பாரம்பரிய உணவு விருந்து..
நண்பர்களே இந்த உணவுத் திருவிழாவுக்கு தயாராகுங்கள்… நமது பாரம்பரிய உணவை இப்போதுவாது சுவைத்து பாருங்கள். அவசியம் வாருங்கள் நண்பர்களே. இரவு விருந்து என்றால்.. APPITIZER (சூப்) துவங்கி, DESERT (பழமும்/ பனிக்கூழும்) முடிப்பது என்பதா?.. சுவைபடச் சமைக்க வேதிப்பொருளைக் கொட்டிக் கலக்கித் தான் குதூகலிக்க வேண்டுமா என்ன? ‘வரகரிசியும் வழுதுணங்காயும்’ என அவ்வைப்பாட்டி சொன்னது விருந்து தானே? வாய்க்கு ருசியாக பல ஆயிரம் ஆண்டு இருந்த அந்த பாரம்பரிய உணவை மீண்டும் மீட்டெடுத்து, உண்டு மகிழ முடியாதா என்ன?- என்று யோசித்ததில், பூவுலகின் ஐந்திணை விழாவில், இரவு விருந்து பாரம்பரிய இய்ற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களால் சிறு தானிய சிறப்பு விருந்து திட்டம் தயாரானது.