சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி!

- வெங்கட் சாமிநாதன் -அது 1964-ஓ அல்லது 1965-வது வருடமாகவோ இருக்கவேண்டும். சரியாக நினைவில் இல்லை. உயர் அதிகாரிகளுடன் எனக்கு எப்போதும் ஒரு  உரசல், ஒரு  மோதல் இருந்து கொண்டே இருக்கும். அது எனக்கோ அதிகாரிகளுக்கோ பொறுத்துக் கொள்ளும் அளவில் இருந்தால் சரி. பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் எனக்கு அந்த இடத்தை விட்டு மாற்றல் கட்டளை பிறந்து விடும். மாற்றல் தான் நிகழுமே தவிர அலுவலக வாழ்க்கைக்கு உலை வைக்கும் தீவிர நடவடிக்கை ஏதும் இராது. இருந்ததில்லை. என் ஜாதகம் அப்படி. பெரிய சந்தோஷங்களும் இருந்ததில்லை. பெரிய துக்கங்களும் இருந்தத்டில்லை என் வாழ்க்கையில். அப்படி ஒரு ஜாதகம் என்னது. இப்போது நினைத்து பார்க்கும்போது அவ்வித தீவிர தவறுகள் ஒன்றிரண்டு  என் தரப்பில் நிகழ்ந்த போதும் நான் தப்பியிருக்கிறேன். என்னிடம் அக்கறை கொண்ட உயர் மட்ட மேல் அதிகாரி எவராவது ஒருவர் அத்தவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருககிறார். “அதை விடச் சிறிய தவற்றுக்கெல்லாம் ,”நீங்கள் இப்போதே வீட்டுக்குப் போகலாம், வேலை செய்த நாட்களுக்கு சம்பளம் வீடு வந்து சேர்ந்துவிடும்” என்று வேலைக்குச் சேர்ந்த ஒரு சில நாட்களுக்குள் திருப்பி அனுப்பப்பட்ட நபர்களை நான் வேலையில் சேர்ந்த புதிதில்  பார்த்திருக்கிறேன். போலீஸ் விசாரணையெல்லாம் முடிந்த் பின் தான் வேலைக்குச் சேரமுடியும் என்றாலும், பின்னர் ஏதும் விவரம் தெரிய வந்திருக்கும்.

Continue Reading →

நேர்காணல் – விமர்சனத்தால் மழுங்கடிப்பதல்ல அழகு! திறனாய்வால் தெளிவுபடுத்துவதே சிறப்பு: தமிழ், ஆங்கில திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன்

கே.எஸ்.சிவகுமாரன்[எழுத்தாளரும் , திறனாய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன் தினகரன் வாரமஞ்சரியில் வெளியான தன்னுடனான நேர்காணலை முகநூலில் பதிவு செய்திருந்தார். அதனை ‘பதிவுகள்’ தனது வாசகர்களுக்காக மீள்பதிவு செய்கின்றது. -பதிவுகள்] 1953களில் எழுத்துப்பணியை ஆரம்பித்து, ஊடகவியலாளர், அறிவிப்பாளர், திறனாய்வாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என பல தளங்களில் இயங்கியவர்தான் கே.எஸ். சிவகுமாரன். இன்று 76 வயதிலும் அதே சுறுசுறுப்புடன் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இவரது தனித்துவ திறமையை அசைபோட்டு பார்க்க விரும்பினேன். கடந்த முதலாம் திகதி 76வது பிறந்த நாளை குதுகலத்துடன் கொண்டாடிய அவரிடம் பிறந்தகத்தைப் பற்றிக் கேட்டேன்.

என்னுடைய பிறந்தகமென்று கூறினால் அது மட்டக்களப்பாகத்தான் இருக்கும் என்னுடைய மூதாதையர்கள் யாழ் கந்தரோடையைச் சேர்ந்தவர்கள். என் தந்தையார் அரச ஊழியராக இருந்தமையால் காலத்திற்கு காலம் குட்டி போட்ட பூனைகள் போல் இடத்திற்கு இடம், எங்களை காவிச் சென்றிருந்தார். என்னை நான் உலகளாவிய மனிதன் என்று சொல்வதையே விரும்புபவன். ஏனெனில் என் வாழ்க்கைப் பின்புலத்தில் இலங்கை மண்ணும் – பாரத மண்ணும் பிணைந்திருக்கின்றது.

Continue Reading →