கருணைக்கொலை – சில சிந்தனைகள்: ‘அஞ்சனம்’ குறும் திரைப்படம்

கருணைக்கொலை - சில சிந்தனைகள்: 'அஞ்சனம்' குறும் திரைப்படம்எம்.கே.முருகானந்தன்ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை எட்ட முயல்கிறது. மிக மெதுவாகவே அக்கரங்களால்; அசைய முடிகின்றது. ஓட்டுனர் இல்லாத மாட்டு வண்டி போல, போகும் திசை தெரியாது அந்த ஒற்றைக் கை தடுமாறுகிறது. கைகளுக்கு இருக்க வேண்டிய திடமும் உறுதியும் இன்றி இயங்கும் அது கோப்பையை நெருங்கிவிட்டது. ஆனால் பற்ற முடியவில்லை. கோப்பை தட்டுப்பட்டு கீழே விழுந்து நீர் சிந்திவிட்டது. மறுகையானது எதுவும் முடியாதவாறு ஏற்கனவே முற்றாகச் செயலிழந்துவிட்டது. படுக்கை நோயாளி. தசைகளின் இயக்கம் குறைந்து வரும் அழவழச நெரசழநெ னளைநளந. நோயிலிந்து முற்றாக அவளை மீட்க சிகிச்;சைகள் எதுவும் உதவாது. நோய் கால ஓட்டத்தில் தீவிரமடைந்து வருவதைத் தடுக்க முடியாது. பொதுவாக உணர்விழப்பு இல்லை. வலிகளை உணர முடிவது பெரும் துன்பம். உதாரணமாக கையில் வலி என்றால் அக் கையை அசைத்து வேறு இடத்தில் வைக்கவோ மற்ற கையால் நீவி விடவோ முடியாது. ஆற்றாமை ஆட்கொள்ளும்.

Continue Reading →

மலையகப்படைப்பாளி தெளிவத்தை ஜோசப் விஷ்ணுபுரம் விருது பெறுகிறார்!

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்இலங்கையின்    மூத்த படைப்பாளியும்    மலையக எழுத்தாளர்  மன்றத்தின்  தலைவருமான தெளிவத்தை  ஜோசப் இந்த ஆண்டிற்கான  தமிழகத்தின்  விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார்.  இத்தகவலை  விஷ்ணுபுரம்  விருதுவழங்கும்  தமிழகத்தின்  பிரபல படைப்பாளி  ஜெயமோகன்  வெளியிட்டுள்ளார். எதிர்வரும்  டிசம்பர்  மாதம்  22 ஆம் திகதி தமிழ்நாடு கோவையில்  நடைபெறவுள்ள  விருது வழங்கும்  விழா  இந்திராபார்த்தசாரதி  தலைமையில்  நடைபெறவுள்ளது. மலையாளக்ககவிஞர்  பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய  நூலை வெளியிடுவார். எழுத்தளார் சுரேஷ்குமார்  இந்திரஜித்,  திரைப்பட இயக்குநர்  வசந்தபாலன் ஆகியோர்  விருது வழங்கும்  விழாவில் உரையாற்றுவார்கள். இந்நிகழ்வில்  தெளிவத்தைஜோசப்  கலந்துகொள்ளுவார். இலங்கையில் ஏற்கனவே  இரண்டு  தடவைகள்  தேசிய  சாகித்திய விருதுகளைப்பெற்றுள்ள  தெளிவத்தை ஜோசப்  கொடகே பதிப்பகத்தின்  வாழ்நாள் சாதனையாளர்  விருது  மற்றும்  யாழ்.   இலக்கிய  வட்டத்தின்  சம்பந்தன் விருது ஆகியனவற்றையும்  பெற்றுள்ளார்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: ஈழத்திலிருந்து ஒலித்த இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா

எழுத்தாளர் டொமினிக் ஜீவாயாழ்ப்பாணம்  அரியாலையில்  நாவலர்  வீதியில்  அமைந்த  ஸ்ரான்லி  கல்லூரியில் (தற்பொழுது  கனகரத்தினம்  மத்திய  கல்லூரி) 1962  ஆம்  ஆண்டளவில்  எனக்கும் எனது  மச்சான்  முருகானந்தனுக்கும்  ஆறாம் வகுப்பு புலமைப்பரிசில்  அனுமதி  கிடைத்தது.   அப்பொழுது எனக்கு பதினொரு வயதிருக்கும். நான் முதல் தடவையாக  பனைமரங்களைப்பார்த்தது    அக்காலத்தில்தான்.  அதற்கு  முன்னர்  அந்தக்கற்பகதருவை பாடசாலை  பாடப்புத்தகங்களில்தான்   பார்த்திருக்கின்றேன். ஈழவிடுதலைப்போராட்டம்     ஆரம்பமானதன்பின்பு பல இலக்கிய மற்றும் ஆய்வு  நூல்களில்  பனைமரங்கள்    அட்டைப்படமாகின.  ரஜனி  திராணகம  சம்பந்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மனித உரிமை  ஆசிரியர்  சங்கத்தின் வெளியீடான முறிந்த  பனை,  மூத்த   பத்திரிகையாளர்  கார்மேகத்தின் ஈழத்தமிழர்  எழுச்சி, செ.யோகநாதன் தொகுத்த  ஈழச்சிறுகதைகள் வெள்ளிப்பாதசரம்,     ஜெயமோகனின்    ஈழத்து  இலக்கியம், பேராசிரியர் கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்   சமூகம் – பண்பாடு – கருத்துநிலை  உட்பட   பல  நூல்கள்  பனைமரத்தை  ஒரு  குறியீடாகவே   அட்டைகளில்  சித்திரித்துள்ளன.

Continue Reading →