விக்கிமூலம்: வே. பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2008

வேலுப்பிள்ளை பிரபாகரன்[விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் நாள் உரையிது. நவம்பர் 2008 மாவீரர் நாளையொட்டி ஆற்றிய உரையிது. அந்த வகையில் இவ்வுரைக்கு முக்கியத்துவமுண்டு. ஒரு பதிவுக்காக அவ்வுரை மீள்பிரசுரமாகின்றது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முன்னர் பிரிந்திருந்த பல தமிழர் விடுதலை அமைப்புகள் இன்று அரசியல்ரீதியாக ஒன்றுபட்டிருக்கின்றன. அதுபோல் இதுவரை காலமும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடிய, மடிந்த போராளிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு வகையான தாக்குதல்களாலும் மடிந்த மக்கள் ,உள்/புற முரண்பாடுகளுட்பட , அனைவருமே நினைவு கூரப்பட வேண்டும். இதுவரைகாலத் தமிழர்களின் போராட்ட வரலாறு முறையாக, எந்தவிதப் பாரபட்சமுமற்று ஆய்வு செய்யப்பட வேண்டும். அதிலிருந்து பாடங்களைப் படிக்க வேண்டும். மாற்றுக் கருத்துகள் காரணமாகப் படுகொலைசெய்யப்பட்ட அனைவரும் இந்த நினைவு கூரலில் உள்ளடக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒற்றுமைக்கு இது மிகவும் உதவியாகவிருக்கும். தொடர்ந்தும் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் செய்யும் போக்கு கைவிடப்பட வேண்டும். உண்மைகளின் அடிப்படையில் (உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல) அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும். – பதிவுகள் – ]

Continue Reading →

கனடா உதயன் பத்திரிகையின் பல்சுவை விழா – 2013

கனடா உதயன் பத்திரிகையின் பல்சுவை விழா - 2013 கனடாவில் இருந்து வாராவாரம் வெள்ளிக் கிழமை தோறும் வெளிவரும் உதயன் பத்திரிகையின் வருடாந்தம் நடக்கும் பல்சுவைவிழா சென்ற சனிக்கிழமை மாலை (26-10-2013) ரொரன்ரோவில் உள்ள ஆர்மேனியன் இளைஞர் மன்ற மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றப்பட்டு கனடா கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெற்றன. கனடிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த திரு. அரங்க நெடுமாறனின் பாட்டு மன்ற நிகழ்ச்சி முக்கிய கலை நிகழ்ச்சியாக இடம் பெற்றது. இதைவிட கர்நாடக இசை, நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளும் உள்ளுர் கலைஞர்களால் மேடை ஏற்றப்பட்டன.

Continue Reading →