தோழி தலைவியைத் தலைவன் வரைந்துகொள்ளாது காலந்தாழ்த்தும் சூழலில் தலைவனிடம் தலைவியை வரைந்து கொள்ளுமாறு பல்வேறு காரணங்களைக் கூறியும் தலைவிக்கு ஏற்படும் இடையூறுகளைக் (வெறியாட்டுää இற்செறிப்பு, அலர், தலைவனையே…
அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார். பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன், தி.தா. நாராயணன், நளினி சாஸ்த்ரிகள், ஆர். எம். நௌஸாத், கே.பாலமுருகன், வ.ந. கிரிதரன் முயன்றிருக்கிறார்கள். கி.பி.2700 இல் முப்பரிமாண உருவத்திலுள்ள ஒருவனை, நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்தில் கொண்டு சென்று 180 பாகை உருவ மாற்றத்தைக் கொண்டு வந்து அவனை மரண தண்டனையிலிருந்து மேல் முறையீடு செய்யச் சொல்லிச் செல்கிறது ஒரு அண்டவெளி உயிரினம். இது “ நான் அவனில்லை “ என்ற கிரிதரன் ( கனடா) அவர்களின் கதை.. கொஞ்சம் விலாவரியாக இருந்தாலும் வித்யாசமாக இருந்தது.
எனக்கொரு பழக்கமிருக்கிறது. எங்கே நூல்கள் விற்பனைக்குக் கழிவு விலையிலிருந்தாலும் விடுவதில்லை. ஒரே நூலின் பல்வேறு பதிப்பகங்களின் வெளியீடுகளென்றாலும் வாங்கிவிடுவேன். குறிப்பாக இங்கு ‘டொராண்டோ’வில் கோடைக் காலமென்றால் பலர் வீடுகளில் ‘கராஜ் சேல்ஸ்’ நடக்கும். அவ்விதமான விற்பனை நிகழ்வுகளில் நூல்களிருந்தால் சென்று பார்க்காமல் இருப்பதில்லை. அவ்விதமான கழிவு விற்பனை நிகழ்வுகளில் இருபத்தைந்து சதம், ஐம்பது சதத்துகெல்லாம் நூல்களை வாங்க முடியும். மிகவும் நல்ல தரமான நூல்களையெல்லாம் வாங்கும் சந்தர்ப்பங்களுண்டு. பல ஆங்கில செவ்விலக்கியப் படைப்புகள் பலவற்றை அவ்விதமான நிகழ்வுகளில் வாங்கியிருக்கின்றேன். அதுபோல் இங்குள்ள நூலகக் கிளைகளில் அவ்வப்போது நடைபெறும் நூல் விற்பனை நிகழ்வுகளில் நூல்கள் வாங்கத் தவறுவதில்லை. அவ்விதமான சில விற்பனை நிகழ்வுகளில் மூன்று டாலர்களுக்கு நூலகம் விற்கும் துணிப்பையினை வாங்கினால், அந்தப் பை கொள்ளூம் அளவுக்கு நூல்களை அள்ள விடுவார்கள். புனைவு, அபுனைவு என்று பல்துறைகளிலும் மிகவும் தரமான நூல்களை நான் நூல் நிலைய விற்பனை நிகழ்வுகளில் வாங்கியிருக்கின்றேன். காப்ரியல் கார்சியா மார்கெவ்ஸ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஜேர்சி கொசின்ஸ்கி, ஜான் மார்டெல், சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, ஸ்டீன்பெக், கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் பிராய்ட், காலிட் ஹுசைன்.. என்று பலரது புகழ்பெற்ற படைப்புகளை வாங்கியிருக்கின்றேன். நூலகங்கள் விற்பனையில் மிகவும் நல்ல நிலையிலுள்ள நூல்கள் கிடைக்கும். நல்ல நூல்களென்றாலும், அந்தக் கிளையில் அந்நூல் அதிகம் வாசகர்களால் பாவிக்கப்படாமலிருந்தால் குறிப்பிட்ட காலத்தின்பின் விற்று விடுகின்றார்கள் போலும். ஏனெனில் நான் வாங்கிய பல நூல்கள் புதியவையாகவே காணப்பட்டன. ஒருமுறை ஸ்நேகா பதிப்பகத்தில் அக்காலகட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த நண்பர் பாலாஜி ஜேர்சி கொசின்ஸ்கியின் ‘நிறமூட்டிய பறவைகள்’ நாவலினைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவிருப்பதாகக் கூறியபோது என்னிடமிருந்த அந் நூலின் இரு பிரதிகளிலொன்றினை அனுப்பி வைத்தேன். அவ்விரு நூல்களையும் நூலகமொன்றின் புத்தக விற்பனையில்தான் வாங்கியிருந்தேன். அத்தமிழாக்கம் அண்மையில் வெளிவந்திருப்பதாக அறிந்தபோது மகிழ்ச்சியாகவிருந்தது.
தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். அமைதியாக. 1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த, ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர் தன் நூறாவது ஆண்டு பிறந்த தினத்தில் மறைந்த செய்தி கேட்டு 40 ஆண்டுகளூக்கு முன், தற்செயலாக சற்று நேரம், ஒரு இரவுச் சாப்பாட்டு நேரம் கொடுத்த ஒரு தற்செயலான அறிமுகம் தொடர்ந்த சந்திப்பு என வளர்க்கப்படாவிட்டாலும் அடிக்கடி நினைவு படுத்தி வியந்து, மனதுக்குள் சந்தோஷப்படும் கணங்கள் வந்து சென்றனதான். அது ஒரு எதிர்பாராத சந்திப்பு, அறிமுகம். 1973 என்றுதான் நினைவு. அது அப்போது உருவாகி வந்த ஒரு இலக்கியச் சிறு பத்திரிகைச் சூழலில், உருவாகி வந்த சிறுபான்மை இலக்கியச் சூழலில், நான் அனேகமாக எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகியிருந்த நாட்கள் அவை. என் இயல்பில் எனக்கு மனதில் தோன்றியவற்றை தயக்கமில்லாது எழுதி சம்பாதித்துக்கொண்ட பகை நிறையவே. மனதில் பட்டதை எழுதாது வேறு என்ன எழுதுவதாம் என்ற சாதாரண பொது அறிவின்பால், தர்மத்தின்பால் பட்ட விஷயங்கள் அவை. தாக்கப்பட்டது ஒரு சிலரே என்றாலும் அவர்களுக்கு வேண்டியவர்களும் எனக்கு பகையானார்கள். ஏதோ ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடு போலத் தான் இருந்தது. ராஜதர்பாரில் ஒரு குழுவின் ஒருத்தரை ஏதும் சொல்லிவிட்டால் தர்பார் முழுதுமே மேலே விழுந்து புடுங்கும் இல்லையா? கடைசியில் அது ராஜத்வேஷமாக வேறு பிரசாரப்படுத்தப்பட்டது. நிறையவே எழுத்திலும் காதோடு காதாகப் பேச்சுப் பரவலிலும் எனக்கு எதிராக நிறைய பிரசாரம் நடந்தாலும், என் கருத்துக்கு மாற்றுக் கருத்து வைக்கப்படாமலேயே, தனி மனித உறவுகள் துண்டிக்கப்பட்டன. இன்னமும் என் கருத்துக்கள் அப்படியே தொடர்ந்தாலும், எனக்கு எதிரான பகைகள் கூர் அற்றுப் போனாலும் அவை தொடர்கின்றன தான், இன்னும் பரவலாகின்றனதான்.
முன்னுரை
உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால சமூகத்தினை இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிருவாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது. இதுவே தாய் வழிச்சமூகமாகும். நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தாய்வழிச் சமூகம் நிகழ்ந்தது. இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது. நிலவுடைமைச் சமூகத்திலிருந்து பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலையினையும், சிலப்பதிகாரத்தில் பெண் விற்கப்படுதலையும் பற்றி ஆராய்ந்தறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முன்னுரை
உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால சமூகத்தினை இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிருவாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது. இதுவே தாய் வழிச்சமூகமாகும். நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தாய்வழிச் சமூகம் நிகழ்ந்தது. இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது. நிலவுடைமைச் சமூகத்திலிருந்து பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலையினையும், சிலப்பதிகாரத்தில் பெண் விற்கப்படுதலையும் பற்றி ஆராய்ந்தறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ்ச் சங்கத்தில் எழுந்த நூல்களில் இலக்கியம், அறிவியல், வாழ்வியல், இயற்கை வளம் போன்றவை பரவலாகப் பேசப்படும் பாங்கினைக் காணலாம். இந்நூல்கள் மக்கள் நலன் கருதியே எழுந்தனவாகும். மக்கள் இயற்கையுடன் இணைந்து, பிணைந்து வாழ்பவர்கள். அவர்கள் ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிரினங்கள்வரை அன்பு காட்டி அரவணைத்துத் தம் வாழ்வியலை நடாத்துபவர்கள். அதில் அசைவற்ற, ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்கள் பற்றிய செய்திகளை நம் இலக்கியங்களில் காண்கின்றோம். இவற்றில் விலங்குகள் பற்றியும், பறவைகள் பற்றியும் சங்க இலக்கியங்களில் எவ்வண்ணம் பேசப்படுகின்றன என்பதைக் காண்பதே இக் கட்டுரையின் நோக்காகும்.
யானை, சிங்கம், புலி, குதிரை, ஆடு, மாடு, பசு, மான், கரb, முயல், பன்றி, நாய், பூனை, குரங்கு, எருமை, நரி, ஆமை, முதலை, உடும்பு, கழுதை, பாம்பு, எலி, பல்லி போன்ற விலங்கினங்களும், மயில், குயில், அன்னம், கோழி, சேவல், வாத்து, தாரா, கிளி, பருந்து, வல்லூறு, காகம், நீர்க்காகம், நாரை, கழுகு, ஆந்தை, வெளவால், கூகை, புறா, தும்பி, தேனீ, வண்டு போன்ற பறவையினங்களும் மக்களோடு தொடர்புபட்டனவாகும். இனி, விலங்கினங்களும், பறவையினங்களும் சங்க நூல்களிற் பவனி வரும் பாங்கினையும் காண்போம்.
பூங்காவனத்தின் 14 ஆவது இதழ் தற்பொழுது வாசகர் கைகளில் கிடைத்துள்ளது. காலாண்டுச் சஞ்சிகையாக வெளிவரும் பூங்காவனம், தனது ஒவ்வொரு இதழிலும் மூத்த பெண் எழுத்தாளர்களின் முன்னட்டைப் படத்ததைத் தாங்கி வெளிவருவதோடு அவர்களது இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை நேர்காணல் மூலமாக பெற்று, சஞ்சிகையின் ஆசிரியர் ரிம்ஸா முஹம்மதும், இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னாவும் வாசகர்களுக்கு இலக்கிய விருந்து படைத்து வருகின்றனர். இம்முறை சிங்கள மொழியில் இலக்கியம் செய்து அதனைத் தமிழ் மொழிக்குப் பரிசளித்து வரும், அநேகம் பேர் அறிந்திராத மூத்த இலக்கியப் படைப்பாளி திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களது புகைப்படத்தை பூங்காவனத்தின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்திருக்கிறது.
சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தி உலகில் யுத்த நிலைப்பாடுகள் அகன்று சமாதானம் மலர வேண்டும் என்ற கருத்தினை ஆசிரியர் தன் கருத்தாகத் தந்துள்ளார். பூங்காவனத்தின் உள்ளே திருமதி கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களுடனான நேர்காணலில் அவரது இலக்கியச் செயற்பாடுகளின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. நீர்கொழும்பைச் சேர்ந்த இவர் மலாய் இனத்தவராவார். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான் என்பவர், ஒரு காரியாவார் (குர்ஆன் ஓதுபவர்). இவர் மார்க்க உபன்னியாசகராக இருந்து அச்சுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இத்துடன் ஞானம் 163 இதழையும் அனுப்பி வைத்துள்ளேன். ஞானம் குழுவினர் போர்க்கால இலக்கியம் என்ற 600 பக்க மலரை வெளியீடு செய்தது போல தற்பொழுது புலம் பெயர் இலக்கியம் ஒன்றை வெளியிட உள்ளனர். பல பல்கலைக் கழக மாணவர்கள் ஞானம் இதழை தங்கள் சிறப்பு பட்டத்துக்க ஆய்வுக்காக எடுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் புலம்பம் பெயர் வாழ்வினைப் பிரதிபலிக்க கூடிய தரமானதும் ஆழமானதுமான கதைகள், கட்டுரைகள், கவிதைகளை ஞானம் குழுவினர் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள நற்றிணைப் பதிப்பகம் அகில உலக அளவில் நடாத்திய நாவல் போட்டியின் எனது கடவுச் சீட்டு என்ற நாவல் முதலாம் இடத்திற்கு தேர்வாகி இந்திய ரூபாய்கள் 50.000ஐயும் கையெழுத்துப் பிரதியாக இருந்த எனது நாவல் அவர்கள் மூலம் நூல் வடிவம் பெறுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். புலம்பெயர்வாழ் தமிழர்களின் எழுச்சிகளையும்; – வீழ்ச்சிகளையும் அதேவேளை வெற்றிகளையும் -தோல்விகளையும் காட்டும் வண்ணம் ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற பலநாள் கனவு இந்த நாவல் மூலம் ஈடேறியுள்ளது. சுமார் 500 பக்கங்கள் வரை வளர்ந்துள்ள இந்த நாவல் புலம்பெயர்வாழ் தமிழரின் வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டு முகத்தை காட்டுகின்றது எனக் கொள்ளலாம். காரணம் இது உங்களினதும் எனதும் கதை!
அசோகனின் வைத்தியசாலை- 22
மெல்பேனில் நகரின் மத்தியில் உள்ள ஒரு பிரபலமான மதுச்சாலைக்கு அன்ரூவின் பிறந்தநாள் அழைப்பை ஏற்று மாலை ஆறரை மணியளவில் வந்து சேர்ந்த சுந்தரம்பிள்ளைக்கு வாசலுக்கு சென்ற பின்பு தனியாக உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. பல தடவைகள் நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருந்தாலும் மதுச்சாலைக்கு தனியாக செல்வது என்பது இன்னமும் பழக்கத்தில் வரவில்லை. ஒரு கலாச்சாரத்தில் வளர்கப்பட்ட பின்பு மற்றய கலாச்சாரத்தில் மாறுவது ஓடும் இரயிலில் இருளில் ஒரு கம்பாட்மென்ரில் இருந்து மற்றதற்கு செல்வது போன்று இருந்தது. இலகுவான காரியமாக இருக்கவில்லை.
சனிக்கிழமையாதலால் மெல்பேனின் சிறந்த மியுசிக் குழு ஒன்றின் சங்கீதம் இருந்தது. நிகழ்ச்சி மாலை ஆறுமணியில் இருந்தே ஆரம்பித்ததால் மதுசாலை சங்கீதத்தால் மட்டுமல்ல, கூட்டத்தாலும் நிரம்பி வாசல்வரை வழிந்தது. கோடைகாலத்தின் நீண்ட பகலாக இருந்தபடியால் எங்கும் மக்களின் கூட்டமாக இருந்தது. அதேபோல் கார்கள் எங்கும் நிறுத்தப்பட்டு எதுவித வெறுமையான இடம் தென்படவில்லை. நல்லவேளையாக கார்கள் நிறுத்த இடம் இருக்காது என்பதால் ரயிலில் வந்தது புத்திசாலித்தனமானது என மனத்துக்குள் தன்னை மெச்சிக் கொண்டான். சாருலதாவுக்கும் சேர்த்து விருந்துக்கு அழைப்பு இருந்தாலும் இப்படியான இடங்கள் அவளுக்கு ஒத்துவராது எனக் கூறி அவள் மறுத்ததும் நல்லதாகிவிட்டது. இருவர் வந்திருந்தால் நிட்சயமாக காரில்த்தான் வந்திருக்க வேண்டும்.