அறிமுகம்: புதிய சொல் – இதழ் 7 (ஜூலை- செப் 2017)

‘புதிய சொல்’ தனது 7 வது இதழினை வெளியிட்டுள்ளது. வழமையான சிற்றிதழ் மரபின்படியே இதழ் தாமதம் குறித்த கவலையுடனும் பதிப்புத்துறையில் ஏற்படுகின்ற சிக்கல்களையும் சவால்களையும் குறித்த ஆசிரியர் குழுவின் அங்கலாய்ப்புக்களுடனும் இவ் இதழும் வெளிவந்துள்ளது. இப்போதெல்லாம் கையில் கிடைத்தவுடன் ஆணியடித்தால் போல் இருந்து படித்து முடிக்கும் வண்ணம் ஒரு சில இதழ்களே வெளிவருகின்றன. அந்த வகையில் புதிய சொல்லும் தனது 7வது இதழினை சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் மிகச் சிறந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளுடன் மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது

சிறுகதைகள்
கிஸ்டீரியா – கற்சுதா – ஆயுதப்போராட்ட ஆரம்ப காலத்தில் ஆயுதக் குழுவொன்றினால் உளவாளியாகச் சந்தேகப்பட்டு ஒரு சிங்களப் பெண்ணிற்கு வழங்கப் பட்ட கொடூரமான தண்டனை குறித்து பேசுகின்றது.

ஏவல் – பாத்திமா மாஜிதா – முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் சமூக அவலங்களையும் மதத்தலைவர்களின் போலித்தனங்களையும் சாடுகின்றது.

உறுப்பு – அனோஜன் பாலகிருஷ்ணன் -சிறு வயதில் சிங்கள இராணுவ வீரன் ஒருவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படும் சிறுவன் ஒருவன் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் ஆண்மை குறைவு குறித்து பேசுகின்றது.

Continue Reading →

ஆய்வு: திருக்குறளில் கடல் : காட்சியும் கருத்தும்

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -ஆய்வு நோக்கம் (Objectives)
சங்கப் புலவர்கள், அக்காலத்தில் மக்கள் வாழ்வியலில் நன்கறிந்திருந்த பொருட்களைக் கொண்டு, அரியாதவற்றை அறிவித்தற்கு, அறிந்தபொருள்களை ஆண்டுள்ளனர். சங்கத் தமிழர்கள் கடலியல் அறிவினை மிகச் சிறப்பாகப் பெற்றிருந்தனர். இதனால் கடலும், கடல்சார்ந்த வாழ்வியலும் அவர்களிடையே இரண்டறக் கலந்திருந்தது. அவ்வகையில் திருவள்ளுவரின் கடலியல் அறிவுநுட்பம் குறித்தும், அதனைப் பாடலின் கருத்தினை விளக்குவதற்குப் பொருத்தமுறப் பயன்படுத்தியுள்ள பாங்கினைக் குறித்தும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கருதுகோள் (Hypothesis)
திருவள்ளுவர் நிலம், மண், நீர், மலை, கடல் முதலானவற்றின் இயற்கையியல் அறிவு கைவரப்பெற்றவர். அவரது இயற்கையியல் அறிவின்நுட்பம் திருக்குறளின் காட்சிப்பொருள் விளக்கத்திற்கு மட்டுமல்லாது, அறக்கருத்துரைக்கும் துணைபுரிந்துள்ளது பெருந்துணை புரிந்துள்ளது என்பதே இக்கட்டுரையின் கருதுகோள் ஆகும்.

முதன்மைச் சொற்கள் (keywords)
கடல், பிறவிப்பெருங்கடல், நெடுங்கடல், காமக்கடல். நாமநீர்…

முன்னுரை
சங்க இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவை இயற்கை சார்ந்த வாழ்வியல் மரபுகளைக் கொண்டுள்ளமையே. சங்க கால வாழ்வியலில் இயற்கை மனித வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. இயற்கையைத் தவிர்த்த வாழ்க்கையை அவர்களால் எஞ்ஞான்றும் மேற்கொள்ள இயலவில்லை. இதன்பொருட்டே புலவர்கள் இயற்கைக்கு மிக முக்கியமான இடத்தைத் தந்து பாடல்களைப் படைத்தளித்தனர். இயற்கையியல் அறிவும், இயற்கையில் தோய்ந்த உள்ளமும் சங்கப் புலவர்கள் பெற்றிருக்க வேண்டிய அறிவுப்புலமாக இருந்துள்ளது. இவ்வாறு இயற்கையை மிகநுணுக்கமாகப் பதிவு செய்த புலவர்களை இன்றும் போற்றி நிற்கும் மரபினைக் காணலாம். சங்கச் சமூகத்தில் நிலவிய இயற்கையியல் அறிவும், இயற்கையியலின்வழி வெளிப்படுத்தப்பட்ட பாடுபொருள் தளமும் அற இலக்கியங்களின் படைப்பாக்கத்திற்கு அடிப்படை அலகாக அமையவில்லை. தூய்மையான அறிவுரைத் தரும் போக்கில் அமைந்த அறநூல்களில் இயற்கையியல் அறிவு புலவர்களுக்கு இரண்டாம் நிலையினதாகவே இருந்துள்ளது. இதனை மடைமாற்றம் செய்யும் நோக்கில் அறிவுரை புகட்டுவதற்கும் இயற்கையை ஒரு கூறாகப் படைத்துக் காட்டியவர் திருவள்ளுவர் என்பது அவரது நூலின்வழி புலனாகக் காணலாம். அறநூல்களில் தலையானதாகத் திகழும் திருக்குறளில் இயற்கைப் பொருட்களில் ஒன்றான கடல் பற்றியும் அதனைப் பொருள்விளக்கத்திற்குக் கையாண்ட திருவள்ளுவரின் அறிவுநுட்பம் குறித்தும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.

சங்க வாழ்வில் கடலியல் அறிவு
சங்கத் தமிழர்கள் நீரியல் அறிவுச் சிந்தனையை மிகச்சிறப்பாகப் பெற்றிருந்துள்ளனர். மனித வாழ்வியலுக்கு மிக முக்கியத் தேவையான ஒன்றாக நீர் அமைந்திருப்பதனை அறிந்த்தன்வழி, அதனைத் திறம்பட மேலாண்மை செய்வதற்கும், தேவைப்படும் காலங்களில் அந்நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்குமான அறிவினைக் கைவரப் பெற்றிருந்தனர். இதேபோன்று சங்க மக்கள் வாழ்வில் கடலியல் வாழ்வு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்துள்ளது. நாம் வாழும் உலகம் கடலால் சூழப்பட்டது. கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் நிலமாகக் கருதப்பட்டு, கடலியல் செல்வங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை முறை சங்கத் தமிழர்களிடத்தில் பெருவழக்காக இருந்துள்ளது. இதன்பொருட்டே பூமிப்பரப்பில் பெருமளவினதாக அமைந்திருக்கும் கடலைப் பற்றி சங்கப் புலவர்கள் மிகச்சிறப்பாக அறிந்து வைத்திருந்ததோடு, அதன் தன்மைகளையும், சிறப்புகளையும், பெருமைகளையும் உணர்ந்திருந்து, பாடற்புனைவில் கடலுக்கும், கடல்சார் வாழ்வியலுக்கும் மிகச்சிறப்பான இடத்தினைத் தந்துள்ளனர்.

Continue Reading →

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்

சுப்ரபாரதிமணியன்* ஏப்ரல் மாதக்கூட்டம் 1/4/18.ஞாயிறு  மாலை நடைபெற்றது ..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர். துருவன் பாலா தலைமை வகித்தார் .முன்னிலை: தோழர்கள் எம்.இரவி..,பிஆர் நடராசன்.

“  நொய்யலைக் காப்பதில் பனியன் முதலாளிகள், அரசு அக்கறை காட்ட வேண்டும். நொய்யலைக் காப்பது  பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதில் எழுத்தாளார்களின் பங்கும் அவசியமானது ”  என்று எழுத்தாளர்  காசு வேலாயுதம் பேசினார்.

* நொய்யல் இன்று – கட்டுரைநூல் – எழுதிய கோவை கா.சு. வேலாயுதம் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நூல்கள் வெளியீடு :.* ரமேஷ்குமார் – இந்திக்கதைகள் “ ரஜியா “ நூலை சுப்ரபாரதிமணீயன் வெளியிட  நாக முத்துவேல் ( பேராசிரியர் காரைக்குடி அழகப்பா அரசுக்கலைக்கல்லூரி , காரைக்குடி )  மற்றும் பழனிவேல் ( இந்திப்பேராசிரியர்  பார்க்ஸ்கல்லூரி திருப்பூர் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

* புகைப்படக்கலைஞர் வேணுகோபால்*  பிர்தவுஸ் இராஜகுமாரன்– “ ரணங்கள் “ நாவலை வெளியிட வழக்கறிஞர் ரவி பெற்றுக்கொண்டார்
* நெசவதிகாரம் –  கவிதைகள் -சே. சீனிவாசனின் நூலை சுப்ரபாரதிமணீயன் வெளியிட இயக்குனர் துசோபிரபாகர், தாய்த்தமிழ்ப்பள்ளி தங்கராசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

.* சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த – ஒடியக்கவிதைகள்   ” கான்சிபூரின் நிலவு  “ நூலை எழுத்தாளர் காசு வேலாயுதம் வெளியிட தொழிற்சங்கத் தலைவர்  பிஆர் நடராசன் (  ( பி ஆர் நடராஜன் , தொழிற்சங்கத் தலைவர், தமிழ்நாடு சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள்  சமீதி தலைவர் , திருப்பூர் ) மற்றும்  ஏவிபழனிச்சாமி பொருளாளர் ( தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.          திருப்பூர்  மாவட்டம் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Continue Reading →

வெள்ளிவீதியார் பாடல்களில் சுற்றுச் சூழல் வழி வெளிப்படும் வாழ்வியற் சூழல்

- முனைவர் பா.சத்யாதேவி, உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி,மதுரை. -உலகில் மொழியானது மனித உயிர் தனது அனுபவங்களைக் கருத்துக்களை, நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படும் கருவி ஆகும். மொழி என்ற ஒன்று இல்லையெனில் மனித உயிர்கள் இருக்கும் ஆனால் மனிதச் சமூகங்கள், வரலாறு இருக்காது. எனவே மொழி என்பது மனித உயிர்களை அவர்கள் வாழும் சமூகத்துடனும் நிலத்துடனும் பிணைப்பதாகும். மொழி வழியே சமூகம் இலக்கியம் வரலாறு தோற்றம் பெறுகிறது. இப்பின்புலத்தில் தமிழ்மொழித் தமிழ்நிலம் தமிழ் இலக்கியம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உலக மொழிகளில் தனிச் சிறப்பினைப்பெற்ற தமிழ் மொழியின் தனித்துவத்திற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் காரணமாகின்றன. இச்சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான பாடல்கள் இயற்கையைப் பின்புலமாகக் கொண்டே பாடல்கள் அமைத்து பாடப்பட்டுள்ளன. இயற்கையைப் போற்றிப் பேணிப்பாதுகாத்ததோடு நில்லாமல் அதனுடன் இணைந்த வாழ்வு வாழ்ந்தச் சங்க கால மக்களின் வாழ்வுச் சூழல் ஆராயப்பட வேண்டியதாகும். ஆய்வின் சுருக்கம் கருதி வெள்ளிவீதியாரின் பாடல்கள் மட்டும் ஆய்வு களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சங்க இலக்கியப் பாடல்களில் பல பெண் கவிஞர்கள் பாடல் பாடியுள்ளனர் எனினும் வெள்ளிவிதியாரின் குரல் அழுத்தமான தெளிவான ஒரு பெண்ணின் குரலாகப் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. பெண்ணின் உணர்வு நிலையை வெளிப்படுத்த எண்ணிய வெள்ளவீதி அதற்கு ஏற்றச்சூழலாக அல்லது பின்புலமாகத் தன்னைச் சுற்றியுள்ள வாழ்வுச்சூழலையும் இயற்கைச் சூழலையும் தக்கத்துணையாக எடுத்தாண்டுள்ளார்.

சான்றாக நற்றிணையில் (70) இடம்பெறும் சிறுவெள்ளாங்குருகே! பாடலை குறிப்பிடலாம். தலைவனைப் பிரிந்த தலைவி நாரையைத் தூது அனுப்புவதாகப் பாடல் பாடப்பட்டுள்ளது.

‘‘சிறு வெள்ளாங்குருகே! சிறுவெள்ளாங்குருகே!
துறைபோகு அறுவைத் தும்பி அன்ன
நிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே

—————————————

கழனி நல்ஊர் மகிழ்நர்க்கு என்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே?’’ (நற். : 70)

என்பதில் சிறிய வெளிய நாரையே! நீர்த் துறையில் வெளுத்த வெள்ளாடையில் மாசற்ற மடி போன்ற வெள்ளை நிறமான சிறகுகளையுடைய சிறிய வெளிய நாரையே; நீ எம் ஊரில் வந்து எமது நீர் அருந்தும் துறைகளில் துழாவிக் கெளிற்று மீன்களை உண்கிறாய் பிறகு அவர் ஊருக்குத் திரும்பி போகிறாய். அங்கேயுள்ள இனிய நீர் இங்கே பரவிக்கிடக்கும். வயல்களையுடைய நல்ல ஊரையுடைய என் அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயைச் செப்பாமல் இருக்கிறாய். நீ அத்தகைய அன்புடைய பறவையா? அல்லது மறதியுடைய பறவையா? எனக்கு விளங்கவில்லை எனத் தலைவி கூறுகிறாள்.

Continue Reading →