[எழுத்தாளர் ஜீவி தனது வலைப்பதிவான ‘பூ வனத்தில்’ எழுதிய கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. இந்த மீள்பதிவின் மூலம் ஜீவியின் ‘பூ மனம்’ வலைப்பதிவினைப் ‘பதிவுகள்’ தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது. http://jeeveesblog.blogspot.ca/ – ‘பதிவுகள்’] நெருங்கிய வட்டத்தில் கல்யாணியாகிறவர், கவிதைகள் எழுதும் பொழுது, கல்யாண்ஜி ஆவார். சொந்தப் பெயர் கல்யாணசுந்தரம் வேலை பார்த்த பாரத ஸ்டேட் வங்கியோடு சரி போலிருக்கு. சகோதரர் வல்லிதாசனிடமிருந்து எடுத்துக் கொண்ட வண்ணதாசன் கதைகளுக்காகவும், கல்லூரி நண்பர் அழைத்த கல்யாண்ஜி கவிதைகளுக்காகவும் ஆயிற்று. ஆனால் வண்ணதாசனைத் தெரிந்த அளவுக்கு ரொம்ப பேருக்கு கல்யாண்ஜியைத் தெரியாது; அதாவது இவர் தான் அவர் என்று தெரியாது. வண்ணதாசனும் எந்த காலத்தும் இலக்கிய உலகில் தன்னைப் படாடோபமாகக் காட்டிக் கொண்டதில்லை. எழுத்திலும் அப்படித்தான். எல்லாமே அவரைப் பொருத்த மட்டில் இயல்பாகிப் போன விஷயங்கள்.
வணக்கம், கிரிதரன். ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக நீங்கள் எழுதிய எதிர்வினையை ‘பதிவுக’ளில் பார்த்தேன். பொதுவாக உரைக்கட்டுசார் விடயங்களுக்கான எதிர்வினைகள் வருவது ஆரோக்கியமானது என்பதே எனது கருத்தாக என்றும் இருந்துவருகின்றது. அது குறித்து என்வரையில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் எதிர்வினையாக மட்டுமே அது இருந்திருந்திருந்தால் அதற்கு இவ்வாறான ஒரு பதில்மறுப்பு என்னளவில் அவசியமில்லாமலே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சுமத்தியது ஒரு குற்றச்சாட்டு அல்லவா? என் வாசிப்பின் மீதான உங்களது அவநம்பிக்கையை என்மேல் சுமத்திய ஒரு குற்றச்சாட்டாகவே அதை என்னால் பார்க்க முடிகிறது. அக் குற்றச்சாட்டின் பதில்மறுப்பிற்காக உரைக்கட்டினைவிட கடித வடிவம் சிலாக்கியமாகப்பட்டதில் இவ்வாறு எழுத நேர்ந்திருக்கிறது. என் வாசிப்பின் போதாமையை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள், கிரிதரன்?
256-பக்கங்களுடன் 2010 ஆகத்தில் வெளி வந்த இந்நூல், இதன் ஆசிரியை நிலா எனும் பரமலிங்கம் உதயகுமாரியால் ஒக்தோபர் 2012ல் எனக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன் நூலின் பின்னணியையும் நூலாசிரியையின் 30-சொச்சம் வருட கால உடம்பியல் இயலாமை, அவரின் பிரச்சனைகள், வாழ்க்கையின் குறிக்கோள்கள் முதலியவற்றையும் முதலில் உற்று நோக்கிப் படித்தபின் அதன் உள்ளுடனை அங்கும் இங்குமாகத் தட்டிப் பார்த்துச் சுவைத்தேன். இப்பானையிலுள்ள பற்பல சோறுகளைப் பதம்பார்த்து ரசித்தபின் கீழ்வரும் கருத்துகளை எனக்கு மனமார்த்தமாக எழுந்து வந்த முறையில் பதிக்கிறேன். உண்மையில் ‘நிலாவின் இந்திய வைத்திய உலா’ என்றே தலையங்கம் கொடுக்கப்பட்டு இருக்கவேண்டிய நூல். ஏனெனில் அந்த அம்சமே இந்த நூலை நான் முதலில் படிக்க உந்திச் சென்றது.
பெரும்பாலான கதிரவன் மண்டலங்கள் (எங்கள் கதிரவன் மண்டலம் உட்பட) பல கோள்களை உடையனவாய் அமைந்து, அக் கோள்கள் மையத்திலுள்ள விண்மீனைச் (சூரியன்) சுற்றி வருகின்றன. ஆனால் தனியான ஒரு கோள் பல விண்மீன்களைச் சுற்றி வரும் செய்தியானது இயல்பாக நிகழக்கூடியதென்பதை விஞ்ஞானப் புனைகதைகள் மூலம் அறிகின்றோம். இச் சமயத்தில் கதிரவன் மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிரபஞ்சத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த புதுக் கோள் ஒன்றை ஓர் அருங்கலை வான்கணிப்பாளர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இக் கோளுக்கு நான்கு (04) வேறுபட்ட விண்மீன்கள் (சூரியன்கள்) உள்ளன. இக் கோளுக்கு பி.ஏச்1 ( PH1 =Planet Hunters1) என பெயரிடப்பட்டுள்ளது. இக் கோள் பூமியிலிருந்து 3,200 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது சேண்மம் (நெப்தியூன் – Neptune) கோளையொத்த ‘ஆவி இராட்சதன்’ என்றும் கூறுவர். இக் கோள் நம் பூமிக் கோளை விட 6.2 மடங்கு பெரியதாகும்.