லண்டனில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

லண்டனில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்நவஜோதி ஜோகரட்னம் - லண்டன்.லண்டன் மேடைகள் கடந்த சில மாதங்களாக பரதநாட்டியம், பாட்டு, மிதங்கம், வயலின், வீணை, புல்லாங்குழல் என்று களை கட்டி கலைப் பூரிப்புடன் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளான சர்ப்பதனா நாகேஷ்வரன், சஜந்தனா நாகேஷ்வரன் சகோரதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் லண்டன் வெயர் வில்ட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ‘புஷ்பாஞ்சலி,  விநாயகர் ஸ்துதி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், கணபதி தலாட்டு, கீர்த்தனம், சிவ தாண்டவம், தில்லானா என்ற ஒழுங்கில் விறுவிறுப்பு, கவர்ச்சி, கர்ச்சிதம் நிறைந்த நடன உருப்படிகளோடு பார்வையாளர்களை கட்டி வைத்த பெருமை ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளான சர்ப்பதனா நாகேஷ்வரன், சஜந்தனா நாகேஷ்வரன் சகோதரிகளை பெருமையாக நோக்க வைக்கிறது என்று பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த London  Oriental Examination Board இன் Director கானபூஷணம் ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் தெரிவித்திருந்தார். திறமையான பக்கவாத்தியக் கஞைர்களாhல் அரங்கு சிறப்படைந்திருந்ததையும் மேலும் அவர் பாராட்டியிருந்தார்.

Continue Reading →