உண்ணா விரதம் என்பது இன்று அரசியல் ஆதாயத்திற்க்காக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக தான் பயன்படுகிறது என்பது கசப்பான ஒரு உண்மை, உலக அளவில் எங்கும் காணாத முன்று மணி நேர உண்ணா விரதம், அதுவும் சகல வசதிகளுடன்,….தினம் தினம் ஒரு உண்ணா விரதங்கள் ஆனால் இவை எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்……! ஏழு நாள்கள் உண்ணாவிரதம், பன்னிரண்டு நாள்கள் உண்ணாவிரதம் என்று ஆரம்பிப்பதும் பின் காலபோக்கில் அவை மறைந்து போவதும் வாடிக்கையாகி விட்டன………. ஒரு பக்கம் அண்ணா ஹசாரேயின் 12 நாள்கள் உண்ணா விரதத்திற்கு உலக அளவில் அதரவு தெரிவிப்பதும், மற்றொரு பக்கம் மணிப்பூர் மாநிலத்தில் இரோம் ஷர்மிளாவின் 12 வருட உண்ணா விரதத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாததும் வியப்பு அளிக்கிறது… யார் இந்த இரோம் ஷர்மிளா? எதற்காக இவர் 12 ஆண்டுகளாக போராடுகிறார்? இவர் அருணாச்சல் பிரதேஷம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ,நாகலாந்து ,திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் [Armed Forces (Special Powers Act 1958)] திரும்ப பெற வேண்டும் என்பது தான் இவரின் ஒரே கோரிக்கை….
கமலா தேவி அரவிந்தன் பேசும் மொழி மலையாளம். மூன்று தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை வழித் தாத்தா பாட்டி கொல்லத்திலிருந்து வந்தவரகள். தாய்வழித் தாத்தா பாட்டி பாலக்காட்டின் ஒட்டப் பாலத்திலிருந்து வந்தவர்கள். கமலா தேவி குட்டிப் பெண்ணாக ஆரம்பப் பள்ளியிலிருந்து கற்றது தமிழ். வாழ்க்கை முழுதும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும். கணவர் மலையாளி. பிரமிப்பாகவும் இருக்கிறது. தொடக்க காலத்தில் மலையாளத்தில் எழுதினாலும் பின்னர் தமிழிலும் எழுதத் தொடங்கி இப்போது சிறுகதைகள், நாவல், ரேடியோ நாடகங்கள் இத்யாதி இத்யாதி என 160 சொச்சம் புத்தகங்கள் (எண்ணிக்கையை, ஒட்டு மொத்தமாகச் சொல்லி மிகக் குறைத்துச் சொல்லி விட்டேனோ, கமலாதேவி?) வெளியாகியுள்ளன. இப்போது நான் இது பற்றி எழுதும் இடைவேளையில் அவர் இன்னும் ஒன்றிரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கக் கூடும். எழுதி முடித்திருக்கும் வேளையில் எண்ணிக்கை இன்னும் ஒன்றிரண்டு கூடியிருக்கக் கூடும் சாத்தியம் உண்டு. பிரமிப்பு தான எனக்கு, ஆனால் எனக்கு அவர் பெயர் கேட்டதும் எழுதியதைப் படித்ததும் வெகு சமீபத்தில், வல்லமை என்னும் தமிழ் இணையத்திலிருந்து தான் தமிழ் முரசு, போன்ற மலேசிய சிங்கப்பூர் பத்திரிகைகளில் அவர் நிறைய எழுதி பரிசுகளும் பெற்றிருக்கிறார். அவர் நம்மூர் கணையாழியிலும், அமெரிக்க தென்றல் பத்திரிகையிலும் எழுதியிருப்பதைத் தெரிந்து கொண்டதெல்லாம் இருக்கட்டும். அதிகம் இல்லை. நூற்றுக் கணக்கில் எழுதியவரைப் பற்றித் தெரிந்து கொண்டது இவ்வளவு தான் என்றால் அது பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம் இல்லை. [‘பதிவுக’ளில் 2009 -2012 காலப்பகுதியில் கமலாதேவி அரவிந்தனின் நுவல், நுகத்தடி, மின்மினி, முகடுகள், உற்றுழி, தாகம், புரை, சூரிய கிரகணத்தெரு, ஒரு நாள் ஒரு பொழுது, நாசிலெமாக் மற்றும் திரிபு எனப் பதினொரு சிறுகதைகள் வெளிவந்திருப்பதை மறந்து விட்டீர்களே திரு.வெ.சா. அவர்களே! – ஆசிரியர், பதிவுகள்]