தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்

சுப்ரபாரதிமணியன்* ஏப்ரல் மாதக்கூட்டம் 1/4/18.ஞாயிறு  மாலை நடைபெற்றது ..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர். துருவன் பாலா தலைமை வகித்தார் .முன்னிலை: தோழர்கள் எம்.இரவி..,பிஆர் நடராசன்.

“  நொய்யலைக் காப்பதில் பனியன் முதலாளிகள், அரசு அக்கறை காட்ட வேண்டும். நொய்யலைக் காப்பது  பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதில் எழுத்தாளார்களின் பங்கும் அவசியமானது ”  என்று எழுத்தாளர்  காசு வேலாயுதம் பேசினார்.

* நொய்யல் இன்று – கட்டுரைநூல் – எழுதிய கோவை கா.சு. வேலாயுதம் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நூல்கள் வெளியீடு :.* ரமேஷ்குமார் – இந்திக்கதைகள் “ ரஜியா “ நூலை சுப்ரபாரதிமணீயன் வெளியிட  நாக முத்துவேல் ( பேராசிரியர் காரைக்குடி அழகப்பா அரசுக்கலைக்கல்லூரி , காரைக்குடி )  மற்றும் பழனிவேல் ( இந்திப்பேராசிரியர்  பார்க்ஸ்கல்லூரி திருப்பூர் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

* புகைப்படக்கலைஞர் வேணுகோபால்*  பிர்தவுஸ் இராஜகுமாரன்– “ ரணங்கள் “ நாவலை வெளியிட வழக்கறிஞர் ரவி பெற்றுக்கொண்டார்
* நெசவதிகாரம் –  கவிதைகள் -சே. சீனிவாசனின் நூலை சுப்ரபாரதிமணீயன் வெளியிட இயக்குனர் துசோபிரபாகர், தாய்த்தமிழ்ப்பள்ளி தங்கராசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

.* சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த – ஒடியக்கவிதைகள்   ” கான்சிபூரின் நிலவு  “ நூலை எழுத்தாளர் காசு வேலாயுதம் வெளியிட தொழிற்சங்கத் தலைவர்  பிஆர் நடராசன் (  ( பி ஆர் நடராஜன் , தொழிற்சங்கத் தலைவர், தமிழ்நாடு சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள்  சமீதி தலைவர் , திருப்பூர் ) மற்றும்  ஏவிபழனிச்சாமி பொருளாளர் ( தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.          திருப்பூர்  மாவட்டம் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Continue Reading →

வெள்ளிவீதியார் பாடல்களில் சுற்றுச் சூழல் வழி வெளிப்படும் வாழ்வியற் சூழல்

- முனைவர் பா.சத்யாதேவி, உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி,மதுரை. -உலகில் மொழியானது மனித உயிர் தனது அனுபவங்களைக் கருத்துக்களை, நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படும் கருவி ஆகும். மொழி என்ற ஒன்று இல்லையெனில் மனித உயிர்கள் இருக்கும் ஆனால் மனிதச் சமூகங்கள், வரலாறு இருக்காது. எனவே மொழி என்பது மனித உயிர்களை அவர்கள் வாழும் சமூகத்துடனும் நிலத்துடனும் பிணைப்பதாகும். மொழி வழியே சமூகம் இலக்கியம் வரலாறு தோற்றம் பெறுகிறது. இப்பின்புலத்தில் தமிழ்மொழித் தமிழ்நிலம் தமிழ் இலக்கியம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உலக மொழிகளில் தனிச் சிறப்பினைப்பெற்ற தமிழ் மொழியின் தனித்துவத்திற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் காரணமாகின்றன. இச்சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான பாடல்கள் இயற்கையைப் பின்புலமாகக் கொண்டே பாடல்கள் அமைத்து பாடப்பட்டுள்ளன. இயற்கையைப் போற்றிப் பேணிப்பாதுகாத்ததோடு நில்லாமல் அதனுடன் இணைந்த வாழ்வு வாழ்ந்தச் சங்க கால மக்களின் வாழ்வுச் சூழல் ஆராயப்பட வேண்டியதாகும். ஆய்வின் சுருக்கம் கருதி வெள்ளிவீதியாரின் பாடல்கள் மட்டும் ஆய்வு களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சங்க இலக்கியப் பாடல்களில் பல பெண் கவிஞர்கள் பாடல் பாடியுள்ளனர் எனினும் வெள்ளிவிதியாரின் குரல் அழுத்தமான தெளிவான ஒரு பெண்ணின் குரலாகப் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. பெண்ணின் உணர்வு நிலையை வெளிப்படுத்த எண்ணிய வெள்ளவீதி அதற்கு ஏற்றச்சூழலாக அல்லது பின்புலமாகத் தன்னைச் சுற்றியுள்ள வாழ்வுச்சூழலையும் இயற்கைச் சூழலையும் தக்கத்துணையாக எடுத்தாண்டுள்ளார்.

சான்றாக நற்றிணையில் (70) இடம்பெறும் சிறுவெள்ளாங்குருகே! பாடலை குறிப்பிடலாம். தலைவனைப் பிரிந்த தலைவி நாரையைத் தூது அனுப்புவதாகப் பாடல் பாடப்பட்டுள்ளது.

‘‘சிறு வெள்ளாங்குருகே! சிறுவெள்ளாங்குருகே!
துறைபோகு அறுவைத் தும்பி அன்ன
நிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே

—————————————

கழனி நல்ஊர் மகிழ்நர்க்கு என்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே?’’ (நற். : 70)

என்பதில் சிறிய வெளிய நாரையே! நீர்த் துறையில் வெளுத்த வெள்ளாடையில் மாசற்ற மடி போன்ற வெள்ளை நிறமான சிறகுகளையுடைய சிறிய வெளிய நாரையே; நீ எம் ஊரில் வந்து எமது நீர் அருந்தும் துறைகளில் துழாவிக் கெளிற்று மீன்களை உண்கிறாய் பிறகு அவர் ஊருக்குத் திரும்பி போகிறாய். அங்கேயுள்ள இனிய நீர் இங்கே பரவிக்கிடக்கும். வயல்களையுடைய நல்ல ஊரையுடைய என் அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயைச் செப்பாமல் இருக்கிறாய். நீ அத்தகைய அன்புடைய பறவையா? அல்லது மறதியுடைய பறவையா? எனக்கு விளங்கவில்லை எனத் தலைவி கூறுகிறாள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 279 : பால்ய காலத்து அனுபவங்கள் – மறக்க முடியாத ஆளுமை – ‘ராஜு அங்கிள்’

ராஜு அங்கிள்என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களைப்பற்றி எண்ணியதும் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக என் நினைவில் நிற்பவர் ‘ராஜு அங்கிள்’ என்றழைக்கப்படும் ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை. இவர் என் அம்மாவின் கடைக்குட்டித்தம்பி.  அவருக்கும் அம்மாவுக்குமிடையில்  பதினெட்டு வயது வித்தியாசம். ஆச்சி பதின்ம வயதிலிருந்தே இல்லறபந்தத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர். அதன் விளைவு இவ்வயது வித்தியாசம். அம்மா இவரைத் தன் தம்பி என்று பார்த்ததை விடத் தனது இன்னுமொரு மகன் போன்றே எப்பொழுதும் கருதி வந்தாரென்று நான் உணர்வதுண்டு. அம்மாவின் இளமைக்காலப்புகைப்படமொன்றில் அம்மாவுடன் காற்,சட்டையுடன் இவரிருந்த புகைப்படமொன்றினைப் பார்க்கும் எவரும் அவ்விதமே கருதுவர். இவர் அம்மாவுக்கு  மட்டுமின்றி அம்மம்மா, அம்மாவின் ஏனைய சகோதர, சகோதரிகள், அம்மப்பா யாவருக்குமே செல்லப்பிள்ளைதான். குறிப்பாக அம்மப்பாவின் மிகுந்த பிரியத்துக்குரிய கடைக்குட்டி பையனாக இருந்ததால், அவருடன் எப்பொழுதும் அவரது ‘நாஷ்’ காரில் இவர் திரிவார். சில சமயங்களில் அதில் நண்பர்களுடன் நகரை வலம் வருவதுண்டு. அம்மாவின் இன்னுமொரு தங்கையின் திருமணத்தின் போது அக்காரில் யாழ்நகரில் எங்களையெல்லாம் ஏற்றி விரைவாக ஓட்டிச்சென்றது இன்னும் ஞாபகத்திலுள்ளது. அம்மப்பாவின் இறுதிக்காலத்திலும் கூட எந்நேரமும் அவருடன் அவரது மரணம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்தவர் இவர். அம்மா எவ்விதம் இவரைத் தம்பி போன்று கருதாமல், மகன் போன்று கருதினாரோ அவ்வாறே நாங்களும் இவரை மாமா முறையென்றாலும் கூட அவ்வாறு கருதுவதில்லை; எங்களது நண்பர்களிலொருவரைப்போன்றுதான், மூத்த அண்ணர்களிலொருவரைப்போன்றுதான் கருதினோம்; பழகி வந்தோம். அவரும் எங்களுடன் அவ்விதமே மிகவும் இயல்பாகப் பழகி வந்தார்; வருகின்றார்.

இவர் சிவாஜியின் ‘புதிய பறவை’, ‘ஆலயமணி’ திரைப்படங்கள் வெளியான காலகட்டத்து இளைஞர்களிலொருவர் என்பதால் சிகரட் பிடிப்பதிலிருந்து, தோள்களைக் குலுக்கிச் சிரித்துக் கதைப்பதிலிருந்து அன்றிலிருந்து இன்று வரை அதே சிவாஜி ‘ஸ்டைலை’ப் பின்பற்றி வருபவர். 1970இலேயே கனடாவுக்கு வந்து விட்டார். அதற்கு முக்கிய காரணங்களிலொன்று: அக்காலகட்டத்தில்தான் அம்மப்பாவின் மறைவும் நிகழ்ந்தது. அம்மப்பாவின் சகோதரர் ஒருவருக்கும் இவர் மீது மிகுந்த பிரியம் இருந்தது. அவர் சிறிது காலம் புளியங்குளத்தில் இருந்த தனது பண்ணையொன்றை இவரது பொறுப்பில் விட்டுப் பார்த்தார். ஆனால் அது வெற்றியளிக்கவில்லையென்றே கூறுவேன். எப்பொழுதும் நண்பர்களுடன் ‘ஜாலி’யாக நகரத்தில் திரிந்த இவருக்கு வன்னிக்காட்டுப் பகுதி ஒத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வாரமும் அடிக்கடி அம்மாவிடம் , அப்பொழுது அம்மா வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார், ‘அக்கா, அக்கா’ என்று ஓடி வந்து விடுவார்.
அப்பொழுதுதான் நான் அப்பா வீட்டில் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் தமிழக வார, சஞ்சிகைகளில் என்னை மறந்து வாசிப்பதில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தேன். ஒருமுறை அம்மாவிடம் வரும்போது அழகாக ‘பைண்டு’ செய்யப்பட்டிருந்த , கல்கியில் தொடராக வெளியான அகிலனின்  ‘வேங்கையின் மைந்தன்’ நாவலைக் கொண்டு வந்திருந்தார். அதன் மூலமே எனக்கு எழுத்தாளர் அகிலன் அறிமுகமானார்.

Continue Reading →

நேர்காணல்: பிரபல தமிழ் -சிங்கள மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களுடனான கலந்துரையாடல். நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன்.

ஜி.ஜி.சரத் ஆனந்த– பிரபல தமிழ் -> சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், சிங்கள எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த  அவர்களுடன் அண்மையில் ‘பதிவுகள்’ இணைய இதழானது மின்னஞ்சல் வாயிலாக நேர்காணலொன்றினை நடாத்தியது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு சரத் ஆன்ந்த அவர்கள் விரிவான பதில்களை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு எமது முதற்கண் நன்றி. இந்நேர்காணலில் அவர் தன்னைப்பற்றி, தான் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, மொழிபெயர்க்க எண்ணியுள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, இவ்வகையான மொழிபெயர்ப்புகள் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வுக்கும், புரிந்துணர்வுக்கும் ஏன் அவசியமானவை என்பது பற்றி, சமகாலச் சிங்கள கலை, இலக்கியச் செயற்பாடுகள் பற்றி, தான் ஏன் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்தார் என்பது பற்றி, தற்போதுள்ள நாட்டின் அரசியற் சூழல் பற்றி, நாட்டின் எதிர்காலம் பற்றி.. இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றியும் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.

இணையம் மூலம், குறிப்பாக முகநூல் வாயிலாக நாம் அடைந்த பயன்கள் ஆரோக்கியமானவை என்பதற்கு இவரைப்போன்ற கலை, இலக்கியவாதிகளுடனான தொடர்புகள், கருத்துப்பரிமாறல்களே பிரதான சான்றுகள். இவரது மொழிபெயர்ப்பில் எனது சிறுகதைகளான  ‘உடைந்த காலும், உடைந்த மனிதனும்’, மற்றும் ‘நடு வழ்யில் ஒரு பயணம்’ ஆகியன லக்பிமா’ சிங்களப் பத்திரிகையின் வாரவெளியீட்டில் வெளியாகியுள்ளன. எனது ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூலினையும் மொழிபெயர்ப்பதில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

2003 இருந்து இதுவரை இவர் 11 சிறுகதைத் தொகுப்புகளும், 3 நாவல்களும், ஒரு சிறுவர் கதைத் தொகுப்பும், ஒரு கவிதை நூலும் மற்றும் பேராசிரியர் அ. மார்க்‌ஸ் அவர்களின் ‘புத்தம் சரணம்’ என்ற பௌத்த ஆய்வு நூலையும்  சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன்  சிங்கள் மொழியில் வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில்  200  சிறுகதைகள் வரையில் இவரது மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. இவ்விதமான நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகளின் தேவை தற்காலச்சூழலில் மிகவும் அவசியமென்று ‘பதிவுகள்’ கருதுகின்றது. அதனால் இந்நேர்காணலை வெளியிடுவதில் பெருமையுமடைகின்றது.


1. முதலில் உங்களைப்பற்றிய அறிமுகமொன்றினைத் தாருங்கள். உங்களது எழுத்துப்பணியின் ஆரம்பம், குடும்பம் போன்ற விடயங்கள்..?

நான் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராம (Tissamaharama) நகரத்தில் பிறந்தேன். பிறந்த திகதி 20/06/1972. அப்பா ஒரு விவசாயி. அம்மாவுக்குத் தொழில் இல்லை. (ஒரு குடும்பப் பெண்.) இப்போது அவர்கள் உயிருடனில்லை. மறைந்து விட்டார்கள். எனக்கு எட்டு சகோதர, சகோதரிகள். நான் தான் கடைக்குட்டி. இளையவன். நெதிகம்வில (Nadigamwila) என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். திஸ்ஸமஹாராம – தெபரவெவ (Debarawewa) தேசீய கல்லூரியில் படித்தேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிப்புற மாணவனாக இளங்கலைப் (B.A) பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் (M.A) பட்டமும் பெற்றுள்ளேன். திருமணமாகிவிட்டது. மனைவியின் பெயர் ஸுமித்ரா. ஆரம்பத்தில் ‘லக்பிம’ சிங்கள பத்திரிகையின் நிருபராகப்பணியாற்றினேன். அதுவே என் முதற் தொழில்.

சிறிது காலம் திஸ்ஸமஹாராம பிரிவேனாவில் ஓர் ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். 2005 ஆண்டிலிருந்து) ‘காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தில்’ (Department of Land Title Settlement)  ஓர் அபிவிருத்தி உத்தியோகத்தராக (Development officer)  வேலை பார்த்து வருகின்றேன்.

பாடசாலைக் காலத்திலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றேன். அவை பல பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. அவற்றில் சில இலக்கிய போட்டிகளில், சான்றிதழ்கள், பரிசுகள் பெற்றுள்ளன. ஆதலால் ஆர்வம் அதிகரித்தது. அப்படி தான் நான் இலக்கியத் துறைக்கு வந்தேன்.

2. தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? தமிழ் மொழியைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? இவ்வகையான ஆர்வம் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்டிய விடயங்கள் யாவை?

Continue Reading →

அஞ்சலி: மானுட விடுதலை பாடிய கவிஞன் தம்பி தில்லை முகிலன் மறைவும், முகநூலும்!

கவிஞர் தம்பி தில்லை முகிலன்கவிஞர் தம்பி தில்லை முகிலனைப்பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச்சேர்ந்த இவரது அகால மரணம் பற்றிய நண்பர் சிவா முருகுப்பிள்ளையின் முகநூற் பதிவின் பின்னரே இவரைப்பற்றி அறிந்து கொண்டேன். இவரது மறைவைப்பற்றிய பாலசிங்கம் சுகுமார் அவர்களின் முகநூற் பதிவு இவரது கலை, உலக மற்றும் சமூக, அரசியற் செயற்பாடுகளை நினைவுகூர்ந்திருந்தது. இவரது முகநூலுக்குச் சென்று பார்த்தேன். கலாபூஷணம் விருதினைபெற்ற இவருடனான நேர்காணல்கள் வெளியான பத்திரிகைகளின் புகைப்படங்களைப் பார்த்தேன். அதன் பின்னர் இவரது அண்மையப் பதிவுகளைப் பார்த்தேன். மார்ச் 30 எழுதிய பதிவில் பின்வரும் கவிதையினைப் பதிவு செய்திருந்தார்:

“வாதம் நிதம் வளம் காண
தினம் மோதலாகத் தொடரட்டும்.
பேதமழிக்க யாவரும்
பொதுமை காண ,
மனிதர் இனிமை காண,
வாதம் நிதம் தொடரட்டும்.”

மானுட சமுதாயத்தில் பேதங்கள் நீங்க, பொதுமை காண (பொதுமைக்குப் பல கருத்துகளுள: இனிமை, பொதுவுடமை என) வாதம் நிதம் மோதலாகவாவது தொடரட்டும் என்று அறை கூவல் விடுக்கின்றார். இதனை எழுதியபோது மணி காலை 8.20.

இவ்விதம் மானுட சமுதாய முன்னேற்றத்துக்காக அறை கூவல் விடுத்த கவிஞர் தம்பி தில்லை முகிலன் , மார்ச் 31 இரவு 10.02 மணிக்கான இரு பதிவுகளில் பின்வருமாறு எழுதுகின்றார்:

பதிவு ஒன்று: “இருப்பதற்கு விருப்பமில்லை என் இருப்பை என்னவர் என்போரும் விரும்பவில்லை ஏன் இருப்பான் என்பதில் எழும் கேள்விக்குப் பதில் இறப்பதே சரி ஆகவே எனக்காக யாரும் கவலைப்படாதீர். ஒருவன் சொன்னதைச் சொன்னேன் சரியா பிழையா சொல்வீர். ஒருவர் இல்லை இன்று பத்தில் எட்டுப்பேர் சொல்வது தான். பற்றும் பாசமும் அற்றுப்போன காலமிது. செத்துப் போனால் என்ன? நடமாடும் பிணமாகத்தானே நாளும் பலர் இங்கு வாழ்கிறார்? பிறப்பைவிட இறப்பே இப்போ பெரிது. விடுதலை.”

பதிவு இரண்டு: “செல்கின்றேன் கவலைப் படாதீர்கள். போதுமானது வாழ்கை. பிறருக்கு வாழ்வதே பிறவிப்பயன் என்பார். என்னால் பிறருக்கு வாழமுடியாது உள்ளது. உயிர்தான் உள்ளது. அதனால் எவருக்கும் ஒன்றும் செய்ய முடியாது. என்னை என்நிலை அறிந்தவர் செத்துப்போ என்றும் சொல்வதும் உண்டு. அது பற்றின் காரணம். இப்போ பற்றும் பாசமும் இடையூறாய் இருப்பது உண்மைதானே. அதனால் இறப்பை நாமே தேடுவது சரியா? பிழையா? என்நிலையில் சரியே.”

இவ்விதமிட்ட கவிஞரின் முகநூற் பதிவானது அவரது முகநூல் நண்பர்கள் மத்தியில் திகைப்பினை ஏற்படுத்தியதை இப்பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பர்களின் எதிர்வினைகளிலிருந்து தெரிய வருகின்றது.

நண்பர் பாலசிங்கம் சுகுமார்: “என்ன”

Jasothsrabanu Shekar என்பவரும் பதிவு புரியாமல் கேட்கின்றார்: “என்ன?’

நாகசோதி தங்கவேல் என்னும் நண்பருக்கு விடயம் புரிந்திருக்கின்றது. எனவே அவர் கவிஞருக்கு ஆறுதலும், ஆரோக்கியமான ஆலோசனையும் கூறுகின்றார்: “சொல்பவர்கள் சொல்லட்டும் எல்லோர் விருப்பத்திற்கும் வாழ விரும்பினால் எம்மால் வாழ முடியாது, நீங்கள் இன்னும்பல ஆண்டுகள் தமிழுடனும் கவியுடனும் ஆரோக்யமாக வாழவேண்டும் இறைவன் துணையிருப்பார்.”

Continue Reading →

ஆங்கில மொழிபெயர்ப்பில் வ.ந.கிரிதரனின் இரு கவிதைகள்!

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.-அண்மையில் ‘குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி’ என்றொரு எனது கவிதையை இங்கு பிரசுரித்திருந்தேன். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் (ரிஷி)  அனுப்பியிருந்தார்.  அது போல் முனைவர் ர.தாரணி அவர்கள் எனது ‘தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை’ என்னும் கவிதையினை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருந்தார். அவர்களிருவருக்கும் நன்றியினைக் கூறுவதுடன் அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.. – வ.ந.கிரிதரன் –

Poem: A message for  Stallion-Stealers!  – V.N. Giritharan –   Translation  in English by Latha Ramakrishnan

Hei you, the Stallion-Stealers!
Here is a message for you.
I am a caretaker of horses.
Not a trader.
A genuine, straightforward caretaker.
I have so many sturdy stallions with me.
Indeed all of them are real good.
They are not lame ones.
I have great affection for
all the horses in my possession
I treat them with no discrimination.
I am not one to rear or sell crippled horses
Still – Hei you, the Stallion-Stealers!
You’ve become more troublesome.

Continue Reading →

பெண்களும் மன அழுத்தமும்

பெண்களும் மன அழுத்தமும்- ஸ்ரீரஞ்சனி -“மன நலம் மன்னுயிர்க் காக்கம்” என்கிறார், வள்ளுவர்.

மனநலம் என்பது மனநலப் பிரச்சினை இல்லாதநிலை எனப் பொருள்படாது. வாழ்க்கையை அனுபவிக்கவும் அதன் சவால்களுக்கு முகம் கொடுக்கவும்கூடிய ஒரு திறனே மனநலம் ஆகும். தனிப்பட்ட ஆளுமை, சூழல் மற்றும் சமூக, பொருளாதாரக் காரணிகள் ஒருவரின் மனநலத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. உணர்ச்சிகளைக் கையாளக்கூடிய திறனும், சமூகத் தொடர்புகளும் மனநலத்தைப் பேணுவதற்கு ஒருவருக்கு அவசியமானவையாக இருக்கின்றன. ஒருவருடைய நல்வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது ஒருவரால் கையாள முடியாத ஒரு நிலைமை stress அல்லது மன அழுத்தம் எனப்படுகிறது. தேவைக்கும் இருப்புக்கும் இடையிலுள்ள சமனின்மை அல்லது கையாளக்கூடிய திறனை மீறிய ஒரு நிலையே – மன அழுத்தம் என்கிறார், உளவியலாளர் – Richard S. Lazarus.

அச்சுறுத்தல் அல்லது அபாயம் ஒன்றிருப்பதாக ஒருவர் உணரும்போது, மன அழுத்தம் அவரது உடலின் இயல்பான எதிர்வினையாக அமைகிறது. உடல் வலி, துன்புறுத்துகின்ற ஒரு நெருங்கிய உறவு போன்ற வெளிப்புறக் காரணியாகவோ அல்லது நோய், பதற்றம் போன்ற உள்புறக் காரணியாகவோ அது இருக்கலாம். அந்நிலையில், அதிரினலீன், கோட்டிசோல் எனப்படும் இரசாயனப் பொருள்களை உடல் அதிகளவில் சுரக்கிறது. அவை அதிகரித்த இதயவடிப்பு, வியர்வை, இறுகிய தசைகள் என்பவற்றை விளைவாக்குகின்றன. அந்த அபாயகரமான அல்லது சவாலான நிலைக்கான பதிலளிப்பை மேம்படுத்துவதற்கு இந்தச் செயல்கள் யாவும் உதவுகின்றன. 

உதாரணத்துக்கு வீதியைக் கடந்துகொண்டிருக்கும்போது கார் ஒன்று வேகமாக வருகிறது எனில் அது எங்களைக் காயப்படுத்தலாம் என்ற எங்களுடைய சிந்தனை, பயம் என்ற உணர்ச்சியை வரவழைக்க, சுரக்கப்படும் அந்த ஓமோன்கள் பதற்றமும் பரபரப்புமாக அவ்விடத்தை விட்டு உடனே வேகமாக ஓடுவதற்கான செயலாக்கத்தை எங்களில் விளைவாக்குகின்றன. இங்ஙனம். ஏதோ ஒருவகையில் எங்களில் மன அழுத்தத்ததை ஏற்படுத்தக்கூடிய ஒரு தூண்டியை நாங்கள் அனைவருமே அடிக்கடி சந்திக்கின்றோம். அது நேரமின்மையால் அல்லது முயற்சி பயன் அளிக்காமையால் உருவானதாகதாகவோ அல்லது உறவுப் பிரச்சினையால் அல்லது உரிமை கோரல் போராட்டத்தால் ஏற்பட்டதாகவோ இருக்கலாம்.

இந்தச் சிந்தனை, உணர்ச்சி, செயல் என்ற மூன்றும் ஒரு முக்கோணத் தொடர்பில் இயங்குகின்றன. சிந்தனை, உணர்ச்சி அல்லது செயலுக்குக் காரணமாகலாம்; அதே போல உணர்ச்சி, சிந்தனை அல்லது செயலுக்குக் காரணமாகலாம்; செயல், சிந்தனை அல்லது உணர்ச்சிக்குக் காரணமாகலாம்.

Continue Reading →