வாசிப்பும், யோசிப்பும் 287 : யாழ் கோட்டையில் இராணுவமுகாமும், இலங்கையின் எதிர்காலமும்; யாழில் தலைவிரித்தாடும் வன்முறைகளும், சண்டியர்களும்!

யாழ்  கோட்டைக்குள் இராணுவ முகாம்புத்தரின் கண்ணீர்‘ட்விட்ட’ரில் கண்ட இச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. யாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தரின் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இலங்கைத் தொல்லியற் திணைக்களம் அனுமதியளித்துள்ளதாம். அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் புகைப்படங்களையும் அச்செய்தியில் காண முடிந்தது. கரிகாலன் garikaalan‏ @garikaalan என்பவரின் ‘ட்வீட்’ இது. ஆச்சரியமென்னவென்றால் முகநூலில் இது பற்றிய செய்திகள் எதனையும் கண்டதாக நினைவிலில்லை. இச்செய்தி உண்மையாகவிருக்குமானால் இலங்கை அரசு தவறிழைக்கின்றதென்றே கூற வேண்டும். யாழ்நகரின் மத்தியில் கோட்டைக்குள் இராணுவமுகாம் அமைப்பதே முட்டாள்தனமானது. காலம் மீண்டுமொருமுறை ஆயுதபோராட்டமொன்றினை உருவாக்குமானால் (தென்னிலங்கையில் முதற் புரட்சியில் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டெழுந்து பதினேழு வருடங்களுக்குப் பின்னர் ஆயுதப்புரட்சி செய்யவில்லையா) மீண்டும் அன்று மாதிரி கோட்டை மீதான முற்றுகைக்குள் சிக்கப்போவது இம்முகாம் இராணுவத்தினரே..

உபகண்ட அரசியலில் இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த மாட்டாது என்பதற்கு உத்தரவாதமெதுவுமில்லை. இலங்கை எவ்வளவுக்கு எவ்வளவு சீனாவின் பிடிக்குள் செல்கின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் தனது துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தவே முனையும். மேலும் களத்தில் விடுதலைப்புலிகளுமில்லை. இந்தியாவின் சார்பு முன்னாள் ஆயுதப்போராட்ட அமைப்புகளே உள்ளன. எனவே இந்தியா மிகவும் இலகுவாக இலங்கைப் பிரச்சினைக்குள் உள் நுழைய முடியும்.

இலங்கையின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் புத்திசாலிகளென்றால் இலங்கைத்தமிழர் பிரச்சினையை முற்றாகத் தீர்த்து வைப்பார்கள். அதன் மூலம் இந்தியாவின் அழுத்தங்களிலிலிருந்து தப்பலாம். இதுபோன்ற இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் மீண்டும் இலங்கையை யுத்த பூமியாகவே மாற்றும். ஜே.வி.பி.க்கு மீண்டும் உயிர்த்தெழ சுமார் 17 வருடங்கள் பிடித்தது. தமிழர்களின் யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகளே கடந்துள்ளன. இன்னும் எட்டு ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடக்கலாம்? யார் கண்டது?

Continue Reading →