’’ஆகாயம் பல்வேறு வண்ணங்கள் காட்டுவதுண்டு..நிறமற்ற ஆகாசமும் உண்டு..நம் கற்பனைக்கேற்ற வண்ணம் காட்டும் ஆகாயமாக அது விரிவதும் உண்டு….எதுவும் நம் பார்வையைப் பொறுத்ததே’’. சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ’ஆகாசத்திண்ட நிறம்’ என்ற மலையாளத் திரைப்படத்தை நேற்று தில்லி ஹேபிடட் திரைப்படவிழாவில் காண வாய்த்தது அற்புதமான ஓர் அனுபவம். படத்தைப் பற்றிய முன் அனுமானங்கள் தகவல்கள் ஆகிய எவையுமே இன்றி,அங்கு சென்றிருந்த எனக்குக் குறைந்த பொருட்செலவில் எளிமையான ஒரு கதைக்கருவை மையமிட்டு அழகானதொரு செய்தியை முன் வைத்திருந்த அந்தப்படம், ஆனந்தம் கலந்த அதிர்ச்சியைஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. படத்தின் ஒரு வரிக்கதை என்று சொல்லப்போனால் திருடன் திருந்தி நல்லவனாகும் வழக்கமான ஜீன்வால்ஜீன் கதைதான்….ஆனாலும் அதற்குத் தரப்பட்டிருக்கும் ட்ரீட்மெண்ட்…, அதைத் திரைக்கதையாக்கிக் காட்சிப்படுத்தியிருக்கும் நேர்த்தி இவை சொல்லுக்கடங்காதவை.
NEWS RELEASE: Ottawa, December 21, 2012 — The Come to Canada Wizard, which helps people determine if they are eligible to live, work or study in Canada, has now been visited by well over 2 million users since its launch in August 2011. “We want the world’s best and brightest to come to Canada and to help grow our economy,” said Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney. “The award-winning Wizard is one way that we are creating a more responsive, user-friendly and efficient immigration process that benefits applicants, immigrants and Canadians alike. The Wizard saves prospective immigrants to Canada time and money by helping them determine if they are able to immigrate to Canada, and the most appropriate immigration program for them.”
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசு, ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம். ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்ப்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று போராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பற்றி வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பற்றி காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு ,செம்மைப்படுத்தப்பட்ட “தாயகம்””,செம்பதாகை”, புதியபூமி” போன்றவற்றின் ஆசிரிய தலையங்கங்களும் ,சில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின. மேலும் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களைக் கொண்டு அவரை அறிய முடிந்தது.