அகஸ்தியரின் ‘மானுட தரிசனங்கள்’ நூலிலிருந்து…

அகஸ்தியரின் 'மானுட தரிசனங்கள் [எஸ் அகஸ்தியர் அவர்களின் நினைவையொட்டி (29.08.1926  — 08.12.1995)  அவரது ‘மானிட தரிசனங்கள்’ என்ற விவரணச் சித்திரத்திலிருந்து தரிசனம் 23 ஐத் தருகின்றோம். ‘பதிவுகள்’ இதழுக்கு அனுப்பியவர் அவரது மகள்: நவஜோதி யோகரட்ணம் – பதிவுகள் ]

      லெக்ஷனெண்டா தமிழருக்க தமிழர்தான் போட்டியெண்டில்லை.
      அந்த நசல் வந்து முடிஞ்சாலும் தமிழருக்கு, ‘நான்  
      உயர்ந்தவன்,  நீதாழ்ந்தவ’னெண்ட போட்டி பொறாமை   
      பெருமைதான் முதிசச்  சொத்து. வீண் பெருமை பேசி
      அநியாயமாக அழியிறதுக்கும் பந்தயம் கட்டுவினம்.
      இவேதான், தமிழர் ஒற்றுமையா இருக்கவேணு’மெண்டு சும்மா
      ஓயாமல் கத்துறது. இந்தப் புலுடா சிங்களச் சனத்துக்கும்
      வடிவாத் தெரியும்.
    
யாழ்ப்பாண நகரசபைக் கோபுர முகப்பு வாசலை மருவிய வெட்டை மைதானம் சன நெருக்கடிக்குள் திமிலோகப்பட்டது. வட மாகாணக் கனதனவான்கள், அப்புக்காத்து புரக்கிராசியார், பேர்போன டாக்குத்தர்மாரும், நொத்தாரிஸ், உடையார், மணியம், விதானைமாரும், இந்திய ஆமை வாய்க்குள் அபின் திணித்துக் கடத்தல் வியாபாரம் செய்கிற பெரும் புள்ளிகள், நகைக் கடைக்காறர்கள், சம்மாட்டிமார், கத்தோலிக்கச் சுவாமிமார் என்று தங்கள் தங்கள் சீவியத்துக்காகத் தவம் செய்ய வந்தவர்களாட்டம் மேடையைச் சூழ்ந்து ஓர் அரண்மனை ஏவலாளர்கள்போல் புட்டுவங்களில் வீற்றிருந்தனர்.

Continue Reading →