தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை- வெங்கட் சாமிநாதன் -கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து  தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சி, இந்திய படித்த இளைஞர்களிடையே ஒரு பெரிய கனவுலகத்தைச் சிருஷ்டித்தது. அவர்கள் என்றும் நினைத்தும் பார்த்திராத பொருளாதார வளத்தையும் அவர்கள் காண்பது கனவல்ல என்ற நினைப்பையும் தந்தது. தகவல் தொழில் நுட்பம் நுழையாத துறை இல்லை என்று ஆகியது. அது இல்லாது வளர்ச்சி அடையும் துறை இல்லை என்றாகியது. எல்லா பொறியியல் துறைகள் மாத்திரமல்ல, கல்வியிலிருந்து தொடங்கி பலசரக்கு வியாபாரம் வரை அதன் வியாபகம். ஒரு காலத்தில் நமக்குத் தெரிந்த சிவில், எலெக்ட்ரிகல், மெக்கானிகல் கல்லூரிகளுக்கு இருந்த மவுசும், தலைநிமிர்வும் குறைந்து தகவல் தொழில் நுட்பத்துக்குத் தாவியது. கல்லூரி வாசலில் வேலை வாய்ப்புகள் தேடி வந்தன. படிப்பு முடிந்ததும் நாலு அல்லது ஐந்து இலக்க சம்பள வாய்ப்புக்களைத் தேடி அலைந்த காலம் போய் கல்லூரி வாசலில் ஆறு இலக்க வாய்ப்புக்கள் தேடி வந்தன. செங்கல் புழுதி முகத்தில் படிய வெயிலில் நிற்க வேண்டாம். கை கரியாகாது, உடையில் எண்ணைக் கரை படியாது.  பிரம்மாண்ட குளிர் பதன கட்டிடங்களுக்குள் தூசி படியாது வியர்க்காது உடையின் மடிப்பு கலையாது வேலை. அலுவலகத்தில் இருப்பு ஒரு சின்ன தடுப்புக்குள் தான், இருந்தாலும் என்ன! அமெரிக்காவும், ஜெர்மனியும் ஃபின்லாந்தும் தில்லியோ சென்னையோ என ஆயிற்று. சென்னை பெண்ணுக்கு அமெரிக்காவிலிருந்து வரும் மாப்பிள்ளை, புதிதாகத் தோன்றும் முப்பது மாடி, கட்டிடத்தில் ஒரு ஃப்ளாட். பழசாகிவிட்டது என்று எண்ணி அடிக்கடி மாற்றும் புது மாடல் கார்கள். திடீரென தகவல் தொழில் நுட்பம் படித்தவர்கள் எங்கோ ஒரு உச்சத்தில் தான் உட்கார்ந்து கொண்டார்கள்.

Continue Reading →