சிறுகதை: புரை

கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்)மருத்துவமனை வளாகம் முழுக்க, முடிச்சு முடிச்சாக ,ஜனங்கள் நின்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். துக்கமும் அவமானமும் ஒருபக்கம் என்றால், அதிர்ச்சியின் ஆகாத்தியம் இன்னொரு பக்கம். மூத்த மகன் சரவணனால் பேசவே முடியவில்லை. சரவணனுக்கு இந்த 52 வயசுக்குப் பொருத்தமாக மண்டை முழுக்க சஹாராப்பாலைவனமாக பளபளத்துக்கொண்டிருந்தது. இரண்டாமவர் வீரராகவனுக்கும் வழுக்கை இல்லையென்றாலும் கூட,அவரது தலையும் பொல்லென்று சுத்தமாய்  நரை முடிதான்,. இவர்களுக்கே பேரன் பேத்தி பிறந்துவிட்டார்கள். அப்படியிருக்க இந்த கிழவன், கொள்ளுத் தாத்தாவாய் ,லட்சணமாய், வாழவேண்டிய , இல்லை, , ஒரு மூலையிலாவது முடங்க்கிடக்கவேண்டிய வயசில் போய், இப்படி ஒரு காரியத்தை செய்துட்டாரே? கொஞ்சமாவது பெற்ற பிள்ளைகளோட மான அவமானத்தைப்பற்றி யோசிச்சாரா?  கோபப்படுவதா?  நெஞ்சிலறைந்து கொண்டு அழுவதா?  ? “என்று இரண்டும் கெட்டான் நிலையில் நிலைகுலைந்துபோய் நின்றிருந்த மகன்களை, நெருங்கிய உறவினரான ராஜு மாமாதான் தட்டிக்கொடுத்து , ஒவ்வொரு காரியங்களையும் பொறுப்பாக, செய்ய வைத்தார்.இதில் சனிப்பொணம் தனியாகப்போகக்கூடாது என்று, கூடவே அதற்கான பரிகாரத்தையும் செய்யவைத்தே,பெரியசாமித் தாத்தாவை, மண்டாய் சுடுகாட்டில், மின்தகனத்துக்கு கொண்டு போனார்கள். அதுவரை தாங்கிக்கொண்டு நின்ற பெரியவர் சரவணனால் அதற்குமேலும் தாங்கமுடியவில்லை.

Continue Reading →

படிப்பகத்தில் புலம்பெயர் இலக்கியப் பதிவுகள்!

புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியச் செயற்பாடுகளைப் பதிவு செய்யும் சஞ்சிகைகள் பலவற்றை ‘படிப்பகம்’ இணையத்தளம் பதிவு செய்திருக்கிறது. புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிக் கட்டுரைகளைப் படிப்பவர்கள்…

Continue Reading →

சிறுகதை: யன்னல்!

யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் இரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.[உயிர் நிழல் ஆகஸ்ட் 2000 இதழில் வெளியான சிறுகதை. பதிவுகள், திண்ணை இணைய இதழ்களிலும் பின்னர் மீள்பிரசுரமானது. -பதிவுகள்.] யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் இரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். ‘பேப்’ வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு ‘திரில்’ இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த ‘யமேய்க்க’ மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளையர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். ‘பேப்’ வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். ‘சிறு இந்தியா’ , ‘சிறு இத்தாலி’..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.

Continue Reading →