ஆய்வு: முதுவர் இனப் பழங்குடிகள் – ஓர் அறிமுகம்

ஆய்வு: முதுவர் இனப் பழங்குடிகள் – ஓரு அறிமுகம்முன்னுரை
இயற்கையின் மக்களான மானிடர்களின் வாழ்க்கையானது பிறப்பு முதல் இறப்புவரை ஏதோ ஒருவிதத்தில் ஒன்றிக்காணப்படுகிறது. இன்பமும் துன்பமும் இணைந்தது மனிதவாழ்வு என்றாலும், மக்கள் வாழ்கிற சூழலுக்கும் கிடைக்கப் பெறுகிற வசதிகளுக்கும் ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறை மாற்றமுள்ளதாகக் காணப்படுகிறது. உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகள் கூட அவரவர் வாழும் நிலைக்கேற்ப வேறுபட்டு விளங்குகின்றன. மனிதனின் அறிவு நிலைக்கேற்ப அவன் பேசும் சைகையிலிருந்து திருந்திய நிலை வரை மாற்றமுள்ளதாகக் காணப்படுவதைப் போன்று மக்களின் வாழ்க்கை நிலையும் மாற்றமுள்ளதாக அமைகிறது. அந்த வகையில் பழங்குடி மக்களான முதுவர் வாழ்வியல் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.

முதுவர் அறிமுகம்
கேரள மலைகளிலே வாழும் ஏனைய மலையின மக்களோடு ஒப்பிடுகையில் முதுவர் பழங்குடி மக்களே ஆதிமுதற்கொண்டு வாழ்ந்து வருவதாகக் கருதுகின்றனர். இப்பழங்குடியினர் கேரளத்தில் இடுக்கிமாவட்டத்தில் 87 இடங்களிலும், தமிழ்நாட்டில் ஆனைமலை, மதுரை, போடிநாயக்கனூரைச் சேர்ந்த மலைப்பகுதிகளிலும் வாழ்ந்துவருகின்றனர். “கேரளாவில் வசிக்கக்கூடிய முதுவர்கள் – மலையாள முதுவன் என்றும், தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய முதுவன் பாண்டிய முதுவன் என்றும் அழைக்கப்படுகின்றனர்” என்று ஜோஸ்வா தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்பழங்குடியின மக்கள் கேரளத்திலும், தமிழகத்திலும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

முதுவர் இனம்
முதுவர் இனம் என்பது நெருங்கிய உறவினரிடையே மணம் செய்து கொள்ள மக்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படும் ஓர் இயல்பாகும் என்ற மானிடவியலறிஞரின் கருத்திற்கேற்ப முதுவர் பழங்குடியினர் பிற பழங்குடியினரிடமிருந்து வேறுபட்ட பண்புநலன்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். தேனீக்கள் மனித இனங்கள் என்னும் நூலில், ஆனைமலையில் வாழும் மலைமக்களும் திருவிதாங்கூர் – கொச்சிக்காடுகளில் வாழ்ந்துவரும் நாகரிகமடையாத மக்களும் திராவிட இனத்தைச் சார்ந்தவராவர் என்று எல்.ஏ.கிருஷ்ணஐயர் குறிப்பிடுகின்றார். இப்பழங்குடியினர் நீக்கிரிட்டோஸ் (Negritos) இனத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. முதுவர் கலப்பினத்தவர் என்று மாக்கே குறிப்பிடுகின்றார். தர்ஸ்டனும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். இப்பழங்குடியினர் உயர் சாதியினராகக் கருதப்படும் பிரமாணர், நாயர், தேவர், அகமுடையார், வெள்ளாளர் போன்ற இன மக்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். தங்கள் இனப் பெண்கள் மேற்குறிப்பிட்ட இனத்தாருடன் மண உறவு கொண்டாலும் திரும்பவும் தங்கள் இனத்தாருடன் சிறிது காலம் கழித்து சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்கின்றனர். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் புலையர், மலைப்புலையன், காடர், வேடர் மன்னான் போன்ற இனமக்களைத் தங்கள் வீட்டில் அனுமதிப்பதோ, அவர்களிடமிருந்து பொருட்களை உண்பதோ இல்லை என்கின்றனர்.

Continue Reading →

தமிழக இலக்கியச் செய்திகள் – மே 2018 – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்

- சுப்ரபாரதிமணியன் -” நகரமயமாக்கல், உலகமயமாக்கலால் சுற்றுச்சூழல் சீர்கேடும்,  சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இதை எழுத்தாளர்கள் எழுத்தில் வெளிபடுத்தியும்  வாசகர்கள் அதையுணர்ந்து இயறகையை மேம்படுத்தவும் சிந்தனைகளைக் கொள்ளவேண்டும்..இன்றைய மத , சாதியச் சூழலில் மனித நேயத்துடனான படைப்புகளையும் செயல்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். மானுடம் மேன்மையடைய கலை இலக்கியப்பயன்பாடுகள் இருக்கவேண்டும்  ” என்று சக்தி விருதுகள் 2018 பரிசளிப்பு விழாவில் சிறப்புரை: ஆற்றிய தோழர் பொன்னீலன் ( சாகித்ய அகாதமி பரிசுபெற்றவர் மற்றும்   இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத்தலைவர் ) அவர்கள் குறிப்பிட்டார் .

திருப்பூர்  சக்தி விருது 2018 – வழங்கல்   நிகழ்வு –  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,  திருப்பூர்  மாவட்டம் 6/5/18. ஞாயிறு  அன்று (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் நடைபெற்றது. 2 நூல்கள் வெளியீடப்பட்டன. நூல்களைப் பொன்னீலன், இந்திய .கம்யு. மாவட்டச்செயலாளர் ரவி ஆகியோர் வெளியிட்டனர்.

1. சுப்ரபாரதிமணியன்- ” மணல் ” சிறுகதைத் தொகுப்பு
2. பேரா. அறச்செல்வி தொகுத்த “ ஒற்றைக் கால் தவம் “ சிறுகதைத் தொகுப்பு

கீழ்க்கண்டோர் சக்தி விருது 2018- ,படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, சமூக சேவை, ஓவியம், அயலக இலக்கியம் ஆகிய பிரிவுகளில் விருது பெற்றபின்  பெண் படைப்புலகம் என்ற தலைப்பில் உரையாற்றினர்:

லட்சுமி அம்மா –தஞ்சாவூர், இன்பாசுப்ரமணியன் –சென்னை, உமா மோகன் –பாண்டி, பத்மபாரதி –பாண்டி, இரா. ஆனந்தி , ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி –சென்னை, : ஸ்ரீலதா-சென்னை , கேவி சைலஜா- திருவண்ணாமலை, மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்-  ஹைதராபாத், சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி, துடியலூர் வித்யா –கோவை, வியாகுலமேரி, ரமாராஜேஷ்-திருப்பூர்  , சாந்தகுமாரி சிவகடாட்சம் –சென்னை.

அயலகம்: முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன்( கனடா) , எம் எஸ்.லட்சுமி,  சீதாலட்சுமி ( சிங்கப்பூர் ), உ.சரசு, பாமா( மலேசியா ), லாவண்யா-அமெரிக்கா.

ஸ்ரீலட்சுமி ( திரைப்பட நட்சத்திரம் )  ராசி அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி ( திரைக்கதை நூல் ) வெளியீட்டில் பங்கேற்று தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் .

நடுவர்களாக இருந்து எழுத்தாளர்களை  தேர்வு செய்த வழக்கறிஞர்கள் சி. இரவி, சுகன்யா, சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் தேர்வு அனுபங்களை விளக்கினர்.

நூல்கள் அறிமுகம் : கீழ்க்கண்ட   நூல்கள் பற்றி  முத்துபாரதி  பேசினார்.

ஒரு பாமரனின் வாழ்க்கை- ஆர்கேலட்சுமணன்( தமிழில் :புதுவை யுகபாரதி )
சதுர பிரபஞ்சம் –கோ.வசந்தகுமாரன் கவிதை நூல்
தேதி குறிக்கப்பட்ட வனம்- வையவன் கவிதை நூல்
பாரதியார் பன்முகங்கள்-கேஎஸ் சுப்ரமணியன் கட்டுரைகள்  ( தொகுப்பாக்கம் : லதா ராமகிருஷ்ணன் )

Continue Reading →