இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்

- ஞா.டிலோசினி -“ பெண்ணியம் என்பது ஆண்கள் எந்தளவுக்கு சமூக அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு உரிமை கொண்டாடுகிறார்களோ, அந்தளவுக்குப் பெண்களுக்கும் மேற்கூறிய துறைகளில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் “ என்று கூறுகின்றது பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு புதிய இயக்கம். அத்தோடு பெண்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய, அரசியல், பொருளாதார சூழ்நிலையிலும் அவர்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்னும் உயர்நெறியை நிலைநாட்டுவதைக் கருவாகக் கொள்கிறது என விளக்குகிறது” (பிரேமா, இரா., பெண்ணியம் – அணுகுமுறைகள் : 13).

புலம்பெயர் சூழலில் பெண்களின் எண்ணிக்கை கணிசமானளவு காணப்படுகிறது. ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த ஆண்களின் சகோதரிகளாகவும், மணப் பெண்களாகவும் பெண்கள் புலம்பெயர்ந்து சென்றனர்.

பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என வேறு தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்தனர். இலங்கையை விட புலம்பெயர் சூழலில் பெண்கள் தொடர்பான பண்பாட்டுக் கூறுகளை தமிழர் சமூகம் கட்டிறுக்கமாக வைத்திருக்கிறது. பெண்களது நடைமுறைகள், திருமணம் ஆகியவை தொடர்பாக அதிகாரம் மிக்க போக்குடன் நடந்து கொள்ள முனைகிறது.

தனிமைத் துயர், மொழி, அந்நியத் தன்மை, நிறவாதம் ஆகிய பிரச்சினைகளுக்கும் பெண்கள் ஆளாகின்றனர். இத்தகைய சூழலில் பெண்களே, பெண்களது பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவும், செயலாற்றவும் துணிந்தனர். இதனால் வெவ்வேறு நாடுகளில் பெண்கள் அமைப்புக்கள் உருவாகியதோடு, பெண்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றதோடு, பெண்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் வெளியீடுகளும் வெளிவந்தன. (நூல்கள், சஞ்சிகைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள்). இத்தகைய வெளியீடுகளில் இராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தின் நாவல்களும் குறிப்பிடத் தக்கன.

இராஜேஸ்வரி, கணவர்களின் கொடுமைகளால் பெண்கள் தஞ்சம் புகும் ஸ்தாபனம் ஒன்றில் சிறிது காலம் வேலை செய்தவர். பெண்களுக்கான துயர்களும், கொடுமைகளும் இன, மத, மொழி, வர்க்கங்களைத் தாண்டியவை என்பதை உணர்ந்தவர். பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யும் நோக்கில் ‘கிரேட் லண்டன் கவுன்சிலில் (GLC) வேலை செய்தார்.

Continue Reading →

கவிதை: குற்றுயிரும் குலையுயிரும்

- தம்பா (நோர்வே) -கலியுகத்தின் பிரளயங்கள் ஓயாத
ஒரு பொழுதில்
ஓய்ந்துவிட்ட பூமியின் சூழற்சி.

ஆயிரம் அணுகுண்டுகளை
அடக்கி ஆள்பவனும்,
இலட்சம் படைகளை திரட்டி
மூக்கணாம் கயிறின்றி
முரண்டு பிடிப்பவனும்
கோடான கோடி டாலர்களை
அடுக்கி அரண்களை அபகரித்தவனும்
ஈரல்குலை நடுநடுங்க
அற்பமாய் ஆக்கி போடும்
கண்ணற்ற அழிவின் கடவுளெது?

தூங்கா நகரங்கள் உச்சிப்பொழுதினிலும்
தாலாட்டையும் தலையணைகளையும்
தானமாக பெற்றுக்கொள்கிறது.

Continue Reading →

மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு

மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 32 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிசெய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முதல் கட்ட நிதிக்கொடுப்பனவு அண்மையில் வழங்கப்பட்டது.

Continue Reading →

கவிதை: மழை வாழ்த்தும் காதலர்!

மழை வாழ்த்தும் மானுடர்!
வாழையிலை குடையாக
வதனமெலாம் மலர்ச்சியுற
விண்ணின்று பன்னீராய்
மழைத்துளிகள் சிந்திடவே
நாளைதனை நினையாமல்
நனையுமந்த திருக்கோலம்
பார்ப்பவரின் மனமெல்லாம்
பக்குவமாய் பதிந்திடுமே   !

Continue Reading →

சிறுகதை: கனவுகள் திருடு போன கதை!

சிறுகதை:  கனவுகள் திருடு போன கதை!அவன் மெளனமாக அமர்ந்திருந்திருந்தான்.சுற்றிலும் நண்பர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“அதற்கு சொந்தக்காரர் நீங்களா..? நம்ப முடியல்லையே…”

“வேறொருத்தர..சொல்றாங்களே..? அதுவும் இறந்து போன..புகழ்பெற்ற .. சினிமா மெட்டில்..அரசியல் கலந்து..தேர்தல் களங்களில்..அரசியல் மேடைகளில்.. பாடும் பாடகர் பெயரை குறிப்பிடுகிறார்களே..?”

“உண்மையா..இல்லை..புகழ்ச்சிக்காக நீங்கள் இட்டுக்கட்டியதா…?”

“இன்னைக்கி..இந்த மாதிரி ..சொல்லிக்கிட்டு..நிறையப் பேர்..கோர்ட்..வழக்குக்குன்னு…நாட்ல..நிறைய நிகழ்வுகள்..அன்றாடம் நடந்துக்கிட்டிருக்கு…”

இன்னும் சிலர் அவனை சொல் என்ற மொன்னையான கத்தியால் கீறி தங்களின் அடிமன இச்சைகளை தீர்த்துக் கொண்டிருந்தனர்.

எல்லாவற்றையும் சிறு புன்னகையில் சுவீகரித்துக் கொண்டிருந்த அவன் முப்பது வருடங்களுக்கு முன் தன் கல்லூரிக் காலத்திற்குள் பயணித்தான்.

கூழாங்காறு என்ற கூவலிங்க ஆற்றின் தென்கரையில்..புளியமரங்கள் சூழ்ந்து அந்த கல்லூரி இருந்தது. மேற்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும்,தெற்கில் தனித்து நின்ற குன்றின் மேல் சிவன் கோவிலும், மானாவாரி புழுதிக்காடுகளுமாக அதன் எல்லைகள் இருந்தன.

ஆறு மிகப் பெரிதானதாய் இல்லாமல் நீரோடை போல இருக்கும். அதன் இருகரைகளிலும் தென்னந்தோப்புகள்..பார்ப்பதற்கு..மிக அழகான சோலைவனம் போல் காட்சியளிக்கும்.

“நண்பா..நண்பா..என யாரோ தன்னைத் தொட்டு உலுக்கிய போது தான் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பினான் அவன்.

எதிரே கோபமும் சீற்றமும் நிரம்பித் ததும்பும் முகங்களோடிருக்கும் நண்பர்களைக் கண்டதும் அவனுக்குள் பதட்டம் பரவியது.

அவசரமாக பேசத் தொடங்கினான்,” மன்னியுங்கள் நண்பர்களே..உங்களின் கேள்விகள் என்னை..பழைய காலத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் விட்டது..அதான்..நான்..என்னை மறந்த நிலைக்குள் இருந்து விட்டேன்..மற்றபடி உங்களின் கேள்விகளை அலட்சியப் படுத்திட நான் முனையவில்லை..மன்னியுங்கள்..”

Continue Reading →