நினைவு கூர்வோம்: ஏ.ஈ.மனோஹரன் மறைவு!

நினைவு கூர்வோம்: ஏ.ஈ.மனோஹரன் மறைவு!‘பொப்’ இசைப்பாடகர் ஏ.ஈ.மனோஹரன் மறைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத்திசையில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. இலங்கையின் பல்லின மக்களாலும் பெரிதும் விரும்பப்பட்ட தமிழ்ப்பாடகராக இவரைக் குறிப்பிடலாம். இலங்கையில் அரசியல்வாதிகளால் ஊதி வளர்க்கப்பட்ட இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஓரளவுக்காவது தணிக்க உதவின ஏ.ஈ.மனோஹரன் ., எம்.எஸ்.பெர்ணாண்டோ, சுஜாதா அத்தனாயக்க, நந்தா மாலினி போன்ற கலைஞர்களின் பங்களிப்பு.  கலைஞர்களும் மானுடப் பிரிவினைகளைக் கடந்தவர்கள். கலையும், இசையும் எல்லைகளைக் கடந்தவை.

ஏ.ஈ.மனோஹரனைப்பற்றி எண்ணியதும் எனக்கு ஞாபகமொன்று தோன்றுவது வழக்கம். அப்பொழுது காற்சட்டையும், சேர்ட்டுமாகத்திரிந்து கொண்டிருந்த பருவம். யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற திருமணக் களியாட்டமொன்றில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனும் கலந்துகொண்டிருந்தார். எழுபதுகளிலொருநாள். திருமண நிகழ்வினையொட்டி நடைபெற்ற ஊர்வலமொன்றில் அத்திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் யாழ் கே.கே.எஸ் வீதிவழியாக வந்து கொண்டிருந்தவர்களில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனும் ஒருவர். ஊர்வலம் எம்மைக் கடந்துகொண்டிருந்தபோது நண்பர்களிலொருவன் விரிந்த சுருட்டைத் தலைமயிர் குடை போல் கவிந்திருக்க வந்துகொண்டிருந்த ஏ.ஈ.மனோஹரனைக் கண்டு விட்டு ‘இங்கே பாரடா ஏ.ஈ.மனோஹரன்’ என்று கத்தி விட்டான். அந்த ஊர்வலத்தின் இரைச்சலிலும் நண்பனின் குரலினைச் செவிமடுத்த ஏ.ஈ.மனோஹரனின் முகத்தில் தன்னை இரசிகனொருவன் கண்டு விட்டதாலேற்பட்ட பெருமிதம் படர்ந்தது. அப்பெருமிதத்தோடு எம்மை நோக்கித் திரும்பிக் கைகளை அசைத்தவாறு சென்றார். அக்கணம் என் நெஞ்சில் அழியாத கோலங்களிலொன்றாகப் படிந்து விட்டது. பாடகர் ஏ.ஈ.மனோஹரனைப்பற்றிய நினைவுகளுடன் கலந்து விட்ட ஞாபகப்படிவம் அது.

Continue Reading →

எதிர்வினை: சருங்கலய திரைப்படம் – முருகபூபதி

 அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன.

அன்பின் நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். சருங்கலய படம் பற்றிய குறிப்புகளை பதிவுகளில் படித்தேன். கடந்த கால நினைவுகளை தந்தமைக்கு மிக்க நன்றி. நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெளிவந்த படம். வடபகுதியின் சாதிப்பிரச்சினையையும் தென்னிலங்கையின் இனரீதியான கடும்போக்கு வாதத்தையும் சித்திரித்த படம்.  இலங்கை நாடாளுமன்றத்திலும் சில அரசியல் தலைவர்கள் ஏட்டிக்குப்போட்டியாக இந்த திரைப்படத்தை பாருங்கள் என்று அறைகூவல் விடுத்தார்கள். இதில் சம்பந்தப்பட்ட யோகா பாலச்சந்திரன் கனடாவில்தான் வசிக்கிறார். அவரிடம் திரைக்கதையை கேட்டு அறிந்துகொள்ளமுடியும். படத்தின் பல காட்சிகள் மனதில் இருக்கின்றன. குறிப்பாக அதில் வரும் குழந்தை, ஒரு மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை வீசும். அதனைக்காணும் நடராஜா (காமினி பொன்சேக்கா) அருகில் வந்து ” மகளே அதனை வீசவேண்டாம். தரையில் புதைத்தால், சிறிது நாளில் ஒரு மாமரம் வரும். நீங்க வளரும்போது மேலும் நிறைய மாம்பழங்கள் அதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும்” என்று அறிவுறுத்திவிட்டு மாங்கொட்டையை நடுவார். வடக்கின் பொருளாதார சிந்தனையை அக்காலத்தில் குறியீடாக சித்திரித்த இக்காட்சி பற்றி பலரும் சிலாகித்தார்.

இப்படத்தில் நடராஜாவின் முதிய தாயாக வரும் பெண் இயல்பாக நடித்திருப்பார். பம்பலப்பிட்டி கீறின்லண்ட்ஸ் ஹோட்டலில்தான், வீணா ஜெயக்கொடி ( பாத்திரத்தின் பெயர் மறந்துவிட்டது) நடராஜாவை தனது கணவர் எனச்சொல்லி காப்பாற்றுவார். இதுபோன்ற காட்சி நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலிலும் வருகிறது. சருங்கலய படத்தில் நடித்தபின்னர் காமினிக்கு மற்றும் ஒரு தமிழ்ப்படம் எடுக்கவேண்டும் என்ற விருப்பமும் வந்தது. நண்பர் தெளிவத்தை ஜோசப்பை தமது வீட்டுக்கு அழைத்து கதையும் சொன்னார். தெளிவத்தை ஜோசப், ஏற்கனவே வி. பி. கணேசனின் புதிய காற்று படத்திற்கு வசனமும் எழுதியவர். ஆனால் அந்த முயற்சி நிறைவேறவில்லை. இந்தச் சம்பவங்கள் 1980 இற்கு முன்னர் நடந்தவை.

Continue Reading →

முகநூல் கலையுலகக் குறிப்புகள்: அயலவர் கலையுலகம் அறிவோம் – காமினி பொன்செகாவின் (Gamini Fonseka) நடிப்பில் சருங்கலய (Sarunggalaya)

 அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. பேராசிரியர் சுனில் ஆரியரத்தின– அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான ‘சருங்கலய’ திரைப்படம் பற்றிய எனது சிறு முகநூற் குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. –


சிங்களத்திரையுலகின் எம்ஜிஆராக இவரைத்தமிழர்கள் அறிந்திருந்தாலும், இவர் நடிப்பிலும் திறமை வாய்ந்தவர். இவர்தான் காமினி பொன்செகா. இவரது இயற்பெயர் டொன் செல்டன் காமினி பொன்செகா (Don Shelton Gamini Fonseka). நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி எனப்பல்பரிமாண ஆளுமை மிக்கவர் இவர். பின்னாள்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியாகத்திகழ்ந்த இவர் வட, கிழக்கின் ஆளுநராகவும் விளங்கியவர். ‘நீலகடல் ஓரத்தில்’,’ நங்கூரம்’ ஆகிய தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்தவர் இவர்.

‘சருங்கலய’ (சருங்கலய என்றால் பட்டம் என்று பொருள்) என்னும் சிங்களத்திரைப்படத்தில் நடராஜா என்னும் தமிழராகவும் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பல காட்சிகள் கரவெட்டியில் படமாக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. இத்திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற 1977 இனக்கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிங்களத்திரைப்படமாகும். இத்திரைப்படத்துக்கான தமிழ் வசனத்தை திருமதி யோகா பாலச்சந்திரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கிய சுனில் ஆரியரத்தின தமிழில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர். எழுத்தாளர், கவிஞர், இயக்குநர், விமர்சகர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமையாளர். யாழ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணி புரிந்திருக்கின்றார்.

சருங்கலய திரைப்படத்தில் தமிழ்ப்பாடலொன்றும் இடம் பெற்றுள்ளது. ‘வானத்து மழைத்துளி’ என்னும் அப்பாடலை எழுதியவர் யோகா பாலச்சந்திரன். பாடியவர் கலாவதி சின்னச்சாமி. இசையமைத்தவர் விக்டர் ரத்னாயக்க (Victor Ratnayake).

Continue Reading →

கிராமிய விளையாட்டு “கிளித்தட்டு”

- த. சிவபாலு பி.எட். சிறப்பு. எம்.ஏ,  -“ஆலையிலே சோலையிலே ஆலம் பாடிய சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு “என்பது கிராமத்து நாட்டார் பாடல் . கிராமிய விளையாட்டுக்கள் மிகவும் மகிழ்வூட்டுவன. உடல் நலத்தைப் பேண மிகவும் உகந்தன. கிளித்தட்டு கிராமிய விளையாட்டுக்களில் மிகவும் புகழ்வாய்ந்தது. தமிழ் மக்களிடையே எல்லாக் கிராமங்களிலும் கிளத்தட்டு விளையாடப் பட்டுவந்துள்ளது. கிட்டி புள்ளு, வாரோட்டும், எல்லைக் கோடு, மல்யுத்தம், குடோரி, நாயும் புலியும், ஆடும் புலியும் போன்ற விளையாட்டுக்கள் சிறார்களால் விளையாடப்பட்டு வந்துள்ளன. கிறிக்கற், எல்லே, ஆதாரப்பந்து, வலைப்பந்து, கூடைப்பந்து, உதைபந்து போன்றன அறிமுகப் படுத்த்பபட்ட பின்னர் கிராமிய விளையாட்டுக்கள் அருகிப்போகத் தொடங்கியுள்ளன. முன்னர் கிராமங்களில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும் நகர் புறத்துப் பிள்ளைகள் இத்தகைய பண்டைய விளையாட்டுக்களை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வர் இப்போது இப்படிப் பார்ப்பதற்குக் கூட பாரம்பரிய விளையாட்டுக்கள் கிடைப்பது அரிதாகிப் போய்விட்டன. இவ்வாறான பாரம்பரிய வியையாட்டுக்களில், கிளித்தட்டு அல்லது தாச்சி மிகவும் பிரபலமான, சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு. அருகிவரும் இந்த விளையாட்டைப் பற்றி அறிந்து கொண்டு நாமும் விளையாடி மகிழ்வதற்குஇந்த விளையாட்டுப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம.

எங்கள் மண்ணுக்கே சிறப்பான விளையாட்டுக்களில் ஒன்றான “கிளித்தட்டை” சிறுவர் முதல் பெரியோர் வரை வயது, பால் வேறுபாடின்றி எல்லோருமே விளையாடி மகிழலாம் .சில கிராமங்களில் இதனை “யாட்டு ”அல்லது ‘தாச்சி ‘ என்றும் அழைப்பார்கள். தாச்சி என்பது நடுவரைக்குறிக்கும் சொல்லாகும். கிளித்தட்டுக்கு நடுவர் மிக முக்கியமானவர். இரண்டு குழுக்களுக்கிடையே இந்த விளையாட்டு இடம்பெறும்.  

பண்டைய காலத்தில் கிராமத்துப் ;சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிளித்தட்டை விரும்;பிப் பார்ப்பார்கள். இது ஆண்களுக்கு உரிய ஒரு விளையாட்டாகக் கொள்ளப்பட்டு வந்தது. இன்று இந்த விளையாட்டு பலருக்கும் தெரியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. தென்பது ஆச்சரியம்தான். கிளித் தட்டு விவசாயிகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாகும் .நெல் விதைத்த காலங்களில் வயலில் நெல் மணிகளைப் பொறுக்க வரும் கிளிகளை, கமக்காரன் வரம்புகளில் ஓடிக்கலைத்து வயலைக் காப்பதையே இந்த விளையாட்டுக் காட்டி நிற்கிறது. காப்பவர்- கமக்காரனாகவும்,புகுவோர்-கிளிகளாகவும் தட்டுக்கள் (பெட்டிகள்)- வயல் நிலங்களாகவும் கோடுகள்- வரம்புகளாகவும் பாவனை செய்யப்படுகின்றது.

Continue Reading →

TASME2018 Conference – on July 7-8 at SickKids/University of Toronto

The 22nd Technological Advances in Science, Medicine and Engineering Conference (TASME2018) will be hosted in SickKids / University of Toronto on July 7-8, 2018. This is a unique International conference dedicated specifically to Science, Medicine and Engineering Advancements. We need your support and active participation to make the event successful. Anyone willing to volunteer in various conference related activities, please let us know. You are welcome to contribute professional papers, student papers and/or student posters. We would also like to invite you and your students to submit papers to the conference. For more info please visit our website; http://www.tasmeconferences.org/

Continue Reading →

(அக்கினிக்குஞ்சு.காம்) எழுத்தாளர் மாலனுக்கு பாரதிய பாஷா பரிஷத் விருது

(அக்கினிக்குஞ்சு.காம்) எழுத்தாளர் மாலனுக்கு பாரதிய பாஷா பரிஷத் விருது

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் ‘பாரதிய பாஷா விருது‘ இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில்,  ஜெய்காந்தன், சிவசங்கரி,  ராஜம்கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி,  அசோகமித்ரன், பிரபஞ்சன்,வைரமுத்து ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் மாலன்  இலக்கிய உலகில் பல சிறப்புக்களைப் பெற்றவர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். உணர்ச்சிகள், சம்பவங்கள் இவற்றிற்கு பதிலாகப்  புனைவுகளில் சமூக விமர்சனம்,தர்க்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி எழுதுபவர். இலக்கியப் படைப்பாற்றலில் முழுமை கருதி   இந்த விருது அவருக்கு அளிக்கப்பெறுகிறது. இவரது கதைகள் ஆங்கிலம் இந்தி போன்ற இந்திய மொழிகளில் மட்டுமன்றி சீனம், மலாய், பிரெஞ் போன்ற உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தவர்.சரஸ்வதி சன்மான் விருது வழங்கும் கே.கே. பிர்லா பவுண்டேஷனில் தமிழ் மொழிக் குழுவின் தலைவர்.

மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட்களில் உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர். மலேயா, சிங்கப்பூர், மெல்பன் ஆகிய பல அயலகப் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற   அழைக்கப்பட்டவர். கடந்த ஆண்டு சிங்கப்பூர் நூலக வாரியம் அளிக்கும் லீ காங் சியான் ஆய்வுக் கொடை வழங்கப்பட்டு சிங்கப்பூரில் ஆறுமாத காலம் தங்கியிருந்து இலக்கிய ஆய்வு மேற்கொண்டவர். இந்தக் கொடை அளிக்கப்பட்ட முதல் இந்தியரும் தமிழரும் இவரே ஆவார்.

Continue Reading →

(நூல்வெளி.காம்) எழுத்தாளர் ஞாநி மறைவு!

(நூல்வெளி.காம்) எழுத்தாளர் ஞாநி மறைவு! பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடகக் கலைஞர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் ஞாநி சங்கரன். பரீக்‌ஷா நாடகக் குழுவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். அதன் மூலம் பல்வேறு சமூக நோக்குள்ள வீதி நாடகங்களையும், மேடை நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார்.

1954ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர். அங்குள்ள புனித சூசையப்பர் பள்ளியில் படித்தார். பின்பு கல்லூரிக் கல்வியை சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்திருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் விளம்பர்ப பிரிவில் பணியாற்றியவர், இதழியல் பட்டயப் படித்து பின்பு அதே நாளிதழில் நிருபராகவும் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிய காலத்தில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதி அவருக்கென ஒரு தனி பாணியை உருவாக்கினார். அவருடைய ஞான பானு என்கிற பதிப்பகத்தின் மூலம் அவருடைய படைப்புகள் அனைத்தையும் புத்தகமாக கொண்டுவந்தார். பல்வேறு பத்திரிகைகளுக்கு கெளரவ ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவர் தினமலர் நாளிதழின் இணைப்புப் பிரதியான ‘பட்டம்’ இதழின் ஆலோசகராக பணியாற்றினார்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 2: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் ‘பாரம்பரியக் கட்டடக்கலை’யும் ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்’.

பேராசிரியர் நிமால் டி சில்வாமொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் ‘பாரம்பரியக் கட்டடக்கலை’ (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் ‘பாரம்பர்யக்கட்டடக்கலை’ பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில்  நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) ‘பண்டைய அநுராதபுர நகர அமைப்பு’ பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது.  பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.

எனக்கு நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி அறியும், ஆராயும் ஆர்வத்தை ஏற்படுத்திய காரணங்களிலொன்று பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் அறிமுகப்படுத்திய அக்கட்டுரை. அவர் அன்று அறிமுகப்படுத்திய ரோலன் சில்வாவின் ‘அநுராதபுர நகர அமைப்பு’ பற்றிய கட்டுரையின் விளைவாக எனது ஆய்வு நூலான ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’ தமிழகத்தில் ஸ்நேகா/மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு விடயத்துக்காகவே எப்பொழுதுமென் நினைவில் நிற்கும் ஆளுமைகளிலொருவராக பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் விளங்குவார்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 2: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் ‘பாரம்பரியக் கட்டடக்கலை’யும் ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்’.

பேராசிரியர் நிமால் டி சில்வாமொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் ‘பாரம்பரியக் கட்டடக்கலை’ (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் ‘பாரம்பர்யக்கட்டடக்கலை’ பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில்  நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) ‘பண்டைய அநுராதபுர நகர அமைப்பு’ பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது.  பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.

எனக்கு நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி அறியும், ஆராயும் ஆர்வத்தை ஏற்படுத்திய காரணங்களிலொன்று பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் அறிமுகப்படுத்திய அக்கட்டுரை. அவர் அன்று அறிமுகப்படுத்திய ரோலன் சில்வாவின் ‘அநுராதபுர நகர அமைப்பு’ பற்றிய கட்டுரையின் விளைவாக எனது ஆய்வு நூலான ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’ தமிழகத்தில் ஸ்நேகா/மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு விடயத்துக்காகவே எப்பொழுதுமென் நினைவில் நிற்கும் ஆளுமைகளிலொருவராக பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் விளங்குவார்.

Continue Reading →

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

தைதரும் வளமெனுந் தங்கநாள் பொங்கல்
தமிழ்ப்பெருஞ் சந்ததிச் சார்பிடும் பொங்கல்
கையிலே அறுவடைக் களம்தரும் பொங்கல்
காலமெல் லாம்பிணி காத்திடும் பொங்கல்
மைவரை உலகமாய் மாண்பிடும் பொங்கல்
மரபெனுஞ் செந்தமிழ் வார்த்திடும் பொங்கல்
செய்யவார் வெள்ளையர் தேசமும் பொங்கல்
சிறப்பிடும் நன்றியே!  பொங்கலோ பொங்கல்.

வானுயர் தமிழ்மர பென்றுவை யத்துள்
வரையறை செய்துஇன் னுலகெலாம் பொங்கல்
தேனுயிர் தமிழருந் திருவரங் காத்து
தேசமெல் லாமொடும் அரசிடும் பொங்கல்
மானுயிர் வாழ்வெனும் மானமும் தண்ணார்
மணித்தமிழ் கொண்டுமே வாழ்த்திடும் பொங்கல்
ஈனமுஞ் சதியொடும் ஈட்டிகொண் டானாய்
எழியர்போய் வந்ததே பொங்கலோ பொங்கல்

Continue Reading →