
( தொல்.பொரு.செய். 166)

Continue Reading →