“சும்மா,நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதியது.நீளத் தொடர்”. – கடல்புத்திரன்)
அத்தியாயம் 3
வடக்கராலியில், இதைப் போல நாலு ஐந்து குறிச்சிகள் இருக்கின்றன. செட்டியார்மடம், மையிலியப்புலம், பள்ளிக்கூடத்தடி, சந்தையடி. இங்கே மட்டும் தான் ‘பைப்புகள் இருக்கின்றன.மற்றையவற்றில் இல்லை. சிலவேளை, சந்திரா இருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற…வயல்ப் பக்கமிருந்த குடவைக் கிணற்றுக்கு நகுலன் சைக்கிளிலே போய் குடத்திலே நீர் பிடித்து வாரவன்.அது தூரம்.இரண்டொரு வீட்டிலே இடைப்பட்ட தர நிலையில் கிணற்று நீர் பரவாய்யில்லையாகவும் இருந்தன.அங்கே இருந்தும் எடுத்துக் கொண்டார்கள்.நகுலன் வீட்டிற்குப் பின் வீட்டிலும் பரவாய்யில்லையான நீர்.அங்கே இருந்தும் சிலவேளை எடுத்தார்கள்.
நகுலன் வீட்டு கிணற்று நீரை பாத்திரங்கள்,கழுவ..மற்றைய தேவைகளிற்கு.. மாத்திரமே .பாவித்தார்கள்.சமைக்க குடிக்கவெல்லாம் மற்றைய நீர் தான்.
“எங்க வீட்டுத் தண்ணீர் பாசி மணம்..!”என்றான்.
“பரவாய்யில்லை”என அவன் வீட்டிலேயே தண்ணீர் எடுக்க வந்தார்கள். ஆபத்திற்கு தோசமில்லை என்றாலும் பாசி மணம் போய் விடாது. ‘சரி அப்ப வாருங்கள்”என கூட்டிச் சென்று துலாகிணறி லிருந்து நீர் அள்ளி விட்டான்.இரண்டு குடத்தில் பிடித்துச் சென்றார்கள்.
விடியிறப் பொழுதிலே, பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் வந்து விட்டார்கள் யாழ்ப்பாணத்தில் எல்லாப் பகுதிகளிலும் இத்தகையக் குழுக்கள் கட்டப்பட்டி ருக்கின்றன.”என்ன வேண்டும்”என கேட்டவர்கள், சமைக்கிறதுக்கு விறகு, தேயிலை, சீனி, அரிசி, மற்றும் காய்கறிகள்… சரக்குச் சாமான்கள் எல்லாவற்றையும் கொஞ்ச நேரத்திலேயே சூழவுள்ள வீடுகளிலிருந்து சேகரித்து வந்து “சமைத்துச் சாப்பிடுங்கள் “என கொடுத்தும் விட்டார்கள்.