முகநூற் பதிவுகள்: செம்மீனில் கடற்கரையின் அந்தகாரத்தில் வசந்தத்தின் வடிவமாய் உருவெடுத்து உலாவிய அந்தக் குரலை மறக்க முடியுமா? புகழ் பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே காலமானார்

முகநூற் பதிவுகள்: செம்மீனில் கடற்கரையின் அந்தகாரத்தில் வசந்தத்தின் வடிவமாய் உருவெடுத்து உலாவிய அந்தக் குரலை மறக்க முடியுமா? புகழ் பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே காலமானார்பெங்களூர், அக். 24, 2013 – புகழ்பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் வியாழனன்று காலமானார். அவருக்கு 94வயது நீண்டகாலம் நோய்வாய்பட் டிருந்த அவர் 5 மாதங்களுக்கு முன்னர் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அதிகாலை 3.50 மணிக்கு மராடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரிந்த போது மகள் சுமிதா தேப் மற்றும் அவரது மருமகன் ஞானராஜன் தேப் ஆகியோர் அருகில் இருந்தனர். அவரது இறுதிச் சடங்கு மாலையில் நடைபெற்றது. மன்னா டேவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங் களூரில் உள்ள ரவீந்திரா கலாஷேக்த்ராவில் வைக்கப்பட்டுள்ளது. மன்னா டே கொல்கத்தாவில் 1919ம் ஆண்டு பிறந்தார். அவர் நாட்டின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்.அவர் தனது இறுதி காலத்தில் பெங்களூரில் இருந்தார்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம்: நூறு திரைப்படங்கள் திரையிடல் – இரண்டாவது பட்டியல்..

தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம்: நூறு திரைப்படங்கள் திரையிடல் - இரண்டாவது பட்டியல்..நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 13 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சனிக்கிழமை எப்போதும் மாலை 5 மணிக்கு திரையிடல் நடைபெறும். மற்ற நாட்களில் மாலை 7 மணியளவில் திரையிடல் நடைபெறும் என்பதை நண்பர்கள் நினைவில் கொள்ள வேண்டும். படங்களின் பட்டியலை மட்டும் இப்போது கொடுக்கிறேன். கன்னட படங்கள் பற்றிய குறிப்புகளை பிறிதொரு சமயத்தில் கொடுக்கிறேன். ஆனால் இனி திரையிடப்படும் படங்களில் பெரும்பாலானவை மிக முக்கியமான படங்கள். நண்பர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்.

இடம்: Fifth Pillar, 41, united india colony, 2nd cross street, circular road, kodambakkam. Near kodambakkam park, and fathima school.   தினசரி நேரம்: மாலை 6.30 இல் இருந்து 7 மணிக்குள்ளாக திரையிடப்படும்.

Continue Reading →

மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்

டாக்டர் ஜி.ஜெயராமன் டாக்டர் ஜி.ஜெயராமன் (13.05.1934 – 25-09.2012)
நிறுவனர்-தலைவர், வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND) [ஓய்வுபெற்ற பேராசிரியர், ஆங்கிலத்துறை, கிறித்துவக்கல்லூரி, தாம்பரம், சென்னை.

அதிராத குரல், நிதானம் தவறாத அணுகுமுறை, எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் பாங்கு, பார்வையற்றவர்களுடைய உரிமைகளுக்காகவும், நலவாழ்வுக்காகவும் ஓயாமல் உழைக்கும் ஆர்வம், மன உறுதி, பார்வையுள்ளவர்கள் பார்வையற்றவர்களுக்கு எதிரி என்று பாவிக்காத மனத்தெளிவும், புரிதலும் கொண்ட பண்பு, அறிவைப் பெருக்கிக்கொள்வதில் சலிக்காத தேடலும் ஆர்வமும், எல்லோரிடத்தும் அன்பு பாராட்டும் மனம் – இன்னும் எத்தனையெத்தனை மனித மாண்புகள் உண்டோ அத்தனைக்கும் சொந்தக்காரராக சொல்லத்தக்க எங்கள் அன்புக்குரிய ஜெயராமன் சார் இன்று இல்லை. வயிற்றில் சிறு கட்டி வந்திருப்பதாகத் தெரியவந்து மருத்துவமனையில் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டவர் வீடுவந்த பின் திரவ உணவையே உட்கொண்டுவந்தார். இந்த மாதம் மறுபடியும் வயிற்றில் உபாதை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வார காலம் இருந்தவர் கடந்த 25ஆம் தேதி இரவு அமரராகிவிட்டார்.

Continue Reading →

நினைவு நல்லது வேண்டும் சிறுகதை தொகுதிக்கான இரசனைக் குறிப்பு

நினைவு நல்லது வேண்டும் சிறுகதை தொகுதிக்கான இரசனைக் குறிப்புஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது ப. விஷ்ணுவர்த்தினி எழுதிய நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி. 93 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 12 சிறுகதைகள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன. அருள் திரு இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு, வி. ஜீவகுமாரனின் முன்னுரையும் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன எனலாம். இது நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே 2010 இல் மனதில் உறுதி வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி போரின் கொடுமைகள், மக்கள் அதனால் பட்ட அவதிகள், யுத்தம் அழித்துச் சென்ற செல்வங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டிருப்பதானது, போர் மக்களின் மனதில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை நன்கு உணரக்கூடியதாக இருக்கின்றது. எத்தனை ஆயிரம் உயிர்கள் இந்த போரின் போது இறந்தன? எத்தனை நபர்கள் காணாமல் போயுள்ளனர்? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடையே இல்லாத சூழலில் இந்தத் தொகுதியானது சிலருக்கு, சிறந்த ஆறுதலாகக்கூட இருக்கலாம் என்ற அளவுக்கு அதில் சித்தரிக்கப்பட்டுள்ள விடயங்கள் மனதைக் கவர்கின்றன.

Continue Reading →

பேசாமொழி 11வது இதழ் வெளிவந்துவிட்டது…

நண்பர்களே பேசாமொழி (http://pesaamoli.com/index_content_11.html) 11வது இதழ் இப்போது இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இந்த இதழ், இலக்கியமும், சினிமாவும் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நல்ல சினிமா பற்றிய எழுத்தாளர்களின் மௌனம்…

Continue Reading →

அசோகனின் வைத்தியசாலை-20

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசன்ஒன்று விட்ட ஒரு வெள்ளிக்கிழமைகளில் காலோஸ், சுந்தரம்பிள்ளை இருவரும் அடுத்தடுத்த தியேட்டர்களில் ஆபிரேசன் செய்வார்கள்.  அன்று வெள்ளிக்கிழமை காலோஸ் ஒரு ஆபரேசன் தியேட்டரிலும் மற்றைய தியேட்டரில் சுந்தரம்பிள்ளை சாமுடனும் ஆபரேசன்களை செய்து கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்யும் நொறல் விடுப்பு எடுத்ததால் மருத்துவ ஆலோசனை அறையில் ரிமதி பாத்ததோலியஸ்ஸோடு வேலை செய்து வந்த ஜெனற், காலோஸ்சுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். காலோஸ் அவளுடன் வழக்கம் போல் ஆபாச ஜோக்குகளை சொல்லியபடி ஆபரேசனை செய்து கொண்டிருந்தார். சாம் அடிக்கடி காலோஸ்சின்  தியேட்டருக்கு சென்று அந்த ஜோக்குகளைக் காவிக் கொண்டு சுந்தரம்பிள்ளைக்கு சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் சுந்தரம்பிள்ளை அவற்றை இரசிக்கக் கூடிய மனநிலையில் இல்லை. இன்னும் இரு கிழமைதான் இந்த வைத்தியசாலையில் வேலை செய்ய முடியும். இந்த வைத்தியசாலை, மற்றும் சக வேலை செய்யபவர்கள் என்று மனத்தில் எல்லாம் பிடித்திருந்தது. பல இடங்களில் வேலை பிடித்திருந்தால், உடன்  வேலை செய்பவர்களைப் பிடிக்காது. இரண்டும் பிடித்தாலும் மேலதிகாரிகளைப் பிடிக்காது. காலோஸ் போன்ற மேலதிகாரி நண்பனாக பழகுவதால் வேலையின் அழுத்தம் தெரியாமல் இருந்தது. வேலையும் கைகளுக்கு படிந்து வருகின்ற  நேரத்தில் இப்படி நிகழ்வு ஏன்  நடந்தது? இந்தோனிசியா அருகே சில கிலோ மீட்டர் கடல் ஆழத்தில் ஏற்பட்ட சுனாமி இலங்கையின் கிழக்குக்கரையில் இருந்த கட்டிடங்களை அடித்து நொருக்குவது போல் காலோஸ் மீது தொடங்கிய பிரச்சனை தன்னில் முடிந்திருப்பது கவலையுடன் விசித்திரமாக இருந்தது. சங்கித் தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்துள்ளது. இதன் விளைவாக வேலை இழக்க நேர்ந்த விதத்தை மனத்தில் அசைபோடும் போது விடைகள் அற்ற விடுகதையாக இருந்தது.

Continue Reading →

‘மரணம், இழப்பு, மலர்தல்’ நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்வு

மரணம் இழப்பு மலர்தல் நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்வுகாலம்: அக்டோபர் மாதம் 20ம் திகதி இடம்: இலன்டனில் தமிழ் முன்னேற்றக் கழக மண்டபம் 46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள (tube eastham அருகில்)

Continue Reading →

செல்வி சஸ்கியா யோகராஜாவின் அரங்கேற்றம் சென்னையில்

செல்வி சஸ்கியா யோகராஜாஇங்கிலாந்து சலங்கை நர்த்தனாலய நுண்கலைக்கூடத்தின இயபக்குனர் நாட்டிய விஷாரத் ஜெயந்தி யோகராஜாவின் மகளும்,  மாணவியுமான  செல்வி சஸ்கியா யோகராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஆவணிமாதம் 24ம் திகதி இந்தியாவில் சென்னை மியூசிக் அக்கடமியில் கலைமாமணி நரசிமமாச்சாரிää கலாஷேத்திரா அதிபர் ஜனார்த்தனன் முன்னிலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. செல்வி சஸ்கியாவிற்கு ‘நாட்டிய ரூபினி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டமை சிறப்பாம்சமாகும். அரங்கேற்ற நிகழ்வின்போது ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் ‘ராஜேஸ்வரி நர்த்தனம்’ என்னும் பாடல்இறுவெட்டினை வேதம் புதிது மியூசிக் இயக்குநர் தேய்வேந்திரன்,  ‘கலைமாமணி ஷோபனா ரமேஷ்,  ‘கலைமாமணி’ லலா ஆறுமுகஐயா,  ‘கலாரத்தினா’  உமா சங்கர்ää இந்திய ரயில்த் திணைக்கள கவன்சிலர் ஆர். பத்மநாபன்,  ஆண்டான் கோவில் சுந்தரராஜன் ஆகியோரினால் வெளியிடப்பட்டு ஜெயந்தி யோசராஜாவிற்கு ‘ராஜேஸ்வர நர்த்தகி’ என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. ராஜேஸ்வர நர்த்தனம் என்னும் இறுவெட்டு நாட்டிய மார்க்கம் அடங்கிய புதிய பாடல்களைக்கொண்டது. இதன் பாடல்வரி,  இயக்கம் அனைத்தும் ஜெயந்தி யோகராஜாவினால் ஆக்கப்பட்டது. இவர் கடந்த வருடம்  காலம் சென்ற தன் தயார் ராஜேஸ்வரி அன்ரனிரட்னம் அவர்களின்  நினைவாக வெளியிட்டிருந்தார். 

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 29 : வெ.சா.வின் ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையும், வியாளம், வியாளி பற்றிய கருத்துகள் சிலவும்.

வாசிப்பும், யோசிப்பும் - 29 : வெ.சா.வின்  'தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்' கட்டுரையும், வியாளம், வியாளி பற்றிய கருத்துகள் சிலவும்.வெ.சா.அவர்கள் தனது  ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையில் “வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்.” என்று வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தார். அது பற்றிச் சில வார்த்தைகளைப் பதிவு செய்வதே இக்குறிப்புகளின் நோக்கம்.  தமிழ் இலக்கியத்தில் வியாளம் என்ற சொல் பாம்பு, புலி, யாளி, கெட்ட குணமுள்ள யானை போன்ற பல அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.  தோலாமொழித்தேவர் இயற்றிய ‘சூளாமணி’யில் 912 பாடலாகப் பின்வரும் பாடல் வருகிறது.

Continue Reading →