மாத்தயாட்ட பின் சித்தவெனவா

இங்கே நான் சொல்ல வருவது வேறு ஒரு புது விதமான அனுபவம். நான் அங்கு வைத்தியசாலையின் மேல் மாடி  அறையில் இருந்த போது இரண்டு இளம் விரிவுரையாளர்கள் வந்து, “17 வயதான ஒரு நாயின் கால் முறிந்து விட்டது.  ஆனால் அதன் எஜமானர் அதற்கு  சத்திரசிகிச்சை  செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டார்.  இந்நிலையில் நாம் என்ன செய்வது.” எனக்கேட்டனர்.'டொக்டர்' நடேசன்இலங்கையில் பேராதனை மிருக வைத்திய துறையில்  நாய் பூனைகளுக்கான புதிய வைத்தியசாலை  அரசாங்கத்தால் கட்டப்பட்டு  மிருக வைத்திய பீடத்திற்கு கையளித்திருக்கிறார்கள். அந்த வைத்தியசாலையில் ஒரு வாரகாலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இலங்கையில்  மிருக வைத்தியத்துறையில் இருந்து பெற்ற பட்டப்படிப்பு என்னை மெல்பனில் மிருக வைத்தியம் செய்வதற்கு  தயார் படுத்தியது. குறைந்த பட்சம் நான் பெற்ற அறிவை  சிறிதளவாவது மீண்டும் அங்கு தற்போது பயிலும் மாணவர்களுக்குக்  கொடுத்து நான்பட்ட கடனில் சிறிய அளவை தீர்த்துக் கொள்ள நினைத்ததால் இந்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு கண்டி சென்றேன். என்னுடன் முன்னர்   படித்த  சகாக்கள்தான் அங்கு வைத்திய துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் எனது அனுபவம் இனிமையாக இருந்தது.

Continue Reading →

சொப்காவின் கனடா பிறந்ததினக் கொண்டாட்டம்

யாழினி விஜயகுமாரின் நடனத்தைத் தொடர்ந்து விசேட விருந்தினராகக் கலந்து கொண்ட மிஸசாகா கிழக்கு குக்ஸ்வெல் மாகாணசபைப் பிரதிநிதி டீபிகா டமிர்லா உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து மிஸசாகா கிழக்கு குக்ஸ்வெல் பாராளுமன்றப் பிரதிநிதி திரு. லிஸோன் அவர்களின் உரை இடம் பெற்றது. தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றிய சிலருக்கும், கனடா தினப் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சென்ற முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை 01-07-2012 மாலை 6:00 மணியளவில் சொப்கா  (SOPCA) என்றழைக்கப்படும் பீல்குடிமக்கள் ஒன்றியத்தின் கனடா பிறந்த தினக் கொண்டாட்டம் கலை நிகழ்ச்சிகளோடு மிசசாகாவில் உள்ள ஸ்குயர்வண் முதியோர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மௌன அஞ்சலியைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் பாடப்பட்டு கனடிய தேசியக் கொடி மகாஜனாக்கல்லூரி பழைய மாணவரும் விளையாட்டு வீரருமான திரு. கே. நவரட்ணம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துப் பாடலும், சொப்கா மன்றத்தின் கீதமும் இடம் பெற்றன.  தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மகாஜனாக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் கனடா பிறந்த தினக்கொண்டாட்டத்தை சொப்பா அங்கத்தவர்களோடு ஒன்று சேர்ந்து பிறந்ததினக் கேக் வெட்டித் தொடக்கி வைத்தார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து சொப்கா மாணவி ஜெனிற்ரா ரூபரஞ்சனின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது.

Continue Reading →