எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு பற்றிய செய்தியைப் பலர் முகநூலில் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எண்பதுகளில் தமிழகத்து வெகுசன இதழ்களில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர். தமிழ்த்திரையுலகிலும் கால் பதித்தவர். இவர் வெகுஜன இதழ்களில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் நான் வெகுசன இதழ்களை விட்டு விலகி விட்டிருந்தேன். அவ்வப்போது பார்ப்பதோடு சரி. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் படைப்புகள் ஏதும் வந்தால் மட்டும் வாங்குவதுண்டு. அதனால் பாலகுமாரனின் எழுத்துகள் எவையும் என்னைக் கவர்ந்திருக்கவில்லை. கல்கி, நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், அகிலன், ‘நைலான் கயிறு’, ‘அனிதா இளம் மனைவி’ காலத்து சுஜாதா, மீ.ப.சோமு, ர.சு.நல்லபெருமாள், பி.வி.ஆர், .. என்று வெகுசன இதழ்களில் ஆதிக்கம் செலுத்தியவர்களுக்குப் பிறகு என்னை பிறகு உருவான வெகுசன எழுத்தாளர்கள் எவருமே கவரவில்லை. ஆனால் வெகுசன எழுத்துகளை வழங்கிய, வழங்கும் எழுத்தாளர்கள் மேல் மதிப்பு வைத்திருப்பவன் நான். வாசகர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டியவர்கள், தூண்டுபவர்கள் இவர்கள். அவ்வகையில் இவர்களது படைப்புகள் முக்கியமானவை.
– இக்கட்டுரை குளோபல்தமிழ்நியூஸ்.நெற் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை. நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள் –
– கட்டுரையாளரான முனைவர் ஜூட் லால் பெர்ணாண்டோ (Dr Jude Lal Fernando) டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சார்ந்த ஐரிஸ் ஸ்கூல் ஆஃப் எக்குமெனிக்ஸில் அமைதி மற்றும் இணக்க மேம்படுத்தல் துறையில் உயராய்வு மேற்கொள்வதோடு அங்கு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். இலங்கையின் களனியிலுள்ள துலானா என்னும் மதம் சார்பான உரையாடல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர். டிரினிட்டி கல்லூரியில் 2010இல் இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர். –
அறிமுகம்
மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.
எண்ணிலடங்காத மரணங்கள்
ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் (LLRC) முன்னால் சான்று வழங்கிய மன்னார் ஆயர் 1,46,679 தமிழர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை இலங்கை அரசால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வத் தரவுகளிலிருந்து அவர் பெற்றுள்ளார்.
இத்தகைய அதிர்ச்சியூட்டும் வகையிலான பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய உண்மையை எவ்வாறு சரியாக அரசியல் சிந்தனையில் எடுத்தியம்ப முடியும்? சர்வதேசச் சட்டம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு, அமைதிக்கெதிரான குற்றம் ஆகியன உள்ளிட்ட சட்ட, கோட்பாட்டு வகைப்பாடுகளை முன்வைக்கிறது. இந்த வகைப்பாடுகளுக்கேற்ப இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகளை எடுத்துரைத்தால் அது புனரமைப்புக்கும் மீளலுக்கும் எத்தகைய முன்னெடுப்புகள் தேவையென்பதைத் தீர்மானிக்கும்.