முத்துக்குமார். 1982-ம் ஆண்டு நவம்பர் 19 அன்று தூத்துக்குடியில் பிறந்த இவன் தன் இனத்தை உயிராய் நேசித்த தன்மான தமிழன். தமிழகத்தில் யாரும் இந்த தியாகியை மறந்திருக்க முடியாது. தமிழ் ஈழத்தில் நடந்த கொடூர யுத்தத்தில் குழந்தைகளும் பெண்களும் உட்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் ஈவு இரக்கமின்றி அநியாயமாக கொல்லப்பட்டதை எதிர்த்து எந்த அரசியல் வாதியும் குரல் கொடுக்க முன் வராத நிலையில் இந்த இளம் எழுத்தான் ஜனவரி மாதம் 29-ம் திகதி 2009 அன்று தன்மீது பெட்ரோலை ஊற்றி தன்னையே ஆகுதியாக்கி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தான். தான் எதற்காக தீக்குளிக்க முடிவு செய்தான் என்பதை கடிதம் ஒன்றில் பதிவு செய்து விட்டு தன் உடலை வைத்து போராடி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி, தனது உடலை ஆட்சியாளர்களோ காவல்துறையோ கைப்பற்றி அடக்கம் செய்ய விடாமல் தனது உடலை ஒரு துரும்புச் சீட்டாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டு திரிந்து மாணவர்கள் இளையோர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராடுமாறு கூறி, அப்போராட்டத்தை தொடருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தான் அந்த மாவீரன்.
ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி இந்தியாவே பழிவாங்கும் நோக்கில் ஈழத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தான் இந்த உணர்வாளன். அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்ட கல்லூரி மாணவர்களோடு அனைத்து மாணவர்களும் இணைந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு, அகிம்சை வழியில் போராட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தீயில் கருகினான். தமிழ் நாட்டில் வாழும் பிற இனத்தவரின் ஆதரவையும் சர்வதேச சமுகத்தின் கவனத்தையும் இறைஞ்சி, பதினான்கு கோரிக்கைகளை முன்வைத்து தீயில் வெந்து தீய்ந்தான். அம்மாவீரனின் வேண்டுகோளை நிறைவேற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற அதேவேளை, கொந்தளித்த மாணவர்களை ஒடுக்கும் முயற்சியை அன்றைய தமிழக அரசு வெற்றிகரமாக செய்ததை மறந்து விட்டிருக்க முடியாது. கொஞ்சம் கூட மனச்சாட்சியின்றி எல்லாமே மறைக்கப்பட்டது , மறுக்கப் பட்டது.
Continue Reading →