ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா திருப்பூரில் சேவ் அலுவலகம், ( கலைஞர் அறிவாலயம் அருகில்)5, அய்ஸ்வர்யா நகர், அரசு பொது மருத்துவமனை அருகில்., தாராபுரம் சாலையில் 12/1/2020 அன்று நடைபெற்றது . திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, ( Federation of Film Societies of India ) , கனவு – “ சேவ் “ இணைந்து நடத்தின விழாவில் திரைக்கதையாசிரியர் கதிர் பேசுகையில் “ஒரு திரைப்படத்திற்கு நூறு சதவீதம் அடிப்படை பலமாக விளங்குவது திரைக்கதையாகும். திரைக்கதையை பயிலும் இளைஞர்கள் நல்ல புத்தகங்களை, நாவல்களை, இலக்கியப்படிப்புகளை தொடர்ந்து வசிக்க வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டார்.
துவக்க உரை யாற்றிய ஆவணப்பட இயக்குனர் சந்தோஷ் கிருஷ்ணன் “ஈரானில் இப்போது போர் சூழல் நிலவுகிறது. பலமுறை போர் சூழலால் பாதிக்கப்பட்ட ஈரானின் பல திரைப்படங்கள் போருக்கு எதிரான ஆவணங்களாக அமைந்துள்ளன. ஈரான் சமூகவியலை சரியாக பிரதிப்லிக்கிற கண்ணாடிகளாக அவை விளங்குகின்றன” என்று எடுத்துரைத்தார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் உரையில் ” ஈரானிய அரசியல் சிரமங்கள் , மதக் கட்டுப்பாடுகள், கடுமையான தணிக்கைமுறை, போன்ற சாவல்களைத் தாண்டி தனித்துவம் கொண்டவை ஈரானிய திரைப்படங்கள். உலக அளவில் பெரும் கவனிப்பையும், பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருபவவை . சாமானிய மக்கள் சார்ந்த எளிமையான கதைக் கருக்களை வலிமையாய் பயன்படுத்தி தீவிரமாய் எடுக்கப்படுகின்றன” என்று சுட்டிக்காட்டினார்.