அ. ந. கந்தசாமி: இலக்கிய மின்னல்

அ. ந. கந்தசாமி: இலக்கிய மின்னல்[அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி அமரர் செம்பியன் செல்வனின் ‘ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்’ நூலில் அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியினை மீள்பிரசுரம் செய்கின்றோம். -பதிவுகள்]

இலக்கிய மின்னல்
இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் – சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலாம் இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது1, – என்று தனது முதற்படைப்பான ‘சிந்தனையும் மின்னொளியும்’ என்ற கவிதை தனது பதினேழாவது வயதில் பிறந்ததையும், அது பின்னர் ஈழகேசரிப் பத்திரிகையில் வெளிவந்ததையும் நினைவுகொண்ட அமரர் அ.ந. கந்தசாமி அவர்களின் இலட்சியக் கொள்கை வெறி, எழுத்தின் ஆரம்காலம் தொட்டு, அவரின் அந்தியகாலமான 14-2-68 வரை மாறவோ, மறையவோ இல்லை.

Continue Reading →

வெ.சா.வுடன் ஒரு மாலை அளவளாவல் – 1!

வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல்!கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்.

திலீப் குமார்: சாமிநாதன், நேற்று நீங்க பேசினபோது, ஒரு விஷயம் சொன்னீங்க. எப்போதுமே, என்ன சொன்னாலும் என்னைக் விமரிசகன்னே பாக்கறாங்க. ஆனால் நான் என்னை விமர்சகன்னு நினைத்துக்கொண்டு எதுவுமே சொன்னதில்லை. எழுதினதில்லை. ஒருத்தனின் பொது அறிவுக்கு என்ன படுமோ அதைத் தான் சொல்லி வந்திருக்கிறேன் எனக்கு ஏதும் extraordinary intellectual brilliance-ஓ அல்லது  artistic sensibility-ஓ இருப்பதாக நான் நினைக்கவில்லை………

Continue Reading →

‘கறுத்தக் கொழும்பான்’

1

ஆசி கந்தராஜாஉடையார் மாமா மகா விண்ணன். அவரைச் சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரும். அவரைப்போன்று ‘அச்சொட்டாக’ விவசாயம் சம்பந்தப்பட்ட சங்கதிகளைப் பேச நான் வேறு ஆளைக் கண்டதில்லை. மாமா ஊரில் வாழ்ந்த காலத்தில் வயல் தோட்டம் துரவு என வசதியாக வாழ்ந்தவர். ‘அரைவாசி ஊரே அவருக்குச் சொந்தமாக இருந்தது’ என்று விண்ணாணம் பேசுபவர்கள் சொல்வார்கள். எப்படி இது சாத்தியமானதென ஒரு தடவை பாட்டியைக் கேட்டேன்.  இங்கிலீசுக்காரர் இலங்கையை ஆண்ட காலத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை இலகுவாக்க, மணியகாரன், உடையார், விதானையார் என்ற பதவிகளை உருவாக்கியதாகவும், பதவிக்கு வந்தவர்கள் தமது ஆட்சி அதிகாரங்களைப் பாவித்து ஊரில் உள்ள ‘அடுகாணி-படுகாணிகளை’ தம் வசமாக்கியதாகவும் பாட்டி சொன்னார். உடையார் மாமா வீடுகட்டியிருக்கும் ‘நாவலடி வளவு’ எங்கள் பாட்டனாருக்குச் சொந்தமானதென்று அம்மா சொல்லி வருத்தப்பட்டார்.

Continue Reading →

Who are these “intellectuals” ?

As we approach the third anniversary of the Sri Lankan genocide, a report is released, signed by 71 Tamil elite intellectuals titled as “An appeal to the Tamil Community and its civil and political representatives”, appealing to Tamil community for the resettlement of Muslim communities that were evicted by the LTTE during the war.As we approach the third anniversary of the Sri Lankan genocide, a report is released, signed by 71 Tamil elite intellectuals titled as “An appeal to the Tamil Community and its civil and political representatives”, appealing to Tamil community for the resettlement of Muslim communities that were evicted by the LTTE during the war.

Everyone wants to see justice for all. But our imminent erudite scholars have missed the elephant in the room. How was it that they do not see in a similar vein the “international community” silently support of Sri Lankan genocide? How was it that these same bureaucrats wearing the garb of intellectuals silently attended to their daily decorum and peacefully watched the news of the genocide taking place? And, chose to remain silent at the aftermath.

Continue Reading →

transcurrents.com: An appeal to the Tamil Community and its civil and political representatives!

Since the end of the war in May 2009, it has become important for all ethnic communities of Sri Lanka to re-examine and reevaluate their past. It is through this process of self-reflection that some of the major issues that confront state and civil society today can be meaningfully reconceived and reconfigured for the future.Since the end of the war in May 2009, it has become important for all ethnic communities of Sri Lanka to re-examine and reevaluate their past. It is through this process of self-reflection that some of the major issues that confront state and civil society today can be meaningfully reconceived and reconfigured for the future.

While the war has drawn to a decisive close, the ethnic conflict is far from over and demands solutions short- and long-term. The quest for a viable political solution from a majoritarian state is a primary concern for the Tamil community today. Continued insecurity in the face of militarisation is an urgent matter. Armed militancy and a political culture of violence have further eroded into the democratic fabric of society. Resettlement and rehabilitation remain unresolved problems. Distribution of land, access to state and social networks, language parity, devolution of power, inter-ethnic reconciliation and the continued presence of gender, class and caste stratifications are a part of the political landscape today.

Continue Reading →