ஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் !

ஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் !

பொங்கலென்று சொன்னாலே
பூரிப்பும் கூடவரும்
மங்கலங்கள் நிறையுமென்று
மனமதிலே தோன்றிவிடும்
சங்கடங்கள் போவதற்கும்
சந்தோசம் வருவதற்கும்
பொங்கலை நாம்வரவேற்று
புதுத்தெம்பு பெற்றிடுவோம் !

Continue Reading →

நூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..

நூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..நூலகம் நிறுவனம் இப்பொங்கல் திருநாளன்று பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்து பதினாறாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்றது. மனம் நிறைந்த வாழ்த்துகள். தற்காலச்சூழலில், இலங்கைத்தமிழர்கள் அழிவுகள் பலவற்றைச் சந்தித்து மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ள சூழலில் நூலகம் நிறுவனம் ஆற்றிவரும் சேவை மகத்தானது. நூலகம் நிறுவனம் பற்றிய சுருக்கமான ஆணால் தெளிவான அறிமுகத்தை நூலக நிறுவன இணையத்தளத்திலுள்ள அதன் அறிமுகக் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ளலாம். அவ்வறிமுகக் குறிப்பில் அது தன்னைப் பற்றிப்பின்வருமாறு கூறுகின்றது:

“நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.”

ஆரம்பத்தில் நூலக நிறுவனமானது எண்ணிம நூலகச் செயற்பாட்டையே பிரதானமாகக் கொண்டிருந்தாலும் , இன்று அதன் சேவைகள் சேகர அபிவிருத்தி , பள்ளிக்கூடம்), உசாத்துணை வளங்கள் , எண்ணிம ஆவணகம், சுவடி ஆவணகம் , பல்லூடக ஆவணகம், நூலக நிறுவன நிகழ்ச்சிகள் & ஆய்வு அடிப்படையிலான செயற்பாடுகள் என்று பரந்த அளவில் விரிவடைந்துள்ளது அதன் பிரமிக்கத்தக்க வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகின்றது.

நூலகம் நிறுவனத்தின் பிரதான பகுதியான எண்ணிம நூலகம் நான் அடிக்கடி பாவிக்கும் நூலகம். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் , வாசகர்கள் எனப்பல்வகைப்பட்ட்ட மானுடர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும் எகையில் வளர்ந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த அரிய பல நூல்கள் சஞ்சிகைகள, பத்திரிகைகள், பிரசுரங்கள், நினைவு மலர்கள், சிறப்பு மலர்கள் எனப் பல்வகை நூல்களையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளார்கள். தனிப்பட்டரீதியில் நான் நூலக நிறுவன இணையத்தளத்தின் எண்ணிம நூலகத்திலிருந்து மிகுந்த பயனை அடைந்திருக்கின்றேன். பல அரிய நூல்களை, சஞ்சிகைகளை & பத்திரிகைகளை அங்கு வாசித்திருக்கின்றேன், இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகள் பலரின் ஆக்கங்கள் பலவற்றை இந்நூலகம் வாயிலாகப் பெற்றுப்பயனடைந்திருக்கின்றேன். கட்டுரைகளில் சான்றாதாரங்களாகப் பாவித்துள்ளேன்.

Continue Reading →

உலகையாளும் பொங்கலே வாழியவே

உலகையாளும் பொங்கலே வாழியவே

இனிதாய்  வந்திடும் பொங்கலே
உள்ளங்கள்  மகிழ்ந்திடும்  பொங்கலே   
உலகமே   கொண்டாடும்  பொங்கலே
உழைப்பை  நினைவூட்டும்  பொங்கலே!

தமிழர்கள்   ஒன்றாகும்    பொங்கலே
தன்மானம்  வளர்த்திடும்  பொங்கலே
பொங்கும்   தமிழரின்    பொங்கலே
போற்றும்   ஒற்றுமைப்   பொங்கலே!

Continue Reading →