சிறுகதை : என்னுடையது இல்லை !

கடல்புத்திரன் (ந.பாலமுரளி) -“ பணத் தாள்கள், சில‌ மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து எடுப்பது குற்றம் போல,நிலத்திலிருந்தும் எடுக்கிறதும் குற்றம் தானே?”…என்ற சிந்தனை கலைத்துக்
கொண்டே இருக்கிறது.

வீதியில் கிடக்கிற போது ,வெறுமனே கிடக்கிறதே என்று அதனை கடந்தும் போகவும் முடிகிறதா, முடியிறதில்லையே?.”. கனம் கோர்ட்டார் அவர்களே, இலங்கைப் பயங்கரவாதச் சட்டத்தில் எவை,எவையெல்லாம் குற்றங்கள்?அஸ்கிரியப் பீட தேரர்களிடம் கேட்டு, கேட்டுச் தீராத சந்தேகங்களை….எல்லாம் எங்கே தீர்த்துக் கொள்வது.? என்ற அவசரத்தில் ,கழுத்தும் வாங்கி,” அட ,கழுத்திலேயும் ஒரு நோ !

இலங்கை அரச அதிபர்கள்,சொந்த மூளை க‌ழற்றி ,இரவலைப் பொறுத்தி …நீண்ட நாள்களாகி விட்டன.அந்த மூளையோ துருப் பிடித்து,துருப் பிடித்து,இனப்படுகொலை வரைப் படத்தை பிரதி எடுத்து, கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கி ,புத்தரிசத்தைத்
தொலைத்தும் கனகாலமாகி விட்டன.

“எந்தக் காலத்திற்லும் பயங்கரவாதச் சட்டங்களையும் ,அவசரகாலச் சட்டங்களையும் …அகற்றி விடாதீர்கள். அவை தான் …அத்திவாரங்களே!” அசரீரிகள் அவர்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன‌. காலடியில் கிடக்கும் அற்பர்களிற்கு
விளங்கிறதோ, இல்லையோ,” அந்தக் கொள்கைகளில் கால் வைத்தவர்களிற்கெல்லாம் அது மீற முடியாத‌ கட்டாய விதி !”. இலங்கை அதிபர்கள் ,”என்னால்,இவர்களை மீறி எதையுமே செய்ய முடியிறதில்லையே” என்று கதறுகிறார்கள்.

Continue Reading →

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடையா? இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

 இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடையா? இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்இலங்கையின் தேசிய கீதத்தை அந்நாட்டில் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதுவரை இலங்கை அரசு நிகழ்ச்சிகளில் அந்நாட்டின் தேசிய கீதம் சிங்களமொழியிலும், தொடர்ந்து தமிழ் மொழியிலும் பாடப்பட்டு வந்தது. அந்நாட்டின் ஆட்சி மொழியாக இவ்விரு மொழிகளும் அங்கீகரிக்கப்பட்டு நிலையில், இவ்வாறு பாடப்படுவதே பொருத்தமானது சிறப்பானது.  ஆனால் இனி சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அதன் தமிழ் மொழி வடிவம் இசைக்கப்படாது என்றும் முடிவு செய்திருப்பது அநீதியானது.

தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் இரண்டு இனங்கள் என்று பொருள்பட்டுவிடும் என அந்நாட்டு அரசு அளித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. இலங்கையில் இரு தேசிய இனங்கள் வாழ்கின்றன என்பது உண்மை. அனைத்து தேசிய இனங்களும், அவர்களது மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசியலமைப்பில் சிங்கள மற்றும் தமிழ் மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது போல இந்த முடிவு அமைந்துள்ளது.

Continue Reading →