வாசிப்பும், யோசிப்பும் (360) : எழுத்தின் எளிமையும் , ஆழமும் பற்றி…

எந்த விடயத்தைப் பற்றி எழுதுவதென்றாலும் முதலில் அந்த விடயத்தைப்பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். அது பற்றிப் பல்வேறு கோணங்களில் விளக்கமளிக்கும் நூல்களை, கட்டுரைகளை வாசியுங்கள். அது பற்றிய புரிதல் நன்கு ஏற்பட்டதும் அது பற்றி மிகவும் எளிமையாக அதே சமயம் மிகவும் ஆழம் நிறைந்ததாகவும் எழுதுங்கள். எளிமையாகவும், ஆழம் நிறைந்ததாகவும் எப்படியிருக்க முடியும் என்று ஆச்சரியப்படுகின்றீர்களா? தெரியாவிட்டால் மகாகவி பாரதியாரின் மகத்தான கவிதைகள் போன்ற பல படைப்புகளை இருக்கின்றனவே. ‘நிற்பதுவே நடப்பதுவே ‘ கவிதையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் அக்கவிதையில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வளவு எளிமையானவை. ஆனால் அக்கவிதை கூறும் பொருள் அவ்வளவு எளிமையானதுதானா? இல்லையே . மிகவும் ஆழமானது. அதுபோல்தான் அவரது ‘இன்று  புதிதாய்ப்பிறந்தோம்’ போன்ற கவிதைகளும். கவிஞர் கண்ணதாசனின் பல சிறந்த திரைப்படப்பாடல்களும் எளிமையும், ஆழமும் நிறைந்தவைதாம். இவ்வகையில் எளிமையான ஆற்றொழுக்குப்போன்றதொரு நடையில் ஆழமான விடயங்களை எழுதுவதில் , கூறுவதில் வல்லவராக விளங்கியவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. ஸ்டீபன் ஹார்கிங் வானியற்பியலில் சிறந்த அறிவியல் அறிஞராக விளங்கியவர். அவர் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சார்பியற் தத்துவம், குவாண்டம் இயற்பியல் போன்ற விடயங்களைப்பற்றியெல்லாம் மிகவும் எளிமையான நடையில் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்னும் அற்புதமானதொரு அறிவியல் நூலினை எழுதியுள்ளார். எளிமையும், ஆழமும் நிறைந்த நூல் அது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் (359): ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க பற்றிய கூற்றும், சில சிந்தனைகளும்

இலங்கையின் முன்னாள் பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க (இவர் உலகின் முதலாவது பெண் பிரதமர்) பற்றிய எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தியின் முகநூற் பதிவொன்று ஏற்படுத்திய நினைவலைகள் இவை:

எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் (Karunaharamoorthy Ponniah) ஶ்ரீமாவோ அம்மையார் பற்றிய முகநூற் பதிவு: “ஆனந்தசங்கரி அவர்கள் பதவியில்லாமல் இருந்தபோது 1983 இல் பெர்லினில் கூடியிருந்த நண்பர்களிடத்தில் சொன்னது: “ இந்தக்கூட்டணி, மாட்டணி ஒன்றுந்தேவையில்லை, அமிரை வீட்டில இருக்கவைச்சிட்டு…..நாலு எம்பிக்களை தமிழ்ப்பகுதியிலிருந்து அவளுக்கு (ஸ்ரீமாவோ) அனுப்பியிருந்தால் தமிழர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அவளிட்ட வாங்கியிருக்கலாம்…………. முட்டாள் தமிழர்களுக்கு மூளை ஒருநாளும் வேலை செய்யாதென்றன். வெங்காயம் விளைஞ்சநேரம் வெங்காயத்தையும், மிளகாய் விளைஞ்சநேரம் மிளகாயையும் அரசாங்கக்காசில இறக்குமதிசெய்து ஜே.ஆரைபோல தமிழர்களுக்கு வம்புபண்ற கெடுபுத்தி அவளுக்கில்லை, அவள் மனுஷி……. !” நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

என்னைப்பொறுத்தவரையில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க கொண்டு வந்த புதிய அரசியலமைப்புச் சட்டம், தரப்படுத்தல் ஆகியவை, தமிழ் இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் எழுந்த எதிர்ப்பு தமிழரசுக்கட்சியினரைக் கூட்டணி அமைத்து தமிழீழம் கேட்க வைத்தது. மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன் என்று 42 தமிழ் இளைஞர்கள் (தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த) கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் உண்மையில் ஶ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நன்மைகளாக நான் கருதுவது:

Continue Reading →

‘சம உரிமை’ இயக்கத்தினரின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கூட்டம் பற்றி…

நேற்று மாலை (மார்ச் 1, 2020) , ஸ்கார்பரோவில் அமைந்துள்ள ‘ஹீரோஸ் பிளேஸி’ல் ‘சம உரிமை’ இயக்கத்தினரின் கனடாக் கிளையினரால் இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் தருவதாகக் கூறிய இலங்கை ஜனாதிபதியின் கூற்றினைக் கண்டிக்கும்பொருட்டு நடைபெற்ற கண்டனக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். கனடாவில் வசிக்கும் முன்னாட் போராளிகள் (பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள்) , எழுத்தாளர்கள், சமூக,அரசியற் செயற்பாட்டாளர்கள் எனப்பலர் வந்திருந்தனர் சமூக அரசியற் செயற்பாட்டாளரும் , முன்னாட் போராளியுமான எல்லாளனின் தலைமையில் நடைபெற்ற விழா எல்லாளனின் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துமொரு நிகழ்வாகவும் அமைந்திருந்தது. மிகவும் கச்சிதம் என்பார்களே அவ்விதமாகக் கூட்டம் நடைபெற்றது. அதற்குக் காரணம் எல்லாளனின் தலைமைத்துவ ஆற்றலே. சம உரிமை இயக்கத்தினரின் கனடாக்கிளையினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கியமான ஏனையவர்களாக சமூக, அரசியற் செயற்பாட்டாளர் நேசன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சபேசன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.இவ்வமைப்பில் இணைந்து மேலும் சிலர் இயங்குகின்றனர். அனைவர்தம் பெயர்களும் எனக்குத்தெரியாத காரணத்தால் அவர்கள் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. அவர்களும் இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களே.

Continue Reading →

ஆய்வு: காப்பியங்களில் பெண்கள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?ஒரு பெண் தனக்குரிய உரிமைகளை அறிந்து உணர்ந்து அதன்வழி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே பெண்ணியம் பேசுதல் ஆகும்.இப்பெண்ணியச் சிந்தனை தற்போதைய பெருவளர்ச்சி என்றாலும் ஒருபக்கம் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இருந்தகாலத்;திலும் பெண்மைக்குக் குரல் கொடுத்தவைகள் இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் தான் தோன்றிய காலத்தைப் பதிவுசெய்வதற்காகவும், சமூகத்திற்கு ஏதேனும் ஒரு கருத்தைக் கூறுவதற்காகவும், இந்தச் சமூகம் எவ்வாறு விளங்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. இதற்குப் பல இலக்கியச்சான்றுகளைச் சுட்டலாம். குறிப்பாகக் காப்பியங்கள் இங்கு ஆய்வுக்குரிய எல்லையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்என்ற முழக்கம் தோன்றும் முன்னர் கி.பி 100- லேயே இலக்கிய வரலாற்றில் சங்கம் மருவிய காலம் என்று குறிப்பிடப்படும் காலத்தே தோன்றிய முதல் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி அனைத்துக் காப்பியங்களிலும் பெண்களை மையப்படுத்துவதைக் காணமுடிகின்றது.

சங்கம் மருவிய காலத்தில் ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பங்களுக்கிடையில் நீதி இலக்கியங்கள் தோன்றி அறவுரைகளை எடுத்தோதின. அக்கால இறுதிப்பகுதியில் தோன்றிய சிலப்பதிகாரம் தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம். குறைந்த அடிகளில் தோன்றிய சங்கப்பாடல்கள் மற்றும் நீதி இலக்கியப்பாடல்கள் தாண்டி ஒரு முழு வரலாற்றைக் கூறும் தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.

உலகமொழிகளில் தோன்றிய காவியங்கள் புகழ்பெற்ற அரசனை, ஆண்டவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்க குடிமக்கள் காப்பியமாகத் தோன்றியது சிலப்பதிகாரம். குறிப்பாக,

Continue Reading →