ஷேக்ஸ்பியரின் ஆங்கில இலக்கிய விருந்துகள் [ஷேக்ஸ்பியர் நினைவு தினக்கட்டுரை.]

[வில்லியம் ஷேக்ஸ்பியர் ஞானஸ்நானம் பெற்ற தினம் ஏப்ரில் 26, 1564. அவர் பிறந்த தினம் ஏப்ரில் 23, 1564 என்று கருதப்படுகின்றது. அவரது மறைந்த தினமும் ஏப்ரில் 23, 1616. – பதிவுகள்-]

முன்னுரை
வில்லியம் ஷேக்ஸ்பியர்பேராசிரியர் கோபன் மகாதேவாஆங்கிலமொழியில் நன்றே எழுதிப் புகழீட்டிய வில்லியம் ஷேக்ஸ்பியர், என் இலக்கிய நாயகர்களின் முதல் வரிசையில் வீற்று இருப்பவர். அவர் இங்கிலாந்தின் முதலாவது எலிசபெத் மகாராணியின் காலத்தவர். அதாவது இன்றிருந்து 450 ஆண்டுகளுக்கு முன் பிறந்து 52 வருடங்கள் வாழ்ந்து இலக்கியப் படைப்பினையே தன் தொழிலாகச் செய்து பணத்துடனும் புகழுடனும் இறந்தவர். தன் 52 வருட வாழ்க்கையிலே 39-பிரபலமான நாடகங்களையும், 154-சொனெற்-ரகக் கவிதைகள், அத்துடன் ஆறு சங்கீதத்துக்கு உரிய சொனெற்றுக்களையும், ஐந்து நீள்-கவிதைக் கதைகளையும் எழுதியிருக்கிறார்.
    
இன்று பொதுமக்கள் ஆங்கிலத்தில் சாதாரணமாகச் சம்பாசிக்கும் போது கூட, ஷேக்ஸ்பியரின் பல எழுத்து ஓவியங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து ஓரிரண்டு சொற் தொடர்களையாவது பாவிக்காமல் நான்கோ ஐந்தோ நிமிடங்கள் கூடப் பேச முடியாது, என்று சொல்லப் படுகிறது. அந்த அளவுக்கு ஷேக்ஸ்பியரின் இலக்கியங்கள் ஆங்கில மொழியை மேன் மேலும் தளைக்கவும் உதவியுள்ளன என்பர். எனவே இவர் ஆங்கிலத்தில் ஒரு முக்கியமான நாடகக் கவி எனக் கருதப்படுபவர். தன் மொழிக்குச் சிறப்பூட்டிய ஓர் இலக்கிய மேதை.

Continue Reading →

கணித்தமிழ்: காலத்தால் அழியாத பழமொழிகளைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் அடுத்த தலைமுறையினருக்காகவும் மின் கற்றலுக்காக கணினி மயப்படுத்துதல்

முன்னுரை

அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  – ஆசிரியர், பதிவுகள் –

M.சோமதாசன்காலத்தால் சாலப்பழைமையுடைய நம் செம்மொழியாம் அருமைத் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்றது. அறிவியல் நுட்பங்களைத் தன்னகத்தே உள்வாங்கி மாறிவரும் உலக சூழலுக்கேற்ப தகவல் தொடர்பு மின்னணுச் சாதனங்கள் மற்றும் கணினி இணைய வலைத்தளங்கள் ஊடாக தேவைக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெறும் தன்மையானது ஒரு மொழியின் நிலைத்த தன்மைக்கு இன்றியமையாததாகும். அந்த வகையில் இந்த பாரினுள் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் தலைசிறந்த கலை இலக்கிய அறிவுப் பெட்டகமாகத் திகழும் எமது தமிழ் மொழியை இன்றைய கணினி யுகத்திலே கணினிச் சுதேசிகள் Digital Natives என்றழைக்கப்படும் எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு இட்டுச் செல்வது நாம் நமது மொழிக்குச் செய்யும் பாரிய தொண்டாகும். இதை மையப்படுத்தி இந்த ஆய்வுக் கட்டுரையிலே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், சீரிய வாழக்கைக்கு அடித்தளமிடும் வாழ்க்கை நெறிகளுக்கும் பழமொழிகள் வழங்கும் பங்களிப்பு யாது என்பது ஆராயப்படுவதோடு மட்டுமல்லாமல் அவற்றை மின் கற்றலுக்காக E-Learning,  கணினி மயப்படுத்தி அடுத்த சந்ததியினர் பயன் பெறவும், ஒரு கணினி மென்பொருள் உருவாக்கப்படுகிறது. இந்த உருவாக்கமானது கணினி வழி ஊடாக தமிழ் மொழிக் கற்றலில் ஒர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்கு எமது மொழியின் தங்கு தடையற்ற பாவனைக்கும் ஒரு பாலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

Continue Reading →

ஆஸ்திரேலியா: மெல்பனில் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு

ஆஸ்திரேலியா: மெல்பனில் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்குஅவுஸ்திரேலியாவில்   இயங்கும்   இலங்கை   சமூகங்களின்   கழகத்தின் ஏற்பாட்டில்    எழுத்தாளரும்   மிருக   மருத்துவருமான   டொக்டர்  நடேசனின் மூன்று   நூல்களின்  விமர்சன  அரங்கு   எதிர்வரும்  04 – 05 – 2014  ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை  மெல்பனில்  பிற்பகல்  2  மணியிலிருந்து  மாலை  5  மணிவரையில்   GLENWAVERLEY   R S L    மண்டபத்தில்  (161, COLEMAN PARADE,   GLENWAVERLEY – VICTORIA – 3150)               (  GLENWAVERLEY    ரயில்   நிலையத்திற்கு  முன்பாகவுள்ள   மண்டபம்)       நடைபெறும். ஏற்கனவே   தமிழிலும்    ஆங்கிலத்திலும்   வெளியான   வண்ணாத்திக்குளம்   நாவலின்   சிங்கள    மொழிபெயர்ப்பு – சமணலவெவ – தமிழில்   வெளியான   உனையே  மயல் கொண்டு   நாவலின்   ஆங்கில மொழிபெயர்ப்பு   Lost in you         மற்றும்   இந்த   ஆண்டு   வெளியான   புதிய நாவல்    அசோகனின்   வைத்தியசாலை   ஆகிய    மூன்று   நூல்கள்  இந்த விமர்சன    அரங்கில்   திறனாய்வு    செய்யப்படும்.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள்—2 & 3

என்னோடு வந்த கவிதைகள்- 2 

- பிச்சினிக்காடு இளங்கோ “இட்டதோர் தாமரைப்பூ
 இதழ்விரிந் திருத்தல் போலே
 வட்டமாய்ப் புறாக்கள் கூடி
 இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
 வெட்டில்லை; குத்து மில்லை;
 வேறுவே றிருந்த ருந்தும்
 கட்டில்லை;கீழ்மேல் என்னும்
 கண்மூடி வழக்க மில்ல.”    பாரதிதாசன்

அந்த இளமைப்பரவத்தில் பாடிய இன்னொரு பாடல் உலகநாதர் இயற்றிய, உலக நீதியில் இடம்பெற்ற

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
 ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
 வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
 போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்” என்ற பாடல்.

இதுபோன்ற பாடல்களைச் சின்னவயதில் எந்தச்சிந்தனையுமில்லாமல் படித்தகாலம் நினைவுக்குவருகிறது. நீதியை; அறத்தை;வாழ்வியல் உண்மைகளைச் செய்யுளாகப் பாடிய நினைவுகளன்றி கவிதைபற்றிய எந்த ஈர்ப்பும்; நினைப்பும் இல்லாமலிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.

Continue Reading →

மாந்திரீக எதார்த்தப் படைப்புகளைத்தந்தவர் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்!

கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் “லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள், கடந்தகாலம் மற்றும் தேசியம்தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்.” -பாப்லே நெருடா.

மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்இறப்பெய்தினார். யதார்த்தை கூறும் முறையில் இலக்கியத்தின் உறவை அங்கீகரித்துச்சென்ற மார்க்வைஸ் இறந்ததும் மாயத்தன்மை கொண்டதுமான நினைவுகளையும் தன் பாட்டியிடம் கேட்டறிந்த புதிர்களையும் தனக்குரிய வாலயப்பட்ட ஸ்பானிய மொழியிலே கதை சொல்லி வந்தார். இந்தக் கதை சொல்லி ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே இறந்துவிட்டார். என்பத்தி ஏழுவயதில் இன்று  அவர் உடல் இவ்வுலகினை விட்டுப் பிரிந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே அவர் நினைவாற்றலை இழக்கும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். என்ற உண்மையில் நாம் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருந்தோம். இன்று அவரது உடலும் எம்மிடமிருந்து இல்லாமல் போய்விட்டது. 

Continue Reading →

குறுநாவல்: தங்ஙள் அமீர்

எழுத்தாளர் சீர்காழி தாஜ்புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் ‘தங்ஙள் அமீர்’ இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. ‘தங்ஙள் அமீர்’ என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர்  இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக ‘தங்ஙள் அமீரை’ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை  விபரிக்கும் ‘தங்ஙள் அமீர்’ வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் ‘மிதவை’ (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ”தங்ஙள் அமீர்’. இக்குறுநாவலினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். –வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்

Continue Reading →

ரிஷி கவிதைகள்: கவிதைக்கோலோச்சிக்கு….

Latha Ramakrishnan

(1)
கால்காசு கிடைக்க வழியில்லாதபோதிலும்
கவிதைமேல் காதலாகிக் கசிந்துருகி
காயங்களுக்கு வடிகாலும்,
மாயவுலகத் திறவுகோலுமாய்
காலங்காலமாய் எழுதப்பட்டவைகளிலெல்லாம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்
கால தேச வர்த்தமானங்கள்;
தேடப் பொருதியின்றி திட்டித் தீர்க்கிறீர்கள்.
பொருட்படுத்திப் படிக்கும் பெருந்தன்மையின்றி
உங்களுக்கு முன்னே எழுதிய கவிஞர்களை பிரச்னையற்றவர்களாக்கி
பெருந்தனக்காரர்களாக்கி
கவிதையைப் பொழுதுபோக்காக பாவிக்கும் பித்தலாட்டக்காரர்களாக்கி
பேட்டை தாதாக்களாக்கி
சோதாக்களும் பீடைகளும் பீத்தைகளுமாக்கி
சேறு பூசி, செம்புள்ளி கரும்புள்ளி குத்தி,
சிலுவையிலறைந்து முடித்து
குண்டாந்தடியை செங்கோலெனச் சுழற்றியபடி
பரிவாரங்களோடு பவனி வந்து
உங்களுக்கு நீங்களே விசுவரூப சிலைவடித்துக்கொள்கிறீர்கள்
உலக அரங்குகளில்.
உண்மையான கலகம் இதுவல்ல என்று
உணர்வீர்களோ என்றேனும்?

Continue Reading →

சிறுகதை: மீண்டும் தொடங்கும் மிடுக்கு

சிறுகதைகீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம் இருக்கிறது.மற்ற தோழிகளிற்கு,பெரிய விவசாய அறிவில்லாவிட்டாலும்,பயிரின் கீழேயுள்ள மண்ணை சிறிது கொத்தி தூர்த்தும்,ஏதாவது விருந்தாளியான களைப் பூண்டின் பகுதி தெரிந்தால் வேருடன் பிடுங்கி,இடுப்பில்  செருகியுள்ள சொப்பிங் பையில் போட்டுக் கொண்டுமிருந்தார்கள்.அவள் இடுப்பிலும் ஒரு பை தொங்கிறது .
  
அவளைப் போன்ற சோகம் அவர்களுக்கில்லை.இருந்தாலும்,அவளுடன் அனுதாபத்துடனே பழகிறார்கள்.அவளால் தான் ‘தனித்த’ நிலையிலிருந்து விடுபட முடியவிலை. வீடும்,அவளைப் போலவே கிடக்கிறது.’உற்சாகமாகவிருக்க வேண்டும்,நம்பிக்கைகளுடன் இருக்க வேண்டும்,இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதிக்கவிதை வரியை எடுத்து அலம்பிற அப்பாவிற்குக் கூட நாடி விழுந்து விட்டது.

Continue Reading →

சிறுகதை: உறுத்தல்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -‘நைட் ஸிஃப்ட்” வேலை முடிந்து பஸ் எடுத்து வீட்டுக்கு வந்து சேர எட்டு மணியாகிவிட்டது. நித்தியும் கோபாலும் ஏற்கனவே புறப்பட்டுவிட்டார்கள் என்பதை பூட்டியிருந்த கதவு காட்டியது. இப்படி சில நாட்களில் அவர்களுக்கு பொறுப்புணர்வு மிகுதியானதுபோல் நேரத்துடன் வேலைக்குப் போய்விடும் அற்புதம் நடப்பதுண்டு. கதவைத் திறந்து வீட்டுக்குள் போனதும் தனிமையை மறக்க ரேடியோவை ‘ஓன்” பண்ணினேன். ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…” என அது பாடியது. இரவு வேலைக்குப் போகிறவர்களெல்லாம் தூக்கம் கெட்டு கடமையே கண்ணாக இருப்பார்களாக்கும் என அது அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இப்போது உறங்க முடியாது. சமையல் வேலை காத்துக்கொண்டிருக்கிறது. உத்தியோக நிமித்தம் இந்த நகரத்துக்கு வந்து தங்குமிட வசதி கருதி ஒன்று சேர்ந்தவர்கள் நாங்கள். நகரத்தையண்டிய பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறியிருந்தோம். நித்தியானந்தன் கிராம அபிவிருத்தி அலுவலராக வேலை பார்க்கிறவன். கோபாலச்சந்திரன் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி. தொழிற்சாலை ஒன்றில் ‘ஸிஃப்ட் என்ஜினியரா”கக் கடமையாற்றுகிறவன் நான். அன்றாடம் வேலைக்குப் போவது, வருவது, சாப்பாட்டுக் கடைகளில் போய் எதையாவது வயிற்றுப்பாட்டுக்குப் போட்டுவிட்டு வந்து அறைகளில் ஒதுங்குவது என்று எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. உப்புச் சப்பில்லாத இந்த வாழ்க்கைக்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாமே எனக் கருதி ‘நாங்களே சமைக்கிற” திட்டத்தை ஆரம்பித்தோம். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. மூவருமே திருமண வயதில் (திருமணத்தை எதிர்பார்த்து) காத்திருக்கும் இளைஞர்கள். வந்து வாய்க்கப்போகிற மனைவிக்குச் செய்யவேண்டிய பணிவிடைகள் பற்றிய பயம் (அல்லது ஆர்வம்) உள்@ர எங்களுக்கு இருந்தது. விளையாட்டாகவேனும் சமையற் கலையைக் கற்றுத் தேர்ந்துவிடலாமே என்ற ஆசைதான்.

Continue Reading →

சிறுகதை: கொம்புத்தேன்

-  வே.ம.அருச்சுணன் – மலேசியா கைபேசி ஒலிக்கிறது!

எடுத்துப் பார்க்கிறேன். அறிமுகமான எண்தான்!

பள்ளி முதல்வர் நாஷான் பேசுகிறார்.

நான் குழப்பமடைகிறேன்.

மன உளைச்சல். நேரத்திலேயே  வீடு திரும்புகிறேன்.

“என்னங்க….சீக்கிரமா திரும்பிட்டிங்க?”

“வதனி……சந்துரு எங்கே…..?”

Continue Reading →