என் மனைவியின் முதல் நினைவு நாள்

எழுத்தாளர் பிரபஞ்சன்பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்'[எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய உலகில் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’ ஆகிய நாவல்கள் மூலமும், சிறுகதைகள் முலமும்  தனக்கென்றோர் இருப்பிடத்தை நிலைநிறுத்திக்கொண்டவர். ஆர்ப்பாட்டமில்லாமல் செயற்படுபவர். அவரது இணையத்தளத்தை இம்முறை ‘பதிவுகள்’ தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது. அவரது தளத்தில் அவர் தனது மனைவி பற்றி எழுதியுள்ள கட்டுரை வாசிப்பவர்களின் நெஞ்சினை உலுக்கிவிடும் தன்மை மிக்கது. நேர்மையாக, உண்மையாகத் தனது எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார். இதனை வாசித்தபொழுது தோன்றிய முதலாவது எண்ணம்.. சினிமா நட்சத்திரங்களின் முதல் காட்சி பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் கூடச் செல்வழிக்கத் தயங்காத மக்கள் வாழும் தமிழகத்தில் , சுமார் 60 மில்லியன்களுக்கும் அதிகமாக மக்கள் வாழும் தமிழகத்தில், இன்றுமோர் எழுத்தாளர், தமிழ் எழுத்தாளர் தன் எழுத்தை நம்பி திருப்தியாக வாழமுடியாத நிலைதான் நிலவுகின்றது. இந்நிலை என்று மாறுதோ அன்றுதான் தமிழகம் பெருமைப்பட முடியும். தமிழக அரசு இந்த விடயத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை ஏற்படுத்தி உதவலாம். உதாரணமாக எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பதிப்பிப்பதற்கு உதவுவதன் மூலமும், அவ்விதத்திட்டத்தின்கீழ் பதிப்பிக்கப்பட்ட நூல்களை நேரடியாக எழுத்தாளர்களிடமிருந்தே  நூலகங்களுக்கு வாங்கும் வகையிலான திட்டங்களை ஏற்படுத்திச் செயற்படுதுவதன் மூலமும் உதவினால் அது எழுத்தையே நம்பி வாழும் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாகவிருக்கும். இது போன்ற திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்த எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். எழுப்புவார்களா? – பதிவுகள்]

Continue Reading →

பத்துமலை முருகனும், பெரியாரும்

- சுப்ரபாரதிமணியன் -கோலாலம்பூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் பத்துமலை  முருகன் 140 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.272 படிகள் ஏறிச் சென்றால் குகையில்  புராதான முருகனைச் சந்திக்கலாம் என்றார் ஏ ஆர் சுப்ரமணியன். கவிஞர். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவர்.மலேசிய தொலைத்தொடர்புத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அங்கு 55லேயே ஒய்வு. நான் கடவுள்   மறுப்பாளன் என்பதை மறந்தீரா  ”  என்று கேட்டு வைத்தேன். பத்து என்றால் கல். பத்துமலை கல் மலை என்று பெயர். சுண்ணாம்பும்லைதான் அது. அடர்ந்த காடுகள் அதன் பின்னணியில். விலங்குகள், விதம்விதமான மரங்கள் அழகூட்டுகின்றன.பழங்கால கொக்காலிகா மரம் , விதவிதமான  மஞ்சள் நிற மரங்கள், கொஞ்சம் வெற்றிலை மணம்.நம்மூர் ஆண்மைச் சின்னம் குரியன் பழங்கள் மலிவாக்க் குவிந்து  கிடக்கின்றன.பொரிகடலையும்.  இடது பக்கம் மினி வள்ளுவர் கோட்டம். சின்ன திருவள்ளுவர். கொஞ்சம் கொஞ்சும் திருக்குறள்கள்.

Continue Reading →

புதிய பண்பாட்டுத் தளம் அங்குரார்பண நிகழ்வு!

எதிர்வரும் 14.10.2012 (ஞாயிறு) அன்று      ஹட்டனில் உள்ள கிறித்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில்(ஹைலன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில்) காலை 10.00 மணிக்கு "புதிய பண்பாட்டுத் தளம்" (புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பு) பிரகடனப்படுத்தப்படவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்வில், அங்குரார்பண உரையை கலாநிதி. ந.இரவீந்திரன் நிகழ்த்த உள்ளார். இவைத் தவிர புதிய பண்பாட்டு அமைப்புக்கான தேவைக் குறித்து திரு. மோகன் சுப்பிரமணியம், கவிஞர்.சு. முரளிதரன், திரு. அ.ந. வரதராஜ், சிறுகதையாசிரியர் கொ. பாபு, கலைஞர் பிரான்ஸிஸ் ஹெலன், திரு. சு உலகேஸ்பரா முதலானோர் உரையாற்ற உள்ளனர். இந்நிகழ்வில் மூத்த இடதுசாரி தோழர்களான கே. சுப்பையா, நீர்வை பொன்னையன் முதலானோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். எதிர்வரும் 14.10.2012 (ஞாயிறு) அன்று      ஹட்டனில் உள்ள கிறித்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில்(ஹைலன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில்) காலை 10.00 மணிக்கு “புதிய பண்பாட்டுத் தளம்” (புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பு) பிரகடனப்படுத்தப்படவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்வில், அங்குரார்பண உரையை கலாநிதி. ந.இரவீந்திரன் நிகழ்த்த உள்ளார். இவைத் தவிர புதிய பண்பாட்டு அமைப்புக்கான தேவைக் குறித்து திரு. மோகன் சுப்பிரமணியம், கவிஞர்.சு. முரளிதரன், திரு. அ.ந. வரதராஜ், சிறுகதையாசிரியர் கொ. பாபு, கலைஞர் பிரான்ஸிஸ் ஹெலன், திரு. சு உலகேஸ்பரா முதலானோர் உரையாற்ற உள்ளனர். இந்நிகழ்வில் மூத்த இடதுசாரி தோழர்களான கே. சுப்பையா, நீர்வை பொன்னையன் முதலானோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இன்றைய உலகமயமாதல் சூழலில் பன்னாட்டுக் கொம்பனிகளின் வேட்டைக்காடாக எமது மண் மாற பண்பாட்டுச் சிதைவுகள் முனைப்பாக்கப்பட்டு வருகிறது. சொந்தப் பண்பாட்டை இழக்கும்போது பிறர்க்குப் பூரண அடிமையாதல் தவிர்க்க முடியாது என்றவகையில் பண்பாட்டுத் தளத்திலான இந்தத் தாக்குதல்கள் என்பதறிவோம். இத்தகைய இருள் சூழ்ந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

Continue Reading →