புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.

Continue Reading →

வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்புஇன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார். மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இத் தொகுதி 21 கதைகளை உள்ளடக்கி 114 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டி, மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ஆகியவற்றில் ரிஸ்னா பங்குபற்றி பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘இளங்கோவன் கதைகள்”! இந்தி மொழியில் வெளியீடு..!

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 'இளங்கோவன் கதைகள்"!  இந்தி மொழியில் வெளியீடு..!பிரான்ஸ் நாட்டில் வதியும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கௌரவிக்கப்பட்டார். இவரது ‘இளங்கோவன் கதைகள்” சிறுகதைத் தொகுதி ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்” என்ற பெயரில் புதுடில்லியிலுள்ள பிரபல இந்தி மொழிப் பதிப்பகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது. அண்மையில் (27 செப்டம்பர் 2012) புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘புலச் சிதறலுக்குள்ளானோரின் குரல்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில்ää ‘இளங்கோவன் கதைகள்” இந்தி மொழிப் பதிப்பான ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்” என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. இந்நூல் குறித்து இந்தி மொழிப் பேராசிரியர்கள் ஆய்வுரை நிகழ்த்தினர். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் கலாநிதி என். சந்திரசேகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இந்தி மொழிப் பேராசிரியரும் நூலினை இந்தியில் மொழிபெயர்த்தவருமான பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம் அறிமுகவுரை நிகழ்த்தினார். ‘ஈழத்து இலக்கியத்தில் சிறுகதை வளர்ச்சி” குறித்து நூலாசிரியர் வி. ரி. இளங்கோவன் சிறப்புரையாற்றிச் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார். பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

Continue Reading →

தலைமை நீதியரசரை துகிலுரிந்த துரியோதனர்கள்!

முடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த
பிடி சார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால் பொன் அம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே!

Courtesy (image - Shrani Bandaranayake): http://www.srilankabrief.orgமணி முடி, கிரீடம் அணிந்த மன்னரும் மற்ற எல்லாரும்  கடைசியில்  ஒரு பிடி சாம்பலாய் தீயில் வெந்து அல்லது மண்ணில் புதை உண்டு போவதும் அதைப் பார்த்த பின்னும் இந்த உறவுகள் என்னும் பிடி சார்ந்த வாழ்கையை நினைப்பது அல்லால்  பொன்னால் செய்யப்பட்ட நடன சபையில் ஆடுபவர் (சிவன்)  திருவடி பற்றி நாம் பிழைக்க வேண்டும் என்று அறிபவர் இல்லையே!  பட்டினத்தடிகளாரது பாடல் இது. வாழ்க்கை நிலையாமை பற்றிப் பாடுகிறார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக தமிழீழப் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தி தோற்கடித்த சிங்கள – பவுத்த பேரினவாதம் இப்போது தனது கறைபடிந்த கைகளை நாட்டின் நீதித்துறைக்கு எதிராக நீட்டியுள்ளது.

Continue Reading →