சோழியனின் கருப்பு ஜூலை 1983 பற்றிய கட்டுரை, குறிப்பாக இராமகிருஷ்ண மண்டபத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய அவரது நினைவு கூர்தல் , அன்றைய நினைவுகளை மீண்டுமெழுப்பின. உண்மையில் காடையர்கள் உள்ளே நுழைந்ததும், உள்ளே அகப்பட்டிருந்த மக்களெல்லோரும் ஒவ்வொரு மாடியாக , மொட்டை மாடி வரைக்கும் ஓடி ஒளிந்தார்கள். சிலர் பல்வேறு மாடிகளிலுள்ள குளியலறைகள் / மலசலகூடங்களிற்குள்ளும் ஒளிந்தார்கள். மொட்டை மாடி வரையில் சென்றவர்களைத் துரத்தியபடி காடையர்கள் தொடர்ந்தும் முன்னேறி வந்தார்கள். மொட்டை மாடியை அடைந்தவர்களுக்கு வேறெங்கும் செல்வதற்கு வழியில்லை. அங்கிருந்த தண்ணீர் தாங்கிகளுக்கும், தளத்திற்குமிடையிலிருந்த இடைவெளிக்குள் பெண்கள், குழந்தைகள் புகுந்துகொண்டார்கள். ஏனையவர்கள் மொட்டை மாடியில் நீட்டிக்கொண்டிருந்த ‘காங்ரீட்’ தூண்களின் பின்னால் தங்களை மறைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்கள்.
காலம் – 25-07.2011
நேரம் – 18:00 – 19:00
இடம் – Stortinget முன்பாக
[யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.] ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது. தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.