வாயில்லா உயிர்களிடம் காட்டும் நேசம் பற்றிய லதா ராமகிருஷ்ணனின் ‘அன்புக்கு அஸ்வினி’ என்ற பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை அருமையாக இருந்தது. அஸ்வினி அனாதரவாக இருக்கும் அத்தகைய உயிர்களிடம் காட்டும் அன்பு நிச்சயம் போற்றப்பட வேண்டியது. இது போன்று வாயில்லா உயிர்களிடம் அன்பு காட்டும் பலர் பல்வேறு நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் கூட அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் கொழும்பிலே ஓய்வு பெற்ற ஒருவர் தெரு நாய்களுக்குத் தினமும் உணவு ஊட்டுவதாகவும், அவரைத் தான் சந்தித்து உரையாடியதாகவும் ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி என்ற இதழில் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தாயின் பாசத்திற்கு அடுத்தபடியாக, வாயில்லா உயிர்களிடம் வைக்கும் அன்பு தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு என நான் நினைக்கின்றேன்.
– *இது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள குறுநூல் வரிசையில் பிரசுரமாகியுள்ளது. 100க்கும் மேற்பட்ட குறுநூல்கள் 10 ரூபாய், இருபது ரூபாய் அதற்குட்பட்ட விலைகளில் பலதரப்பட்ட சமூக இலக்கிய கருப்பொருள்களில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் இத்தகைய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. நூல்கள் வேண்டுவோர் ungalnoolagam@gmail.com ஐ தொடர்புகொள்ளவும். –
இலக்கியம் மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு
இலக்கியம் என்பது மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றும், மனித வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கினைப் பிரதிபலிப்பதாய் இலக்கியம் விளங்க வேண்டும் என்றும், இவ்விரண்டு பிரதிபலிப்புகளும் கலந்ததே இலக்கியம் என்றும் நம் வாசிப்பனுபவத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறோம். எழுத்தின் வலிமை எல்லோருக்கும் தெரியும். சிறந்த நேர்மையான படைப்புகள் பல சமூகத்தில் சீரிய மாற்றங்கள் உருவாகக் காரணமாய் இருந்திருக்கின்றன; இருந்துவருகின்றன.
உண்மையின் அடிப்படையில் உருக்கொள்வதுதான் புனைவு அல்லது கற்பனை. உலகில், காலங்காலமாக மாற்றுத்திறனாளிகளின் இருப்பு என்பது நடப்புண்மை. எனில், அவர்களைப் பற்றிய சித்திரிப்புகள் இலக்கியப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளனவா? உள்ளது எனில் எப்படிப்பட்ட சித்தரிப்புகள்? இலக்கியப் படைப்புகளில் பண்டைய இலக்கியந்தொட்டு சமகாலஇலக்கியம் வரை, உள்ளூர் இலக்கியம் முதல் உலகளாவிய இலக்கியம் வரை எத்தனை கதாபாத்திரங்கள் மாற்றுத்திறனாளிகளாக இடம்பெற்றிருக்கிறார்கள்? அவர்கள் எவ்விதம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்?
நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில்… சுவாமி தரிசித்து, ப+ச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப் புனிதமாகத் தோன்றினாள்.
“இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளிலிருந்து இப்பதான் என்ர மனம் நிறைஞ்சிருக்கு!” என்றேன்.
அவள் நாணம் மேலிட, “எப்பிடி வெளிக்கிட்டாலும் உங்களுக்கு ஏதாவது குறைதானே…? சரி, சரி! இப்பவாவது இந்தத் திருவாய் மலர்ந்தது போதும்!” எனத் தனது மகிழ்ச்சியை மனக்குறை போல வெளிப்படுத்தினாள்.
“நான் அதைச் சொல்லயில்லை..!”
“குருவிப்பிள்ளையள் கூடு கட்டுகினம்!”
“உண்மையாவா?” ஆச்சரியம் அவள் முகத்தில் மலர்ந்தது.
குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது. இரத்த நாடிகளில் வேகமாக ஓடும் குருதியின் ஓட்டத்தை நாடித் துடிப்பில் கை வைத்து பார்த்துக் கொண்டான். அவனது இதயத்தின் துடிப்பு பல மடங்கு அதிகமானதால் அவசரத்தில் உள்ளே இருந்து வெளிவர துடிக்கும் சிறுவன் கதவைத் தட்டுவது போல் நெஞ்சாங் கூடு அதிர்ந்தது. சேரா குளிருக்காக போரத்தியிருந்த மண்ணிற கம்பிளி போர்வையின் ஊடாக அவளது கைகளின் மணிக்கட்டுப் பகுதியை பிடித்தபோது கழுத்தை திருப்பி மெதுவாக என்ன என்பது போல் சிரித்தாள்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது ‘அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)’ என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். ‘கருப்புப் பிரதிகள்’ வெளியீடாக வெளிவந்த நூல்.
அன்புள்ள கலை, இலக்கியவாதிகளுக்கும் சமூகப்பணியாளர்கள் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள். எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் – மெல்பனில் இலத்திரனியல் ஊடகத்தில் தமிழ் என்ற தலைப்பில் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளோம்.
நடைபெறும் இடம்: Darebin Intercultural Centre ( 59 A, Roseberry Avenue, Preston, Victoria – 3072)
காலம்: 23-02- 2014 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை
என்ன எழுதலாம்?..சாந்தனுக்கு எதுவும் தோன்றுவதாய் தெரியவில்லை.ஒரு சிறுகதையை எழுதி நாளாந்தம் வருகிற பலகணி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டால் ,அதில் வெளிவருவதற்கான சாத்தியமும் இருக்கிறது தான். அதன் ஆசிரியர் ஜேம்ஸ், சில அலம்பல்களை வெட்டி எடிட் பண்ணி, சனிக்கிழமை வாரமலரில் போட்டு விடுவார்.அவருடைய முதல் கதை பிரசுரமான போது அவரிமிருந்து சிறு கடிதமும் வந்திருந்தது.”இளம் எழுத்தாளரே (உச்சி குளிர்ந்து விட்டது) தொடர்ந்து எழுதும். உம்முடைய எழுத்தில் ஒரு கதை ஒளிந்து கிடக்கிறது”என்று எழுதியிருந்தார். ‘கதை’ கிடையாவிட்டால் மெளனம்! இவர் புரிந்து கொள்வார். இவர் அதை மீள வாசித்து திருத்தம் செய்து செப்பனிட்டு மீள ஒரு தடவை எழுதுவார்.அதை 2 நாள் விட்டு எடுத்து வாசிக்கிற போது சிலவேளை அவருக்கு திருப்தி இல்லாமலும் இருக்கும்.அதை திருத்தி, செருக..அது புதிய பாதையில் பயணிக்கும்.அப்படி அவர் ஒரு கதையை 5 தடவைகள் கூட எழுதியிருக்கிறார்.அதற்குப் பிறகு யோசியாது பலகணிக்கு அனுப்பி விடுவார். ஜேம்ஸுற்கு தான் சித்திரவதை. அப்படி இருந்த 3 கதைகளை சேர்த்து ஒரு நாவல் போல அனுப்பினார். பலகணியில் தொடராக வந்து விட்டது.
தண்ணீர், தண்ணீர், தண்ணீர், என கண்களைச் சுழற்றிய எல்லா திசைகளிலிருந்தும்,தண்ணீரே உலக நாயகியாய் ஓங்கரிக்க, காற்று ஊழியாய் வீசியடித்தது. தண்ணென்ற ஜல சமுத்திரத்தில் விர்ரென்று போய்க்கொண்டிருந்தது கப்பல். சுருண்டு கிடந்தாள் நாணிக்குட்டி. கப்பல் பயணத்தில் இவளைப் போலவே பலருக்கும் தலைசுற்றலும் வாந்தியும் படுத்தி எடுத்துக் கொண்டுதான் இருந்தது.
என்றாலும் ஆண்களில் சிலர் அனுமதி வாங்கி கப்பலின் மேல்பரப்பில் போய் நின்று கொண்டு ஒருநோக்கு ஜலசமுத்திரத்தை பார்த்துவிட்டே வந்தார்கள். குஞ்ஞு குட்டன் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தான்..அப்படி உற்சாகமாக இருந்தது.பின் என்ன ? பச்சை நரம்பு புடைத்த வீர்யம் மிக்க தரவாட்டு நாயராக்கும். இல்லையென்றால் வேறொருவனுக்கு மணம் நிச்சயிக்கப்பட்ட நாணிக்குட்டியை, ராவோடு ராவாக இழுத்துக்கொண்டு ஓடிவரும் துணிச்சல் எவனுக்கு வரும் ? என்னமாய் பெண் இவள்.? குடும்பப் பகை காரணமாக , சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று தெரிந்தும்கூட ,பெண் கொடுக்க மறுத்த” பூவில’ தரவாட்டுக்கே மூக்கறுபட்ட அவமானத்தை கொடுக்கவும் நடு முதுகு நிமிர்வு வேண்டாமா ? இத்தனைக்கும் ”என்னோடு சிங்கப்பூரிக்கு வரியா,” என்று கேட்டது கூட ஒரு முரட்டு வேகத்தில் தான். மறுபேச்சில்லாமல் வெட்கப்பட்டுச் சிவந்தவள் அவன் நீட்டிய கையைப் பற்றிக்கொண்டாள். ஆச்சரியம் தான்! இவளுக்கும் என் மீது இவ்வளவு ஆசையிருந்ததா ?
அன்புடையீர், வணக்கம். தமிழர் திருநாள்-புத்தாண்டு வாழ்த்துகள். தமிழ் இலெமுரியா தை 2045 ( 14 சனவரி 2014) தமிழர் திருநாள் சிறப்பிதழ் நம் இணையத் தளத்தில் வண்ணப் பக்கங்களுடன் வலையேற்றம் செய்யப் பட்டுள்ளது. www.tamillemuriya.com மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளை மட்டுமே தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ். ஈழம் குறித்து ரவி நாயரின் கட்டுரை, சண்.தவராசா,தோழர் நல்லகண்ணு, சஞ்சீவ்குமார், ம.இலெ.தங்கப்பா, குமணராசன், சுப.கரிகால் வளவன், சீர்வ்ரிசை சண்முகராசன், ’விழிகள்’ நடராசன் ஆகியோரின் கருத்தோவியங்கள், மகராட்டிரா மாநிலத்தில் ஆட்சியர்களாகத் தமிழர்கள் – நேர்முகம், வளமான கவிதைகள் என தித்திக்கும் பொங்கலாய் தமிழர் திருநாள் சிறப்பிதழ் மிளிர்கின்றது.