தமிழ் ஸ்டுடியோ : மாற்றம் தந்த இந்திய சினிமா – 1 – திரையிடல் நிகழ்ச்சி.

தமிழ் ஸ்டுடியோ : மாற்றம் தந்த இந்திய சினிமா - 1 - திரையிடல் நிகழ்ச்சி.இயக்கம்: ஜான் ஆப்ரகாம்)திரையிடப்படும் படம்: அக்ரஹாரத்தில் கழுதை (இயக்கம்: ஜான் ஆப்ரகாம்)
சிறப்பு அழைப்பாளர்: ஆர்.ஆர். சீனிவாசன்
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7
நாள்: 21-07-2012, சனிக்கிழமை
நேரம்: மாலை ஐந்து மணிக்கு (5 PM)

நண்பர்களே, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ மற்றும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை இனைந்து நடத்தும் “மாற்றம் தந்த இந்திய சினிமா” திரையிடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (21-07-2012) தொடங்கவிருக்கிறது.  இதுவரை உலகப் படங்களை மட்டுமே பார்த்து அவற்றை சிலாகித்து நமது சுயம் மறந்து போன இந்த நேரத்தில் நமது இந்திய மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் சில உலகத்தரத்தில் வெளிவந்துள்ளன என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியான மேன்மை மிகு இந்திய சினிமாக்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். இதுவரை இந்திய மொழிகளில் (தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, இன்னும் பல மொழிகளில்) வெளிவந்த மிக சிறந்த படங்கள் இந்த திரையிடலில் திரையிடப்படவிருக்கிறது.

Continue Reading →

ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ நாவலுக்கொரு தளம்!

[எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அவரது நாவல்களிலேயே பலத்த வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பிய நாவல். அந்நாவல் பற்றி அவ்வப்போது வெளிவந்த கட்டுரைகளை உள்ளடக்கிய இணையத்தளம் விஷ்ணுபுரம்.காம். அத்தளத்தினை இம்முறை பதிவுகள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். இத்தளத்திலிருந்து ஜடாயு விஷ்ணுபுரம் பற்றி எழுதிய கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்-]

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை

– ஜடாயு

ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' நாவலுக்கொரு தளம்!“மௌனம் ஒரு விதையாயிற்று. அதிலிருந்து வேர் முளைத்தது. அது மண்ணைக் கவ்வி உறிஞ்சியது. அதில் அர்த்தம் நிரம்பியது. காவியம் முளைவிட்டது. மண்ணைப் பிளந்து வெளிவந்தது”. விஷ்ணுபுரம் நாவலும் விஷ்ணுபுரம் கோயிலைப் போன்றே பிரம்மாண்டமானது. திசைக்கொரு கோபுரம். மேகங்களைத் தாண்டி விண்ணில் எழும் அவற்றின் முகடுகள். பூலோகத்தை மட்டுமல்ல, புவர்லோகத்தையும், சுவர்லோகத்தையும் அதன் மேல் உலகங்களையும் உள்ளடக்கிய அதன் வெளி. பிரக்ஞையின் பல அடுக்குகள். இதெல்லாம் சேர்ந்தது விஷ்ணுபுரம். நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது போல பல்வேறு விதமான புடைப்புத் தூண்கள், சுதைகள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப அற்புதங்கள் எல்லாம் செறிந்தது விஷ்ணுபுரம். இடையறாது ஒலித்து அதிர்வெழுப்பும் சுவர்ணகண்டம் போல, சோனாவின் நீரொழுக்குப் போல, ஒரு இடையறாத தொடர்ச்சி, அதில் பல்வேறு சலனங்கள்.

Continue Reading →