கவிதை: உயர்தர விஷம் – – திரிவேணி சுப்ரமணியம் –
காற்றின் வேகத்திற்கும்
கனவுப் பொழுதுக்கும் இடையில்
எப்போதும் நான் குறுக்கிடுவதில்லை
இரண்டுமே இயல்பாய்
இருப்பதுதான் மகிழ்ச்சி.
காற்றின் வேகத்திற்கும்
கனவுப் பொழுதுக்கும் இடையில்
எப்போதும் நான் குறுக்கிடுவதில்லை
இரண்டுமே இயல்பாய்
இருப்பதுதான் மகிழ்ச்சி.
உங்களுக்குப் புரியாததைச்
சொன்னால்
பைத்தியம் என்பீர்கள்
உங்கள் பேச்சுக்கு
தலையாட்டாமல் நின்றால்
கோட்டி பிடித்து விட்டதென
ஊருக்குள் வதந்தி பரப்பி
விடுவீர்கள்
உங்களை அனுசரித்து
போகவில்லையென்றால்
முதுகுக்குப் பின்னால்
முணுமுணுப்பீர்கள்
அவுஸ்திரேலிய பத்திரிகையான த ஏஜ் (The Age) வார இதழ் கலைப் பகுதியில் சினிமா மற்றும் புத்தகங்களின் விமர்சனங்கள் இடம்பெறும். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் அதிக விற்பனையில் உள்ள புத்தகத்தின் பெயர் இடம் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவில் அதிக தொகையில் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் முதல் மூன்று இடத்தையும் பெற்றபடி இருந்தது சுவீடிஸ் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றப்பட்ட மூன்று நாவல்கள்;. இந்த மூன்று நாவல்களும் ஒருவரால் எழுதப்பட்டது. வெளிநாட்டு புத்தக வரிசையில் அமெரிக்க அல்லது பிரித்தானிய புத்தகங்கள் மட்டுமே நான் அறிந்தவரையில் கடந்த 20 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையாகின்றன. வேறு மொழியில் வந்த நாவல் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் முன்னணியில் இருப்பது ஒரு புதுமையான விடயம்.
அத்தியாயம் 65
புர்லா வந்த பிறகு ஏற்பட்ட புதிய ஈடுபாடுகளில் ஒன்று, ஆங்கில தினசரி பத்திரிகை படிப்பதும், பத்திரிகைகள் வாங்குவதும். ஆங்கில தினசரி பத்திரிகை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். புர்லாவுக்கு வந்த ஆங்கில தினசரி பத்திரிகைகள் கல்கத்தாவிலிருந்து வரும். புர்லாவுக்கு வந்தவை அம்ரித் பஜார் பத்திரிகாவும், ஸ்டேட்ஸ்மன் –னும் ஸ்டேட்ஸ்மன் ஆங்கிலேயர் நடத்தும் பத்திரிகையாச்சே என்று அம்ரித் பஜார் பத்திரிகை பக்கம் மனம் சென்றது. அது ஒரு பெரிய ஸ்தாபனம். அனேகமாக ஆனந்த பஜார் பத்திரிகா என்னும் வங்காளி மொழி பதிப்பையும் அது வெளியிட்டு வந்தது. பெரும்பாலும் வங்காளிகள் இந்த் இரண்டு பத்திரிகைகளில் ஒன்றைத்தான் விரும்பிப் படிப்பார்கள். துஷார் காந்தி கோஷ் அதன் ஆசிரியர். அது நம்மூர் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், சுதேசமித்திரன், தினமணி, தினசரி போன்று தேசீய உணர்வு மிக்க பத்திரிகை சுதந்திர போராட்டத்தோடு தம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டவரகள். ஜுகாந்தர் என்று ஒரு வங்காளி பத்திரிகையும் கூட வந்தது. இன்னொரு பத்திரிகையும் ஆங்கில பத்திரிகை தான், கல்கத்தாவிலிருந்து வந்து கொண்டிருந்தது. பெயர்சரியாக நினைவில் இல்லை. ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்டாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதை இப்போது நினைவு கொள்ளக் காரணம் இடையிடையே அந்தப் பத்திர்கையும் வாங்கிக்கொண்டிருந்தேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் அதில் எம்.என். ராய் தன் நினைவுகளை அவ்வப்போது எழுதிக்கொண்டிருப்பார். எம்.என். ராய் லெனின் காலத்திலிருந்து அவர் காலத்திய தலைவர்களுடன் உறவாடியவர். கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குவதற்கு என்று அல்லது கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் கொமின்டெர்ன் சார்பில் தொடர்பு வைத்துக் கொள்ள அனுப்பப் பட்டவர் என்று படித்த ஞாபகம். எந்த நாட்டுக்கு அவ்வாறு அனுப்பப் பட்டார் என்பது நினைவில் இல்லை.
இன்று , மே 2011, நடைபெற்ற கனடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டீபன் ஹார்பரின் தலைமையிலான பழமைவாதக் கட்சி இம்முறை கனடியப் பாராளுமன்றத்தில் 160ற்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்றுப்…
பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.
சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட. Janusz (Jim Sturgess) சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள்.
காலம் என்பதுதான் என்ன என்ற ஒரு கேள்வி, சிலகாலமாகவே என் நினைவுள் நுழைந்து விடை தேடி நின்றுகொண்டிருந்தது. அண்மையில் நிகழ்ந்த தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனுடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டதற்குப் பின்னர் அந்தக் கேள்வி இன்னும் வலுவடைந்துள்ளதாகவே தோன்றுகிறது. ‘காலமென்பது கறங்குபோல் திரிந்து கீழது மேலாய், மேலது கீழாய்ப் புரட்டும் ஒரு மகாசக்தி’யென இலக்கியங்களில் படித்ததுண்டு. இது வரலாற்றுக் கண்கொண்டு நோக்கப்பட்ட காலமெனச் சொல்லலாம். இன்னும், ஆரூடகாரனின் நாவில் குதிபோடும் ‘தம்பிக்கு காலம் இப்ப நல்லாயில்லை…’ அல்லது ‘காலம் நல்லாயிருக்கு’ என்ற வாசகங்களில் விதியென்ற மாயத்தின் பாய்ச்சலைக் காணமுடியும். காலத்துக்குத்தான் தமிழில் புதிராய், மாயமாய், விளக்கமாய், செறிவாயென எத்தனை அர்த்தங்கள்!
மீள்பிரசுரம்: ‘கூர் 2011’ மலரிலிருந்து.
[இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது. மேற்படி மலரில் ஒரு சில பிழைகள் ஏற்பட்டு விட்டதன் காரணமாக அவ்விடங்களில் அர்த்தங்கள் மாறுபட்டும், மயக்கம் தருவதாகவும் காணப்படுவதால் இக்கட்டுரையினை இங்கு மீள்பிரசும் செய்கின்றோம். மலரில் வெளியான கட்டுரையில் காணப்படும் முக்கியமான குறைகளாக பந்திகள் ஒருங்கிணைக்கப்பட்டமை, வார்த்தைகள், வசனங்கள் தவறிப் போனமை மற்றும் அடைப்புக் குறிகள் சில இடம் மாறி இடப்பட்டுள்ளமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் புறக்கணிக்கக் கூடிய தவறுகளாக எழுத்து, இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலர் மிகவும் காத்திரமானதொரு மலராக வெளிவந்திருக்கின்றது. கனடாத் தமிழ் இலக்கியவுலகில் தவிர்க்க முடியாததொரு தொகுப்பிதழ் ‘கூர்’ கலை இலக்கிய மலரென்று நிச்சயம் கூறலாம். – ஆசிரியர் ]
மீள்பிரசுரம்: ‘கூர் 2011’ மலரிலிருந்து.
[இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது. மேற்படி மலரில் ஒரு சில பிழைகள் ஏற்பட்டு விட்டதன் காரணமாக அவ்விடங்களில் அர்த்தங்கள் மாறுபட்டும், மயக்கம் தருவதாகவும் காணப்படுவதால் இக்கட்டுரையினை இங்கு மீள்பிரசும் செய்கின்றோம். மலரில் வெளியான கட்டுரையில் காணப்படும் முக்கியமான குறைகளாக பந்திகள் ஒருங்கிணைக்கப்பட்டமை, வார்த்தைகள், வசனங்கள் தவறிப் போனமை மற்றும் அடைப்புக் குறிகள் சில இடம் மாறி இடப்பட்டுள்ளமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் புறக்கணிக்கக் கூடிய தவறுகளாக எழுத்து, இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலர் மிகவும் காத்திரமானதொரு மலராக வெளிவந்திருக்கின்றது. கனடாத் தமிழ் இலக்கியவுலகில் தவிர்க்க முடியாததொரு தொகுப்பிதழ் ‘கூர்’ கலை இலக்கிய மலரென்று நிச்சயம் கூறலாம். – ஆசிரியர் ]