வெப்துனியா.காம்: சீன படைப்பாளி மோ யான் (Mo Yan) என்பவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை சீன படைப்பிலக்கிய எழுத்தாளர் மோ யான் வென்றுள்ளார். குவான் மொயே என்ற இயற்பெயருடைய இந்த படைப்பிலக்கியவாதி 1955 ஆம் ஆண்டு பிறந்தார். வட-கிழக்கு சீனாவில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் இவர் பெரும்பாலும் வளர்ந்தார். சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது இவருக்கு 12 வயது. அப்போது பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு சென்றார். முதலில் விவசாய வேலையைச் செய்த இவர் பிறகு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு வாக்கில் அவர் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்தார். இதில் இருக்கும்போதுதான் இலக்கையங்களை வாசிக்கத் தொடங்கினார், பிறகு எழுதவும் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை 1981ஆம் ஆண்டு இலக்கியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்தே இவரது பெயர் பிரபலமானது. Touming de hong luobo என்ற நாவல் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. இது 1986ஆம் ஆண்டு வெளிவந்தது என்றால் 1993ஆம் ஆண்டு இதே நாவல் பிரெஞ்ச் மொழியில் பெயர்க்கப்பட்டது.[2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு சீன எழுத்தாளரான மோ யானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளின் மீள்பிரசுரமிது. ஒரு பதிவுக்காக. – பதிவுகள்-] 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை சீன படைப்பிலக்கிய எழுத்தாளர் மோ யான் வென்றுள்ளார். குவான் மொயே என்ற இயற்பெயருடைய இந்த படைப்பிலக்கியவாதி 1955 ஆம் ஆண்டு பிறந்தார். வட-கிழக்கு சீனாவில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் இவர் பெரும்பாலும் வளர்ந்தார். சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது இவருக்கு 12 வயது. அப்போது பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு சென்றார். முதலில் விவசாய வேலையைச் செய்த இவர் பிறகு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு வாக்கில் அவர் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்தார். இதில் இருக்கும்போதுதான் இலக்கையங்களை வாசிக்கத் தொடங்கினார், பிறகு எழுதவும் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை 1981ஆம் ஆண்டு இலக்கியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்தே இவரது பெயர் பிரபலமானது. Touming de hong luobo என்ற நாவல் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. இது 1986ஆம் ஆண்டு வெளிவந்தது என்றால் 1993ஆம் ஆண்டு இதே நாவல் பிரெஞ்ச் மொழியில் பெயர்க்கப்பட்டது.

Continue Reading →