‘விடியல்’ சிவா மறைவு!

விடியல் பதிப்பகம் தோழர் சிவா ‘விடியல்’ பதிப்பகத்தின் மூலம் மார்க்சிய நூல்கள் (மொழிபெயர்ப்பு நூல்களுட்பட) பதிப்பித்து வந்தவர் தோழர் ‘விடியல்’ சிவா என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த சிவஞானம் அவர்கள். ஆரம்பத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் முழுநேர ஊழியராகச் செயற்பட்டவர் இவர். அண்மைக்காலமாகவே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று, ஜூலை 20, 2012, காலை 10.30மணிக்குக் காலமானார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு, குறிப்பாக முற்போக்குத் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய பேரிழப்பே. அவரது பிரிவால் வாடும் தோழர்கள், குடும்பத்தவர்களுக்குப் பதிவுகள் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அத்துடன் இணையத்தில் அவரது மறைவு பற்றி வெளியான செய்திகளையும் மீளப்பிரசுரித்துத் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. – ஆசிரியர் –

Continue Reading →

கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு ஸ்ரீலங்கா : இரண்டு தலையீடுகளின் ஒரு கதை

A quarter century on, India’s military involvement in Sri Lanka remains relevant as a lesson in poor leadership in contrast to 1987ல் ஏற்படுத்தப்பட்டதும், ராஜீவ் –  ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என அழைக்கப்படுவதுமான இந்திய – ஸ்ரீலங்கா உடன்படிக்கை ஜூலை 29 ந்திகதியுடன் 25வருடங்களை நிறைவு செய்கிறது. ஸ்ரீலங்கா (1987 – 90) மற்றும் 1971ல் பங்களாதேஷை உருவாக்கிய கிழக்குப் பாகிஸ்தான் ஆகிய இந்தியாவின் இரண்டு இராணுவத் தலையீடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற ஒரு இராணுவ வீரன் என்கிற வகையில் இந்த இரண்டு முயற்சிகளிலும் இந்தியாவின் அதிகார சக்தியின் வலியுறுத்தலை ஒப்பீடு செய்ய முடியாதவனாக உள்ளேன். இரண்டு அரங்குகளிலும் மற்றும் அந்த நேரத்தில் அந்த இரண்டு நடவடிக்கைகளின் போதுள்ள இந்தியாவின் நிலைப்பாட்டிலும் முற்றான வேறுபாடு இருந்தது. பங்களாதேஷை பொறுத்தமட்டில் நன்கு பயிற்றப்பட்ட இராணுவமான பாகிஸ்தானுடன் நடத்தும் மரபுவழி யுத்தமாக இருந்தது. அதில் இறங்குவதற்கு முன்னர் பலத்த இராணுவ திட்டங்களையும் மற்றும் தயாரிப்புகளையும் இந்தியா மேற்கொண்டிருந்தது. அதற்கு முரண்பாடாக ஸ்ரீலங்காவில் இராணுவம் ஆயத்தமில்லாத நிலையில் இருந்தபடியால் தமிழ் கிளர்ச்சியாளர்களுடன் எதிர்க்கிளர்ச்சித் தாக்குதலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. பங்களாதேஷில் படைகளின் நிலை மிகவும் உயர் மட்டத்தில் இருந்தது. விமானப்படைகளும் மற்றும் கடற்படையினரும் ஒட்டுமொத்த தாக்குதல் திட்டத்திலும் ஒரு பகுதியாகச் செயற்பட்டன. ஸ்ரீலங்காவில் முக்கியமாக அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பரவலாக்கப்பட்ட ஒரு காலாட்படை நடவடிக்கையாக இருந்தது.

Continue Reading →

தொடர்நாவல்: மனக்கண் (18)

18-ம் அத்தியாயம்: இருள் சூழ்ந்தது

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிஅடுத்தநாட் காலை ஸ்ரீதர் படுக்கையை விட்டு எழுந்த போது பகல் பதினொரு மணியாகிவிட்டது. சிறிது கண்ணயர்வதும், மீண்டும் மறுபுறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்குவதுமாக நேரம் போய் விட்டது. பாக்கியம் அவனைப் பத்துப் பதினைந்து தடவை வந்து பார்த்துவிட்டுப் போய் விட்டாள். உடலும் மனமும் சேர்ந்து அவன் கட்டிலில் படுத்திருந்த காட்சி அவளுக்கு மிகவும் பரிதாபமாகத் தோன்றியது. பாவம், எவ்வளவு கலகலப்பாக இருக்க வேண்டியவன் இப்படிச் சோர்வுறும்படி ஏற்பட்டுவிட்டதே என்று வாடிப் போய்விட்டாள் அவள். காலையில் சிவநேசர் முதல் நாள் மாலை சூரை மரத்தடியில் தானும் மகனும் செய்து கொண்ட ஏற்பாடுகளைப் பாக்கியத்துக்குச் சுருக்கமாகக் கூறியிருந்தார். அத்துடன் “ஸ்ரீதர் உண்மையில் என் மகன் தான். எங்கள் குடும்ப அந்தஸ்தைத் தான் கெடுக்கப் போவதில்லை என்றும், பத்மாவை, நான் சம்மதித்தாலொழிய தான் திருமணம் செய்ய மாட்டான் என்றும் ஒப்புக் கொண்டுவிட்டான். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதித்திருக்கிறான். தன்னை யாரும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தக் கூடாது என்பது தான் அது. பத்மாவின் நினைவை மறக்கும் வரை அவனை நாம் இது விஷயத்தில் அவன் போக்கிலே தான் விட வேண்டும். ஆறு மாதமோ ஒரு வருடமோ போன பிறகு, அவன் மன நிலையை அறிந்து மீண்டும் அவன் திருமணப் பேச்சைத் தொடங்கலாம். இப்போதைக்கு நாம் மெளனமாகவே இருக்க வேண்டும். நாட் செல்ல அவன் எங்கள் வழிக்கு வந்தே தீருவான். மேலும் ஸ்ரீதருக்கு என்ன வயதா போய்விட்டது? இன்னும் இருபத்துமூன்று வயதுதானே நடக்கிறது?” என்று கூறினார் அவர்.

Continue Reading →

அறிவித்தல்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலின் அரசியல் கேந்திர முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்

அறிவித்தல்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலின் அரசியல் கேந்திர முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)
Tamil National Alliance (Canada)
41 Windom Road Toronto ON M3C 3Z5
Email: tnacanada@rogers.com

யூலை 27, 2012

அறிவித்தல்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலின் அரசியல் கேந்திர முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்

Continue Reading →