[ பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, “Lemuria : The Last and the Lost Continent of Tamils” என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான “அருங்கலைச் சொல் அகரமுதலி” உதவியோடு தமிழாக்கித் தட்டச்சு செய்தவர் சேசாத்திரி ] இலெமூரியாக் கண்டம் அல்லது வேறுவகையில் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலப்பரப்பு இந்நாள்களில் அறிஞர் கைகளில் மிகப் பெரும் கவனம் பெற்று வருகின்றது. இக்கள ஆய்வில் முன்னோடியானவர் பசுமலை சோமசுந்தர பாரதியார். அவரைப் பின்பற்றி எம். எசு. பூர்ணலிங்கம் பிள்ளை நெடுங்காலத்திற்கு முன்னம் ‘தமிழ் இந்தியா’ என்ற நூலை யாத்தார். க. அப்பாதுரையும் இப் பொருண்மைக்கூறு (subject) ஆய்வில் பங்களிப்பு ஆற்றியவர் தாம். இலெமூரியாக் கண்டம் குறித்து முனைவர் பட்டத்திற்கு வழிநடத்துகின்ற ஆய்வேடுகளும் உள்ளன.