சாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)

- வெங்கட் சாமிநாதன் -மிகுந்த சாமர்த்திய சாலி என்று நினைத்துக்கொண்டேன். நிர்வாகத்தையும் அவர் புறக்கணிக்க வில்லை. அதே சமயம் தன் வழியில், தன் முறையில் தன் பொறுப்புக்களையும் எதிர் கொண்டார். நிர்வாகத்தோடும் மோதாமல், தனக்களிக்கப்பட்ட பணியையும் சிறப்பாகச் செய்வதற்கும் வழிமுறைகள் தெரிந்திருப்பது சாமர்த்தியம் தானே. பதினெட்டாம் நூற்றாண்டு சாந்தலிங்க சுவாமிகள் யாரா யிருந்தால் என்ன? அவரைப் பற்றி எழுதியுள்ள ஆர். பங்காருசாமி என்பவருக்கு அந்த ஸ்வாமிகள் முக்கியமானவராகத் தெரிந்திருக்கிறார். தெரியாதவரைத் தெரிய வைப்பதும் ஒரு தொண்டு தானே. தமிழ் ஆலோசனைக் குழுவுக்கு இது போன்று பலர் தகுதியுடையவர் களாகப் பட்டிருக்கிறார்கள். ஆனந்த விகடன் மணியன், கே. மீனாட்சி சுந்தரம்(?) எழில் முதல்வன், முடியரசன்(?), தண்டாயுதம். சுகி சுப்பிரமணியம், மீ.ப..சோமசுந்தரம், சஹானே(?), மஸ்கரானஸ்(?) (இப்பெயர்கள் உதாரணத்துக்காகச் சொல்லப்படும் சிலரே) போன்றார் இதில் இடம் பெறும் தகுதியை, தமிழ் ஆலோசனைக் குழு தீர்மானித்து சிபாரிசு செய்ய  என்ஸைக்ளோபீடியா வின் அவ்வப்போதைய எடிட்டர் அதன்படி செயலாற்றியிருக்கிறார். இதில் யாரைக் குறை சொல்ல முடியும்? என்ஸைக்ளோபீடியா எடிட்டர் என்ன செய்ய முடியும்? பொறுப்பு ஆலோசனைக் குழுவினரது தான். சரி, ஆலோசனைக் குழுவினரைத் தீர்மானித்தது யார்? இந்தப் பண்டிதர்கள் தான் எல்லாம் வல்ல, அறிந்த ஞானிகளாக பெயர் பெற்றிருக்க, இவர்கள் தான் சாஹித்ய அகாடமியின் கண்களுக்கு தெரிந்திருக்கிறார்கள்.

Continue Reading →

பாட்டா பாட்டிகளின் பாலுணர்வுகளும் செயற்பாடுகளும்

பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல  உச்சரிக்க சங்கோசப்படுகிறோம். பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம். அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல  உச்சரிக்க சங்கோசப்படுகிறோம். பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம். அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.

Continue Reading →

இவ்வாண்டின் சாகித்ய அக்காதமி “யுவபுரஸ்கார்“ பரிசு பெற்றுள்ள மலர்வதியின் ”தூப்புக்காரி“ நாவல்:

மலர்வதிஇவ்வாண்டின் சாகித்ய அக்காதமி “யுவபுரஸ்கார்“ பரிசு பெற்றுள்ள மலர்வதியின்  ”தூப்புக்காரி“ நாவல்:தூப்புக்காரியின் தோற்றமும் செயல்களும் வாழ்வும் ஒruruரு விளிம்பு நிலை பெண்ணின் அடையாள அவலம். மருத்துவமனையில் சுத்தப்படுத்தும் வேலை செய்யும் ஒரு தாயின் வாழ்வை மகளும்சேர்ந்து ஈர்ப்புடன் ஆத்மாவின் வலியோடு பீ, குளியலறை , எச்சிலை, ரத்தவாடையோடு நாகர்கோவில் பகுதி தலித் மக்கள் வாழ்வோடு ஓரளவு நேர்த்தியாகவே இதில் சொல்லப்பட்டிருக்கிறது.. தாய், மகள், மகளின் மகள் என்று தலைமுறை தொடர்கிறது. இது சாபமாய் படிகிறது.இந்திய சமூகத்தின் பீடை. பெண்கள் மீது சுமத்தப்பட்ட அநாவிசிய பாரம்.இந்த பாரத்தை  உணரும் வண்ணம் எழுதியிருக்கிறார் மலர்வதி. பணம் தொலைவதில் படபடப்பாகிற தாய் தன்னைத் தொலைத்தலிலும் வாழ்க்கையை கடந்து போகிறார்.  திருமண விருந்துகளில் எச்சிலெடுப்பவள் எச்சிலாகிப்போகிறாள். எச்சிலை இலைதான் இந்த நாவல் எழுப்பும் படிமம்.

Continue Reading →

பயித்தியமாகவும் கேடுகெட்டும் போன அரசு

பயித்தியமாகவும் கேடுகெட்டும் போன அரசு (Government Gone Mad And Bad)  என்ற தலைப்பு எஸ்.எல். குணசேகரா சிறீலங்கா சட்டத்தரணிகள் சங்கத்துக்கு (BASL)  28 – 11 – 2012 அன்று அனுப்பிய கடிதத்தின் ஊக்குவிப்பாகும்.  குணசேகரா பசில் க்கு அனுப்பிய கடிதத்தில் “இப்போது பதவியிலுள்ள பயித்தியக்கார அரசு உச்ச நீதிமன்ற நீதியரசருக்கு எதிராக முன்னெடுத்துள்ள அரசியல் குற்றச்சாட்டை” எதிர்க்குமாறு கேட்டிருந்தார். அண்மையில் வெளிவந்த பெட்றீ (Petrie) அறிக்கை 70,000 தமிழர்கள் அரசினால் கொல்லப்பட்டதாகக் கூறியது. ஆனால் அதையிட்டு ஒட்டுமொத்தச் சிங்களவர்களும் பாராமுகமாக இருந்துவிட்டார்கள்.  கடந்த வாரம் பசில் அமைப்பு புதிய தலைமை நீதியரசரை ஆதரிப்பதில்லை என எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.  ஆனால்  நாட்டிலும் பசில் அமைப்பிலும் அதிகளவு  பிழைகள் இருக்கின்றன.  தலைமை நீதியரசர் விவகாரம் வெறுமனே நோயின் அறிகுறிதான்.  எடுத்துக்காட்டாக டொலர் 100 மில்லியன்  பெறுமதியான ஓட்டப்பந்தயக் கார்களை அரசு எந்த வரியும் கட்டாமல் இறக்குமதி செய்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.  அதைவிட  மற்றவர்கள் கூற்றுப்படி எப்படி அரச சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துபவர் (அவரது தந்தையாரும் அரச சம்பளத்தில் இருப்பவர்தான்)  டொலர் 100 மில்லியனை  கட்ட முடியும்?  சண்டே லீடர் என்ற செய்தியேடு (06-03-2011)  பிரபா கணேசன் சொன்னதாக ஒரு செய்தி வெளியிட்டது. பசில் இராசபக்சே கட்சி மாறினால் உருபா 20 மில்லியன் தனக்கும் இன்னொரு அய்க்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பி.ஏகாம்பரம் அவர்களுக்கும் தருவதாக வாக்களித்தார். அது அபிவிருத்திக்கு என்று சொல்லப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி. 

Continue Reading →