வன்பாலுறவும் பெண்நிலைவாதமும்

யமுனா ராஜேந்திரன் -2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னிரவில் இந்தியத் தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதேயான  மருத்துவப் படிப்பு மாணவி ஐவர் கும்பலால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டதனையடுத்து   இங்கிலாந்தின் த கார்டியன் அமெரிக்காவின்  நியூயார்க் டைம்ஸ் பிரான்சின்  லெமான்டே டிப்ளமேடிக் உள்ளிட்ட உலக ஊடகங்கள் அனைத்திலும் அச்செய்தி  மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரமானது. தில்லியில் எழுந்த மக்கள் திரள் போராட்டங்கள் அரபுப் புரட்சியின் மக்கள் திரள் எழுச்சியை ஞாபகப்படுத்தின. மிருகத்தனமான வல்லுறவுக்கு ஆளானாதால் உள்ளுறுப்புகள் சிதைந்த நிலையில் இரண்டு வாரங்கள் தனது உயிருக்குப் போராடிய மாணவி சிங்கப்பூர் மருத்துவ மனையில் மரணமுற்றதனையடுத்து ஐக்கியநாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன் தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொண்டார்.  இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திரா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பாரதீய ஜனதாக் கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் போன்றவர்களுக்கு இடையில் இதனை முன்வைத்து அரசியல் உரசல்கள் இடம்பெற்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா வன்பாலுறவில் ஈடுபடுபடுபவர்களுக்கு இரசாயணமுறையில் ஆண்மைநீக்கம் செய்யும் தண்டனையைப் பரிந்துரைத்தார். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலரும், அரசியல்வாதிகளான பிஜேபியினரும் வன்பாலுறவுக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையைப் பரிந்துரைத்தனர். வன்பாலுறவுக்கு ஆளாகி மரணமுற்ற பெண்ணின் தந்தை வல்லுறவில் மிக வன்முறையாகவும் வக்கிரமாகவும் ஈடுபட்ட ’17  வயது மைனருக்குத்தான் முதலில் மரணதண்டனை வழங்க வேண்டும்’ எனக் கோரினார். மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து தண்டனையின் வயது வரம்பு 17 ஆகக் குறைக்கப்பட்டது.

Continue Reading →

Schneier.Com: Power and the Internet

- Bruce Schneier -– January 31, 2013 -All disruptive technologies upset traditional power balances, and the Internet is no exception. The standard story is that it empowers the powerless, but that’s only half the story. The Internet empowers everyone. Powerful institutions might be slow to make use of that new power, but since they are powerful, they can use it more effectively. Governments and corporations have woken up to the fact that not only can they use the Internet, they can control it for their interests. Unless we start deliberately debating the future we want to live in, and the role of information technology in enabling that world, we will end up with an Internet that benefits existing power structures and not society in general. We’ve all lived through the Internet’s disruptive history. Entire industries, like travel agencies and video rental stores, disappeared. Traditional publishing — books, newspapers, encyclopedias, music — lost power, while Amazon and others gained. Advertising-based companies like Google and Facebook gained a lot of power. Microsoft lost power (as hard as that is to believe). The Internet changed political power as well. Some governments lost power as citizens organized online. Political movements became easier, helping to topple governments. The Obama campaign made revolutionary use of the Internet, both in 2008 and 2012.

Continue Reading →

கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்க ஏற்பாட்டில் நடைபெறும் சிறுகதைப் பயிலரங்கம் / நூல் வெளியீடு!

அன்புடையீர் வணக்கம், மலேசியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கடார மண்ணில் மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள் எனும் நூல் மலேசிய இலக்கிய வெளியில் முதன் முதலாக அரங்கேற்றம் காண்கின்றது.…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் -9: எதுவரை.நெட் இணையத்தளத்தில் கே.எஸ்.சுதாகர் எழுதிய ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்’ என்னும் கட்டுரை பற்றிச் சில குறிப்புகள்.

வாசிப்பும் யோசிப்பும்!//இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை. உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.// ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்’ கட்டுரையில் கே.எஸ்.சுதாகர் –

இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை.’ என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இக்கூற்றானது ‘இன்னும் அதிக அளவில் புகலிடப் படைப்புகள் அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும்’ என்று வந்திருக்க வேண்டும். சிறுகதைகளைப் பொறுத்த அளவில் அதிக அளவில் புகலிட அனுபவங்களை மையமாக வைத்து வெளிவந்துள்ளன. நாவல்களைப் பொறுத்த அளவில் அதிக அளவில் வரவில்லையென்று கூறலாம். ஆனால் அது தவறல்ல. அதற்காக வெளிவந்த படைப்புகளின் தரத்தை அதனடிப்படையில் அளவிடுவது தவறென்பது என் கருத்து. ஈழத்தில் நிலவிய அரசியல் சூழல் காரணமாகப் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளின் பிரதான அமசங்களாக இழந்த மண் பற்றிய கழிவிரக்கம், கனவுகள் மற்றும் புகலிட அனுபவங்களெல்லாமிருக்கும். அவ்விதமிருப்பதுதான் புகலிடப் படைப்புகளின் பிரதானமான பண்பு. அதே சமயம் அடுத்த தலைமுறையினரிடமிருந்து அதிக அளவில் புகலிட நாட்டின் அனுபவங்கள் வெளிப்படும். அதுவும் இயற்கை. இரண்டாவது தலைமுறையினரிலும் இரு வகையினர். சிறுவயதில் பெற்றோருடன் புகலிடம் நாடிச் சென்றவர்கள். புகலிட நாடுகளில் பிறந்தவர்கள். இவர்களது அனுபவ்ங்களும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. அவற்றின் அடிப்படையில் அவர்களது அனுபவங்கள் அவர்களது படைப்புகளில் வெளிப்படும். அடுத்தது ‘ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.’ என்ற கூற்றையும் என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவற்றுடன் ஈழத்து அரசியல் நிகழ்வுகளையும் சுற்றி வருகின்றன என்றிருந்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவிருக்கும்.

Continue Reading →

காதலர் தினச்சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..?

– நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.
 ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,
 மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.
 சரியா பிழையா தெரியவில்லை. –

காதலர் தினச்சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..?   குரு அரவிந்தன் எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள்.  இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள்.  பச்சை விளக்கு எரியவே நான் வண்டியை முன்நோக்கி ஓட்டிச் சென்றேன். அடுத்த பச்சை விளக்கைத் தண்டும் போது சட்டென்று மஞ்சள் விளக்கு எரிந்தது. கடந்து மறுபக்கம் போய்விடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முன்னால் சென்ற வண்டிகள் ஏதோகாரணத்தால் மெதுவாக நகரத் தொடங்கவே எனது வண்டி பாதுகாப்புக் கோட்டைக் கடக்கும்போது சிகப்பு விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. பொதுவாக வீதியைக் கடக்கும்போது இப்படியாக நடப்பதுண்டு என்பதால் ஏதோ கற்பனையில் இருந்த நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு சிகப்பு விளக்கில் தெருவைக் கடந்ததற்காகத் தண்டப்பணம் கொடுக்கும்படி தபாலில் அறிவிப்பு வந்தது. 

Continue Reading →

காதலர் தினக்கவிதை: காதல் வெண்பனி!

காதலர் தினக்கவிதை: காதல் வெண்பனி!-  வேதா. இலங்காதிலகம், ஓகுஸ்,  டென்மார்க். -

பனி எழுதும் கவிதை
நுனிப் புல்லில் குவியும்.
தனி அழகாய்ப் பொழியும்.
நனி அணியாய்ப் படியும்.
ஊனினை உருக்கும் உயிராம்
மானிடக் காதலெனும் வெண்பனியும்
தனிச் சுவையாய்ப் படியும்.
கனிச் சுவையாய் இனிக்கும்.

Continue Reading →

தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்

தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது. நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் அடக்கும் தொலைபேசிகளும் இப்பொழுது வந்துவிட்டன. உள் அறையில் உலகத்தைச் சுற்றி வரலாம். ஆனால் உள்ளுறையும் உள்ளத்தைத் தொடுவதற்கு யாருமே இல்லாமல் போய்விட்டது. இதுதான் தனிமை. ஆம்,  தனிமை என்பது கொடுமையானது. அது ஓரிருவருக்கானது மாத்திரமல்ல, ஒரு உலகளாவிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. தனிமையென்பது எப்பொழுதுமே ஒரே மாதிரியானது அல்ல. ஆளுக்கு ஆள் மாறுபடும். கணவன் இறந்துவிட குழந்தைகளும் வெளிநாடு சென்றுவிட நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் தனிமை ஒருவிதமானது. அதே நேரம் வகுப்பறை முழுவதும் சகமாணவர்கள் இருந்தாலும் அவர்களுடன் நட்புப் பெற முடியாத நிலையிலுள்ள பாடசாiலை செல்லும் ஒரு பிள்ளையின் தனிமை முற்றிலும் வேறானது.

Continue Reading →

எதுவரை.நெட்: புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்

கே.எஸ்.சுதாகர்[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.] உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.

Continue Reading →

(3) – சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -சொல்லாமல் கொள்ளாமல் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் தான் போனேன்.  இருந்தாலும், போனபோது செல்லப்பா வீட்டில் இருந்தார் சந்தோஷமாக இருந்தது. அப்போதெல்லாம் அந்த மாதிரி முன்னாலேயே சொல்லி நேரம் குறித்து வாங்கிக்கொண்டு போவது எனபது தெரியாத காலம். அத்தோடு அவர் இருந்தது மட்டுமல்லாமல் அங்கேயே நான் போன தருணத்தில் இலங்கையிலிருந்து சிவராமூவும் அங்கு இருக்க நேர்ந்தது, என்ன சொல்ல.. எல்லாம் நேர்ந்து கொள்கிறதே. தருமு சிவராமுவின் கவிதைகளும் சொல்லும் நடையும் போன்ற தமிழ்மொழி, உரை நடை பற்றிய எழுத்துவில் வந்த கட்டுரைகளும் ஒரு புதிய குரலை, ஆளுமையின் தோற்றத்தைச் சொல்லின.  என் பாராட்டைச் சொன்னேன் சிவராமுவிடம். ”எதிர்பாராத ஒரு ஆச்சரியம் தரும் சந்திப்பு (a very pleasant surprise!) இல்லையா> என்றேன். சிவராமுவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. பேசிக் கொண்டி ருந்தோம். என்ன என்று இப்போது நினவிலில்லை. அப்போது எழுத்து வர ஆரம்பித்து இரண்டு வருஷங்கள் முடிந்து இருக்கும். செல்லப்பாவின் வாடிவாசல் ஒரு சிறு புத்தகமாக, எழுத்துச் சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாகவும், எழுத்து பத்திரிகையில் ஜீவனாம்சம் என்று அவரது புதிய நாவல் தொடராகவும் வெளிவந்து இருந்தது. கணவன் இறந்ததும் இனி தன் வாழ்க்கை ஆதரவற்ற கணவனின் பெற்றோருடன் தான் என்று தீர்மானித்து தன் அன்ணா ஜீவனாம்சத்துக்காகத் தொடர்ந்த வழக்கை உதறு, கணவன் மறைவுக்குப் பிறகும், அண்ணா சொல்லையும் மீறி, கணவனின் பெற்றோர்களுக்கு உதவியாக அவர்க்ளுடன் இருக்க முடிவு செய்கிறாள். மிகவும் வித்தியாசமான வாழ்நெறி.  வாடிவாசல் மதுரை மாவட்டத்தில் காணும் ஜல்லிக்கட்டு என்ற ஒரு வீர விளையாட்டை ஆயுதமின்றி காளையை அடக்குவது ஒரு அறம், மரபு, விளையாட்டு. தேவர் வகுப்பினரின் விளையாட்டு. இரண்டும் ஒரு ஆவணம் என்றே கூடச் சொல்லப்படத் தகுந்த பதிவு. படைப்பு. இரண்டும் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை அறங்களைச் சொல்லும் வித்தியாசமான நடையில். இவை இரண்டும் செல்லப்பாவை நாவலாசிரியராகவும் ஒரு புதிய அறிமுகத்தைத் தந்திருந்தன.

Continue Reading →

‘டொராண்டோ’வில் நூல் வெளியீடு: ராஜிவ் படுகொலை- தூக்குக் கயிற்றில் நிஜம்!

'டொராண்டோ'வில் நூல் வெளியீடு: ராஜிவ்  படுகொலை- தூக்குக் கயிற்றில் நிஜம்!

ராஜீவ்  படுகொலை- தூக்குக் கயிற்றில் நிஜம் என்னும் தலைப்பில் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் எதிர்வரும் பெப்ருவரி 16, 2013 அன்று மாலை 2.30 மணிக்கு ‘ஸ்காப்ரபரோ சிவிக் சென்டர்’இல் நடைபெறவுள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் கழக ஆதரவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:

Continue Reading →