உலகத் தமிழ் இலக்கியம்: கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய பதிவுகள் – 1

தமிழகத்திலிருந்து வெளிவரும் கணையாழி இதழ் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஜீவநதி சஞ்சிகை ஆகியவை கனடாச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகம் வெளியிட்ட ‘பனியும் பனையும்’ சிறுகதைத் தொகுப்பிலும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவை பற்றிப் பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகள், குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பிது; ஒரு பதிவுக்காக. இவை கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு பார்வையினை வெளிப்படுத்துவன. இவை எழுதப்பட்ட காலங்களில் அதிகம் எழுதாத பல புதிய படைப்பாளிகள் பலர் இன்று எழுதுகின்றார்கள்.  இவர்களைப் பற்றிய குறிப்புகள், கட்டுரைகள் எமக்குக் கிடைக்கும்போது அவையும் இங்கு தொகுக்கப்பட்டுப் பதிவு செய்யப்படும். கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். ஒரு பதிவுக்காக அவை மிகவும் அவசியம். பதிவுகள் –

Continue Reading →

உலகத் தமிழ் இலக்கியம்: அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் (சிறப்பிதழ்கள் ஊடான ஒரு பார்வை – பகுதி 2 & 3)

கே.எஸ்.சுதாகர்[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இல்க்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை ‘பதிவுகள்’ எதிர்பார்க்கின்றது. ஏற்கனவே நாம் வேண்டியதைக் கருத்தில்கொண்டு மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையினை எழுத்தாளர் வே.ம.அருச்சுனன் எழுதியிருந்தார். அக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளிவந்திருக்கின்றது.  ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் எழுதிய ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் பற்றி கட்டுரையின் இரண்டாம், மூன்றாம் பகுதிகள்  இவை. ஏற்கனவே  அக்கட்டுரையின் முதற்பகுதி பதிவுகளில் வெளியாகியுள்ளது. அவருக்கு எமது நன்றி. இதுபோல் ஏனைய நாடுகளிலுள்ள எழுத்தாளர்களிடமிருந்தும் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம் ஒரு பதிவுக்காக.- பதிவுகள்-]  அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. ‘அம்மா’, கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி  போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது.

Continue Reading →