ஜெயந்தி சங்கருடன் ஒரு நேர்காணல்: முடிவை விட பயணமே முக்கியம்

ஜெயந்தி சங்கர்:1. வணக்கம்!  உங்கள் குடும்பப்பின்னணி குறித்துச் சொல்லுங்கள்

ஜெயந்தி சங்கர்: என் பெற்றோரின் பூர்வீகம் மதுரை. நான் பிறந்ததும் மதுரை. இருப்பினும், பள்ளிவிடுமுறைநாட்களுக்குப் போவது தவிர மதுரையுடன் எனக்கு எந்தத் தொடர்பும் குறிப்பிடும் அளவிற்கு இருந்ததில்லை. அம்மா சாதாரண இல்லத்தரசி. இசை அறிந்தவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட அப்பா மத்திய அரசாங்கத்தில் ஒரு பொறியாளராக இருந்தார். வாசிப்பு, தொழில்நுட்பம், புகைப்படம், ஓவியம், தோட்டக்கலை போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்பாவுக்கு மாற்றலாகிக் கொண்டே இருக்கும். ஆகவே, கோவை முதல் ஷில்லாங் வரை பல ஊர்களிலும், மாநிலங்களிலும் வளர்ந்தேன். ஆகவே, பல மொழிகளும் பல்வேறுபட்ட கலாசாரங்களும் எனக்கு சிறு வயது முதலே அறிமுகம். குடும்பத்தில் நானே மூத்தவள். ஒரு தங்கை, லண்டனில் ஆங்கில ஆசிரியையான இருக்கிறாள். இரண்டு தம்பிகள். இருவரும் பொறியாளர்கள். கணவர் ஒரு பொறியாளர். இரண்டு மகன்கள். பெரியவன் ஒரு பொறியாளர். சிறியவன் சட்டம் இரண்டாம் வருடம் படிக்கிறான்.

Continue Reading →

சிறுகதை: பொலிடோல்

 - நடேசன் -ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன  பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான். இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும்; அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது. மருத்துவர்களுக்கு மட்டுமே இறந்த மனிதர்களின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளை கூறாக்கி பார்க்கும் அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அது மனதிற்கு உவப்பானதாக இருக்காது. பலரால் கண் திறந்து பார்க்கவும் முடியாதது .

தென்னிலங்கையின் சிறிய நகரம் ஒன்றில் அரசாங்க மருத்துவராக இருந்த நண்பன் குமாரின் வீட்டில் சிலகாலம் இருந்தபோது அவன் இறந்த உடலைக் கூறுபோடும்போது பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் ஏற்பட்டது. அது ஒரு விவசாயிகள் வாழும் சிறிய நகரம். நகரத்தைச் சுற்றி பதினைந்து கிலோமீட்டர் சுற்றி உள்ள கிராமங்களுக்கு இந்த நகரமே இதயம். மருத்துவமனை, மருத்துவர்  குடியிருப்பு,  இரயில்வே நிலையம் மற்றும் கடைகள்  இருப்பதனால் அந்த  நகரத்திற்கு விவசாயிகள் தங்களின்  நாளாந்த தேவைகளின் நிமித்தம் அங்கு வருவார்கள். அந்த நகரத்தில்; நான் மிருக மருத்தவராக  இருந்த காலத்தில் அங்கு குமார் அரசாங்க வைத்தியசாலையில் மருத்துவராக இருந்தான்.  ஏற்கனவே பல்கலைக்கழகத்தில்  நாம் நண்பர்களாக இருந்ததால் எமது நட்பு அங்கும் நீடித்தது.

Continue Reading →

புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்!

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

  – இன்று – மே 31, 2014 -‘டொராண்டோ’வில் எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன் ஆதரவில் நடைபெற்ற மாதாந்த இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம். நிகழ்வில் நேரப் பற்றாக்குறை காரணமாக கட்டுரை முழுவதையும் வாசிக்க முடியவில்லை. அதற்காக இக்கட்டுரை இங்கு முழுமையாக மீள்பிரசுரமாகின்றது. – வ.ந.கி –

புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி….

இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ‘திரை கடலோடித் திரவியம் தேடினார்கள் அற்றைத் தமிழர்கள். பொருளியல் காரணங்களுகாக அன்று தமிழ் மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்து தமது ஆட்சியினை விஸ்தரித்தார்கள். அதன் காரணமாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு , நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்திலிருந்து தமிழர்கள் பலர் இலங்கை, மலேசியா என்று பல்வேறு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்விதமாகத் தொடர்ந்த தமிழ் மக்களின் புலம்பெயர்தலில் முக்கியமானதொரு நிகழ்வு கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆரமபித்த ஈழத்தமிழரின் பல்வேறு திக்குகளையும் நோக்கிய புலம் பெயர்தல்.