‘எமது குழு கிரிக்கெட்டில் கிண்ணங்களை வென்றெடுப்பது எமக்கும் விருப்பமானது. நாங்கள் முஸ்லிம்கள்தான் என்றாலும் எங்களுக்கும் நாடு குறித்த உணர்வு இருக்கிறது. ஆனாலும் இந்த கிரிக்கெட்டால் அதிகமாகத் துயரடைவது நாங்கள்தான். பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைக்கப்பட முன்பிருந்தே நாங்கள் இங்கு குடியிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் எங்கள் வீடுகளுக்குள் சிறைப்பட்டிருக்கிறோம். நாங்கள் தெருவிலிறங்கிச் சென்றால் போட்டியில் தோற்றுவிட நேருமா? உண்மையில் எங்களுக்கு இந்தக் கிரிக்கெட் மீதே வெறுப்பாக இருக்கிறது. எங்களால் வழமைபோல வாழ முடியவில்லை. கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் நாங்கள் நாடுகடத்தப்பட்டவர்களைப் போல வாழ்கிறோம். இது என்ன சாபக்கேடு ஐயா?’ – லிண்டன் வீதியில் வசிக்கும் இவரது பெயர் விபரங்களைக் குறித்துக் கொண்ட போதும் ‘இந்தக் காலம் அவ்வளவு நல்லதல்ல’ என்ற எச்சரிக்கைக் குறிப்போடு ‘அவற்றைப் பிரசுரிக்க வேண்டாம்’ என அவர் கேட்டுக் கொண்டார்.
‘பாட்டி சொன்ன கதைகள்’ என்பது இங்கு நாம் நயங்காணவிருக்கின்ற நூலின் பெயர். லெ.முருகபூபதி இதனைப்படைத்திருக்கின்றார். இதிலே இருப்பவை உருவகக்கதைகள். பன்னிரண்டு கதைகள் இங்கே இருக்கின்றன. இந்த நூலுக்கு பெயர் வந்த காரணம், இதனை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த உந்துசக்தி என்பனவற்றை நூலாசிரியர் தம்முடைய முன்னுரையிலே விரிவாகச் சொல்லியிருக்கிறார். “இரவிலே உறங்கும் வேளையில் நான் கண்ணயரும் வரையில் என்னருகே படுத்திருந்து – எனது தலைமயிரை கோதிவிட்டவாறு பாட்டி சொன்ன கதைகள் இவை. இக்கதைகள் பின்பு கனவிலும் வந்திருக்கின்றன. மனதிலும் பதிந்துகொண்டன. அந்தப்பதிவு இங்கு பகிரப்படுகிறது.” என்கிறார்.
கதைகள் பிறந்த கதை
ஆசிரியர் தனது பாட்டியினது இடுக்கண் பொருந்திய வாழ்க்கையையும் அவளது துணிவையும் பரிவையும் இங்கே எடுத்துச்சொல்கிறார். “ யார் உதவியையும் எதிர்பாராமல் தனது உழைப்பையும் ஆத்மபலத்தையுமே நம்பி வாழ்ந்த எங்கள் பாட்டி எமக்கெல்லாம் முன்னுதாரணம்தான்” என்கிறார். ஆசிரியர் எழுதியிருக்கும் இந்த முகவுரை இவருக்கும் இந்தப்பாட்டிக்கும் இடையேயிருந்த பாசப்பிணைப்பை நன்கு உணர்த்தி நிற்கிறது. இந்தப்பாசத்தின் வெளிப்பாடு இந்த நூலின் பெயரிலும் கதைகளிலும் துலங்குவதைக்காணலாம்.
திறனாய்வும் திறனாய்வாளரும்!
க.பஞ்சாங்கத்தின் திறனாய்வு கட்டுரைகளின் முதற் தொகுப்பு நவீன இலக்கிய கோட்பாடுகள். இதற்கு அணிந்துரை பாரதி புத்திரன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எப்போதுமே பலநேரங்களில் ‘ஏதோ கேட்டார்கள் எழுதினேன்’ என்பதுபோல சில அணிந்துரைகள் அமைந்துவிடும். இந்நூலுக்கான அணிந்துரை அவ்வாறு எழுதப்பட்டதல்ல. எழுதியிருப்பவர், உள்ளத்தால் க. பஞ்சாங்கத்தோடு அண்மித்தவராக இருக்கவேண்டும், எனினும் மருந்துக்கும் துதிபாடல்களில்லை. நூலாசிரியருக்கும் நூலுக்கும் எது பொருந்திவருமோ அதனைக் கூடுதல் குறைவின்றி சொல்லி யிருக்கிறார்.
” மனித நேயம் மிக்கதோர் இலக்கிய திறனாய்வாளனின் சமூகத் தொண்டாக, வாழ்வின் உண்மை நோக்கிய தேடுதலாக அவர் தம் பணிகளை – படைப்புகளை உணர முடியும்” என ஓரிடத்தில் பாரதிபுத்திரன் குறிப்பிடுகிறார். இலக்கிய நண்பர்களால் ‘பஞ்சு’ என அழைக்கப்படும் க. பஞ்சாங்கத்தின் உழைப்பை இதனினும் பார்க்க வேறு சொற்களால் செரிவுடனும், பெருவெடிப்பு பிரகாசத்துடனும் சொல்ல இயலாது. இவாக்கியத்தை வாசித்தபோது பஞ்சாங்கம் குறித்த எனது முடிவில் தவறில்லை என்பதை உணர்ந்தேன். இத்தொடரை எழுத உந்து கோலாக இருந்த சக்திமிக்க சொற்கள் அவை.
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைப் படிப்பினை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். அக்காலகட்டத்தில் இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளெல்லாம் புதுக்கவிதைகக்கென்று ஒரு பகுதியினை ஒதுக்கி நிறைய கவிதைகளை வெளியிட்டு வந்தன. வீரகேசரியும் தனது வாரவெளியீட்டில் ‘உரை வீச்சு’ என்னும் தலைப்பிட்டு கவிதைகளை வெளியிட்டு வந்தது. அக்காலகட்டத்தில் வீரகேசரியின் ‘உரை வீச்சில்’ எனது ஆரம்பகாலக் கவிதைகள் பல வெளிவந்திருந்தன. அதுபோல் தினகரன், சிந்தாமணி, ஈழமணி போன்ற பத்திரிகைகளிலும் எனது ஆரம்பகாலக் கவிதைகள் பல வெளியாகியிருந்தன.
அச்சமயத்தில் வீரகேசரியில் ஓர் அறிவித்தல் வெளிவந்திருந்தது. வீரகேசரிக்கு ‘உதவி ஆசிரியர்’ வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதுபற்றிய அறிவித்தல். எனக்கு அக்காலகட்டத்தில் பத்திரிகையொன்றில் வேலை பார்ப்பது பற்றிய கனவொன்றுமிருந்தது. அச்சமயத்தில் வீரகேசரியின் ஆசிரியராகவிருந்தவர் சிவப்பிரகாசம் அவர்கள். வீரகேசரிக்கு உதவி ஆசிரியர் தேவை என்ற அறிவித்தலைப் பார்த்ததும் எனக்கோர் ஆசை. உடனடியாக வீரகேசரியின் அலுவலகத்துக்குச் சென்றேன். அப்பொழுது ஆசிரியர் அங்கில்லை. அங்கிருந்த ஏனையவர்களிடம் உதவி ஆசிரியர் வேலை பற்றி விசாரித்தேன். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவர்களும் என் எழுத்தனுபவம் போதும். ஆசிரியருடன் வந்து கதையுங்கள் என்றார்கள். ஆசிரியர் விடுமுறையிலிருப்பதாகவும் மீண்டும் வேலைக்கு வரும்போது வந்து கதைக்கும்படியும் கூறினார்கள்.
– என் பால்ய காலத்து வாசிப்பனுபவத்தை விபரிக்குமிக்கட்டுரை ஏற்கனவே ‘பதிவுகள்’ , ‘திண்ணை’ ஆகிய இணைய இதழ்களில் வெளியான கட்டுரைகளிலொன்று. தற்போது மேலும் சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. –
அப்பொழுது நான் வவுனியாவில் என் பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். என் அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுதுதான் நான் எழுத்துலகில் மெல்ல மெல்ல காலடி வைத்துக் கொண்டிருந்தேன். எனது ‘பொங்கல்’ பற்றிய சிறுவர் கவிதையொன்றினை ‘பொங்கலோ பொங்கல்’ என்னும் தலைப்பில் சுதந்திரன் தனது பொங்கல் மலரில் பிரசுரித்திருந்தது. உயர்வகுப்பு மாணவர்களுக்காக ஈழநாடு வாரமலர் நடாத்திய ‘தீபாவளி இனித்தது’ என்னும் கட்டுரைப் போட்டிக்காக ஆறாம் வகுப்பு மாணவனாக நான் இனிக்க இனிக்க எழுதி அனுப்பிய கட்டுரையினைப் பிரசுரிக்கா விட்டாலும் பாராட்டி என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது ஈழநாடு. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம், தினமணிக் கதிர், அம்புலிமாமா, பொம்மை, பேசும்படம், தினமணி, ராணி, ராணிமுத்து, மற்றும் ஈழத்துப் பத்திரிகைகளான சுதந்திரன், ஈழநாடு, அந்தனிசிலின் ‘தீப்பொறி’ என்று வீடு முழுவதும் பத்திரிகை, சஞ்சிகைகளால் அப்பா நிறைத்து வைத்திருந்தார். அனைத்துச் சஞ்சிகைகளினதும் தீபாவாளி மலர்களையெல்லாம் அப்பா வாங்கியிருந்தார். அவை தவிர பொன்மலர், பால்கன், வேதாள மயாத்மாவின் இந்திரஜால் காமிக்ஸ் எனப் பல்வேறு ‘காமிக்ஸ்’ வெளியீடுகளையும் அப்பா மறந்திருக்கவில்லை. இவை தவிர ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ (மகாபாரதம்), ‘சக்கரவர்த்தித் திருமகன்’ (இராமாயணம்), சேக்கிழாரின் பெரியபுராணம், பாரதியார் கவிதைகள் என மேலும் பல நூல்கள். அப்பாவுக்கு இரு பெரும் இதிகாசங்களான ‘இராமாயணம்’, ‘மகாபாரதம்’ ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு. அதன் காரணமாகவே எங்களுக்குப் பெயர்களை (கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி, தேவகி) வைத்தபொழுது அவ்விரு இதிகாசங்களிலிருந்தே வைத்ததாக அம்மா கூறியிருந்தார்.
Statement — Minister Kenney issues statement to mark Thai Pongal Ottawa, January 14, 2014 — The Honourable Jason Kenney, Minister…
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய்
உங்கள் மனமும் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!
பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!
பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும் பொதுமை இசைத்து!
இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவரும், சிறந்த சஞ்சிகையாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி நின்றவருமான அன்புமணி (இராசையா நாகலிங்கம்) அவர்கள் இயற்கை எய்திய செய்தி மனதை உலுக்கி நின்றது. இப்போது தான் பேசினோம். அதற்குள்… மனம் கவலை கொள்கிறது. சிறுகதையாளனாக, நாவலாசிரியனாக, கட்டுரையாளனாக, விமர்சகராக, நாடக ஆசிரியராக, நடிகனாக, நாடக இயக்குனராக, இதழாசிரியனாக, நல்ல நேர்காணலாளராக, நண்பனாக வலம் வந்தவர். 06/03/1935இல் ராசையா/தங்கமணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். தமிழின் மீதான அளப்பரிய ஈடுபாடே அவரின் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களாக வைத்து அழகு பார்த்தார். மட்டக்களப்பு ஆரையம்பதி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, ஆரையம்பதி சிறி இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியை முடித்தபின் காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பயின்றார்.அந்த நாளைய கல்வித் தராதரக்(எஸ்.எஸ்.சி) கல்வியை கற்று முடித்தவர் லிகிதராக,உதவி அரசாங்க அதிபராக,உள்துறை உதவி செயலாளராகவும், சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி அவர்களின் செயலாளராகவும் பணி புரிந்தார். இவரின் படைப்புக்களை மலர், தினகரன், கல்கி, செங்கதிர், ஞானம், தாரகை, வீரகேசரி, சாளரம், வெளிச்சம், தொண்டன், எனப் பல அச்சு ஊடகங்களும், ஒலி/ஒளி ஊடகங்களும் தாங்கி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.செங்கதிரின் வளர்ச்சியிலும் ஊக்குசக்தியாக இருந்திருக்கிறார். மனித நேயம் மிக்கவர்.எப்போது நான் தொலைபேசியில் அழைத்தாலும் அன்பாக பேசி என்னைக் கவர்வார்.ஆரம்பத்தில் ‘மலர்’ எனும் இலக்கிய சஞ்சிகையை நடத்தினார்.பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.இலக்கிய அனுபவம்,ஆளுமை மிக்கவர்.செ.யோகநாதனின் ‘தோழமை என்றொரு சொல்’ மலர் வெளியீடாகவே வெளிவந்தது.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்! இரு நிகழ்வுகள் 1. எனது புதிய மொழி பெயர்ப்பு நூல்2008ல் நோபெல் பரிசுபெற்ற லெ கிளேஸியோவின் (Le Clèzio)…
அசோகனின் வைத்தியசாலை-24
வாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருக்க வேண்டியது இல்லைத்தானே. ஏற்ற இறக்கங்கள் நன்மை தீமைகள் சுகங்கள் துக்கங்கள் என மாறிமாறி வருவது இயற்கை. அதற்கேற்க ஷரனது வாழ்க்கையில் விரும்பத்தக்க ஒரு மாற்றம் வந்ததது. அவளது குடும்பம் சார்ந்த சகலருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக அது இருந்தது. பல காலமாக தாய் வீட்டில் கணவன் கிறிஸ்ரியனை பிரிந்து இருந்த போதும் அவள் தனது விவாகரத்தை கோட்டுக்குப் எடுத்து போகவில்லை. கோட்டுக்குச் சென்று வழக்குப் பேசி தனக்குச் சொந்தமாக வரக்கூடிய பல மில்லியன் டாலர்களை இழப்பதற்கு தயாரில்லை. அவசரத்திலும், ஆத்திரத்திலும் சாதாரண பெண்களைப்போல் உணர்வு வயப்பட்டாலும் சிறிது நேரத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவளது மூளையின் சிந்திக்கும் மூளையின் முன் பகுதிகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அவளை அமைதியாக்கும். ‘கமோன் ஷரன், நீ மற்றவர்கள்போல் அல்ல. இதற்காகவா உனது இளமைக் காலத்தை வயதான ஒருவனோடு வீணடித்தாய். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள் உன்னை கீழே தள்ளி வீழ்த்திவிடும். கணவனைப் பிரிந்த மற்றய பெண்களைப்போல் அரசாங்கத்தின் பிச்சைப் பணத்திலும் மற்றவர்களின் அனுதாபத்திலும் வாழ்நாளை கடத்துவதற்கு பிறந்தவள் அல்ல. உனது அழகும், அறிவும் உன்னை ஒரு மகாராணி போல் வாழ்வதற்கு வழிகாட்டும்’ எனச் சொல்லி அவளிடம் சிந்தனையை தூண்டிவிடும். தன்னில் உள்ள நம்பிக்கை உசுப்பி விடப்படுவதால் விவாகரத்து என்ற விடயத்தை முற்றாக தள்ளிப் போட்டிருந்தாள்