[ பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, “Lemuria : The Last and the Lost Continent of Tamils” என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான “அருங்கலைச் சொல் அகரமுதலி” உதவியோடு தமிழாக்கித் தட்டச்சு செய்தவர் சேசாத்திரி ] இலெமூரியாக் கண்டம் அல்லது வேறுவகையில் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலப்பரப்பு இந்நாள்களில் அறிஞர் கைகளில் மிகப் பெரும் கவனம் பெற்று வருகின்றது. இக்கள ஆய்வில் முன்னோடியானவர் பசுமலை சோமசுந்தர பாரதியார். அவரைப் பின்பற்றி எம். எசு. பூர்ணலிங்கம் பிள்ளை நெடுங்காலத்திற்கு முன்னம் ‘தமிழ் இந்தியா’ என்ற நூலை யாத்தார். க. அப்பாதுரையும் இப் பொருண்மைக்கூறு (subject) ஆய்வில் பங்களிப்பு ஆற்றியவர் தாம். இலெமூரியாக் கண்டம் குறித்து முனைவர் பட்டத்திற்கு வழிநடத்துகின்ற ஆய்வேடுகளும் உள்ளன.
இலங்கையில் உள்ள மதங்களுள் இந்து மதத்திற்கு 3000 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. பௌத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த முன்னரே இந்து மதம் வழிபாட்டுக்குரிய மதமாக இருந்ததற்கு உறுதியான தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பண்டுகாபயன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்தபோது, அங்கிருந்த சிவிகசாலா, சொத்திசாலா என்னும் இரு ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகிறது. பேராசிரியர் செனரத் பரணவிதானா இவ்வாலயங்களில் ஒன்று சிவலிங்கத்தைக் கொண்ட ஆலயம் எனவும், மற்றையது பிராமணர்கள் மந்திரம் ஓதும் இடம் எனவும் கூறுகிறார். ஆயினும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தைப் போல் இலங்கையிலும் காணப்பட்ட சிறு தெய்வங்கள் அல்லது கிராமிய ஆலயங்கள் அழியக் கூடிய மண், மரம், சுதை கொண்டு அமைக்கப்பட்டதால் அவை பற்றிய ஆதாரங்கள் பிற்காலத்தில் அதிகம் கிடைக்கவில்லை.
[2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு சீன எழுத்தாளரான மோ யானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளின் மீள்பிரசுரமிது. ஒரு பதிவுக்காக. – பதிவுகள்-] 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை சீன படைப்பிலக்கிய எழுத்தாளர் மோ யான் வென்றுள்ளார். குவான் மொயே என்ற இயற்பெயருடைய இந்த படைப்பிலக்கியவாதி 1955 ஆம் ஆண்டு பிறந்தார். வட-கிழக்கு சீனாவில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் இவர் பெரும்பாலும் வளர்ந்தார். சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது இவருக்கு 12 வயது. அப்போது பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு சென்றார். முதலில் விவசாய வேலையைச் செய்த இவர் பிறகு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு வாக்கில் அவர் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்தார். இதில் இருக்கும்போதுதான் இலக்கையங்களை வாசிக்கத் தொடங்கினார், பிறகு எழுதவும் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை 1981ஆம் ஆண்டு இலக்கியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்தே இவரது பெயர் பிரபலமானது. Touming de hong luobo என்ற நாவல் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. இது 1986ஆம் ஆண்டு வெளிவந்தது என்றால் 1993ஆம் ஆண்டு இதே நாவல் பிரெஞ்ச் மொழியில் பெயர்க்கப்பட்டது.
குருத்துமணல் என்ற கவிதை நூல் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 78 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர் மருதமணாளன் என்ற புனைப்பெயரில் எழுதிவந்த இப்றாஹீம் எம். றபீக் அவர்களாவார். இவர் 1986 ஆம் ஆண்டுகளில் ‘கன்னிக் கவிதை’ என்ற தலைப்பில் தனது கன்னிக் கவிதையை சிந்தாமணிப் பத்திரிகையில் எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்குள் அறிமுகமாகியவர். அக்கரைப் பாக்கியனிடம் மரபுக் கவிதைகளைக் கற்றவர். ஏற்கனவே இவர் வெளிநாட்டில் தொழில் புரியும் போது உலா, பயணம் ஆகிய நூல்களை வெளியீடு செய்துள்ளார். குருத்துமணல் பரப்புகளால் நிரம்பி வழியும் என் முற்றம் என்ற தலைப்பிட்டு இப்றாஹீம் எம். றபீக் அவர்கள் தனதுரையில் ‘அன்றைய காலப் பகுதியில் மரபுக் கவிதை என்றால் தேனைத் தொட்டு நாக்கில் வைத்தாற் போல் சுவையாக இருந்தது. அப்போது புதுக் கவிதையில் எனக்கு நாட்டம் குறைவாக இருந்தது. அது மாறி, இன்றைய நிலையில் பல கோணங்களிலும் புதுக் கவிதைகள் ஆலம் விருட்சம் போல் வளர்ந்து வருகின்றன. அவற்றுக்கு ஏற்ப என்னையும், எனது நடைமுறையையும் மாற்றிக் கொண்டேன். எனக்கு தெரிந்த வகையில் இதில் புதுக் கவிதைகளை எழுதியுள்ளேன். இதிலுள்ள அநேகமான கவிதைகள் இலங்கை வானொலியான பிறை எப்.எம். இல் ஒலிபரப்பாகியவை’ என்கிறார்.
‘ஆனைக்கோட்டைக்கு புகழ்பூத்த ஒரு இசைமரபும், இசைக்கலைஞர்களும் உள்ளனர். அந்த இசை மரபில் முற்போக்கு எழுத்தாளரும், மிருதங்கக் கலைஞருமான எஸ்.அகஸ்தியருக்கு தனித்த இடம் ஒன்று உண்டு. அந்த இலக்கியப் பெருமகனின் பேரனார் அகஸ்ரி ஜோகரட்னம் ஆனைக்கோட்டை இசைமரபின் இளம் வாரிசாக லண்டனில் மிருதங்க அரங்கேற்றம் நடத்தியிருப்பது குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்’ என்று லண்டனில் நடைபெற்ற அகஸ்ரி ஜோகரட்னத்தின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையில் பிரபல மிருதங்க வாத்திய விசாரத் பிரம்மஸ்ரீ ஏ.என். சோமஸ்கந்த சர்மா அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் ‘அண்மைக் காலத்தில் நான் கலந்துகொண்ட மிருதங்க இசை நிகழ்ச்சிகளில் அகஸ்ரி ஜோகரட்னம் போல இத்துணை இளவயதில் அபூர்வமான இசை ஞானத்தைக் காட்டிய ஒரு இளவலை நான் கண்டது கிடையாது. அவருக்கு இந்த இசைஞானம் இறைவன் அளித்த கொடையாகும். தாளம் தவறாமல், சுருதி பிசகாமல் சங்கீத வித்துவான் மணிபல்லவம் கே. சாரங்கனின் வாய்ப்பாட்டிற்கு ஈடுகொடுத்து அவர் வாசித்த மிருதங்கம் பரவசமூட்டுவதாகும். இந்த அபூர்வமான மிருதங்க ஞானத்தை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு உண்மையில் பூரணமான இசைக்கச்சேரி போல அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். செல்வன் அகஸ்ரி தனக்கு வாய்த்திருக்கும் இந்த இசைத் திறமையை தொடர்ந்தும் பேணி இத்துறையில் கீர்த்தி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்றும் குறிப்பிட்டார்.
அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம்! அண்ணா பிறந்தநாளான 15.09.2012 அன்று முதல் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் அண்ணா பற்றாளர்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் யாவரும் இலவசமாக…
அது 1964-ஓ அல்லது 1965-வது வருடமாகவோ இருக்கவேண்டும். சரியாக நினைவில் இல்லை. உயர் அதிகாரிகளுடன் எனக்கு எப்போதும் ஒரு உரசல், ஒரு மோதல் இருந்து கொண்டே இருக்கும். அது எனக்கோ அதிகாரிகளுக்கோ பொறுத்துக் கொள்ளும் அளவில் இருந்தால் சரி. பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் எனக்கு அந்த இடத்தை விட்டு மாற்றல் கட்டளை பிறந்து விடும். மாற்றல் தான் நிகழுமே தவிர அலுவலக வாழ்க்கைக்கு உலை வைக்கும் தீவிர நடவடிக்கை ஏதும் இராது. இருந்ததில்லை. என் ஜாதகம் அப்படி. பெரிய சந்தோஷங்களும் இருந்ததில்லை. பெரிய துக்கங்களும் இருந்தத்டில்லை என் வாழ்க்கையில். அப்படி ஒரு ஜாதகம் என்னது. இப்போது நினைத்து பார்க்கும்போது அவ்வித தீவிர தவறுகள் ஒன்றிரண்டு என் தரப்பில் நிகழ்ந்த போதும் நான் தப்பியிருக்கிறேன். என்னிடம் அக்கறை கொண்ட உயர் மட்ட மேல் அதிகாரி எவராவது ஒருவர் அத்தவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருககிறார். “அதை விடச் சிறிய தவற்றுக்கெல்லாம் ,”நீங்கள் இப்போதே வீட்டுக்குப் போகலாம், வேலை செய்த நாட்களுக்கு சம்பளம் வீடு வந்து சேர்ந்துவிடும்” என்று வேலைக்குச் சேர்ந்த ஒரு சில நாட்களுக்குள் திருப்பி அனுப்பப்பட்ட நபர்களை நான் வேலையில் சேர்ந்த புதிதில் பார்த்திருக்கிறேன். போலீஸ் விசாரணையெல்லாம் முடிந்த் பின் தான் வேலைக்குச் சேரமுடியும் என்றாலும், பின்னர் ஏதும் விவரம் தெரிய வந்திருக்கும்.
[எழுத்தாளரும் , திறனாய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன் தினகரன் வாரமஞ்சரியில் வெளியான தன்னுடனான நேர்காணலை முகநூலில் பதிவு செய்திருந்தார். அதனை ‘பதிவுகள்’ தனது வாசகர்களுக்காக மீள்பதிவு செய்கின்றது. -பதிவுகள்] 1953களில் எழுத்துப்பணியை ஆரம்பித்து, ஊடகவியலாளர், அறிவிப்பாளர், திறனாய்வாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என பல தளங்களில் இயங்கியவர்தான் கே.எஸ். சிவகுமாரன். இன்று 76 வயதிலும் அதே சுறுசுறுப்புடன் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இவரது தனித்துவ திறமையை அசைபோட்டு பார்க்க விரும்பினேன். கடந்த முதலாம் திகதி 76வது பிறந்த நாளை குதுகலத்துடன் கொண்டாடிய அவரிடம் பிறந்தகத்தைப் பற்றிக் கேட்டேன்.
என்னுடைய பிறந்தகமென்று கூறினால் அது மட்டக்களப்பாகத்தான் இருக்கும் என்னுடைய மூதாதையர்கள் யாழ் கந்தரோடையைச் சேர்ந்தவர்கள். என் தந்தையார் அரச ஊழியராக இருந்தமையால் காலத்திற்கு காலம் குட்டி போட்ட பூனைகள் போல் இடத்திற்கு இடம், எங்களை காவிச் சென்றிருந்தார். என்னை நான் உலகளாவிய மனிதன் என்று சொல்வதையே விரும்புபவன். ஏனெனில் என் வாழ்க்கைப் பின்புலத்தில் இலங்கை மண்ணும் – பாரத மண்ணும் பிணைந்திருக்கின்றது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து இலண்டனை வதிவிடமாக்கிக் கொண்ட டாக்டர் சிவ தியாகராஜா அவர்களின் 2008ஆம் ஆண்டின் 248-பக்க ‘தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்’ என்னும் ‘ஒரு பேப்பர்’ கட்டுரைத் தொடர் நூலுக்கு 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய ஆய்வு நூல் என தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கு. சின்னப்ப பாரதி அறக் கட்டளையினர் பரிசளிக்கத் தெரிவு செய்துள்ளனர். இதற்குரிய விருதைச் சென்ற 02-10-2012ஆம் திகதியன்று நாமக்கல்லில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவில் டாக்டர் சிவ தியாகராஜா அவர்களுக்கு வழங்கிப் பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந் நூல் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் அணிந்துரையுடன் தமிழக மணிமேகலைப் பிரசுரத்தினால் வெளியிடப்பட்டது. சிவ தியாகராஜா கொழும்பு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இலண்டனில் தமிழ் மக்களின் நோயியல் தொடர்பான மரபியல் ஆய்வுகளுக்கு தத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். மருத்துவத்துறையில் 40 ஆண்டுகளாக இலங்கையிலும் பிரித்தானியாவிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை இந்திய பிரித்தானியப் பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் கதைகளையும் தொடர் நாவல்களையும் எழுதியவர். இதுவரை 10 தமிழ் நூல்களும் நான்கு ஆங்கில நூல்களும் வெளியிட்டவர். லைலா-மஜ்னு, தேன் சிந்தும் மலர், கில்கமேஷ் காவியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், மருத்துவக் களஞ்சியம், A Review of Ectopic Pregnancy, The King of Hearts, Peoples and Cultures of Early Sri Lanka, Siva Temples of Early Sri Lanka ஆகியன இவரது முக்கிய படைப்புக்கள். இவர் எமது பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஈழவர் இலக்கியச் சங்கமும் அவரைப் பாராட்டுகின்றது.
நுணாவிலூர் கா. விசயரத்தினம், இணைப்பாளர்,
Eelavar Literature Academy of Britain (ELAB)
wijey@talktalk.net